நமது புக் டே இணையதளத்தின் சார்பில் டெல்லியில் விவசாய மசோதாவை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக “விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியங்கள்” கேட்டு சமூக வலைத்தளங்களில் அறைகூவல் விடப்பட்டது…
அதன் அடிப்படியில் [email protected] மெயில் ஐடிக்கு அனுப்பப்பட்ட ஓவியத்தை காண்கிறீர்கள்…
பாலாஜி ஓவியத்திற்கான கவிதை வரிகள்
**************************
தீப்பெட்டிக்குள் சிறைவைக்கப்பட்ட பொன்வண்டு போல
காற்று நுழையாத டப்பாவுக்குள்
ஒரு விதையைப் போல
அடைக்கப்பட்டிருக்கிறான் விவசாயி.
மூலதனத்தின் குறியீடுகள்
ஒரு கதவைப்போல
அறைக்குள் அடைத்துப்
பயமுறுத்தி நிற்கிறது.
அவன் தலைப்பாகையில் ஒட்டப்பட்ட
எழுத்துகள்
தவிர்க்க முடியாத தலையெழுத்தல்ல
அவை
கவிழ்ந்த தலையை நிமிர விடாத
கைதி எண்கள்.
அவன் சிவப்புத் தலைப்பாகையைச்
சிலிர்த்து உதறினால்
சிங்கத்தின் பிடரியென செங்கொடியாகும்!
ஓவியர் விவரம்:
இரா.அஜய் கண்ணன்
தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி
தேவகோட்டை
Leave a Reply