நமது புக் டே இணையதளத்தின் சார்பில் டெல்லியில் விவசாய மசோதாவை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக “விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியங்கள்” கேட்டு சமூக வலைத்தளங்களில் அறைகூவல் விடப்பட்டது…
அதன் அடிப்படியில் www.bookday24@gmail.com மெயில் ஐடிக்கு அனுப்பப்பட்ட ஓவியத்தை காண்கிறீர்கள்…
தேஜா ஓவியத்திற்கான கவிதை வரிகள்
*************************
விவசாயி ஒரு விஸ்வரூபன்
அவன் விரல்நுனியில் சுழல்கிறது
உலக உருண்டை
அவனது வயல் தாளில் எழுதப்பட்டிருக்கும்
மண்புழுக்களின் கவிதைகள்
மரங்களின் காவியம்.
அவனது அழுக்கடைந்த தலைப்பாகைதான்
உலகத்திற்காகத் துடிக்கும்
சிவந்த இதயம்.
அவனது பஞ்சடைந்த கண்கள்
பசியின் சிறகுகள்
அவனுக்கு முன்
உலகில் உள்ள அனைவரும்
எவ்வளவு சிறியவர்களாக இருக்கிறார்கள்!!!
–நா.வே.அருள்
ஓவியர் விவரம்:
மாணவி தேஜா
புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
தேவகோட்டை

