பழைய பஞ்சாங்கம் – 26: பரீட்சைக்கு பேனா இல்லையென்றாலும்  பரவாயில்லை!  – ராமச்சந்திர வைத்தியநாத்

பழைய பஞ்சாங்கம் – 26: பரீட்சைக்கு பேனா இல்லையென்றாலும் பரவாயில்லை! – ராமச்சந்திர வைத்தியநாத்

பரீட்சைக்கு பேனா இல்லையென்றாலும்  பரவாயில்லை!

பழைய பஞ்சாங்கம் – 26

– ராமச்சந்திர வைத்தியநாத்

எந்தத் தேர்வாயினும் சம்பந்தப்பட்டவர்களிடம் அது சற்றே பதட்டத்தைத்தான் ஏற்படுத்தி விடுகிறது. இதுவே துவக்கக் கல்வியாக இருப்பின் தேர்வில் தோற்றோர் இடைநிற்றல் வாய்ப்பும் இருந்து வருகிறது. இது கிட்டத்தட்ட கல்வியை மறுப்பதற்கு சமமாகும். இந்த அடிப்படையில்தான் சின்னஞ்சிறு குழந்தைகளை பள்ளிக் கல்வியின் ஒரு கட்டம் வரை தேர்வுக்குட்படுத்த தேவையில்லை என்பதை அறிவியல் நோக்கில் பொது விதியாக கல்வியாளர்கள் கொண்டிருந்தனர். இதன் பலாபலன் சமூகத்தில் நன்கு வெளிப்பட்டது என்பதை கூறாதிருக்க முடியாது. காலங்காலமாய் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களை கல்வி தலை நிமிரச் செய்தது. அது மட்டுமின்றி கேள்விகளை எழுப்பிடவும் தூண்டுகோலாய் அமைந்தது.

அதே நேரத்தில் இதுவே இத்தகைய முறையை மாற்ற வேண்டும் எனும் சங்கல்பத்தை ஒரு பகுதியினரிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. அதன் அடிப்படையில்தான் புதிய கல்வித் திட்டத்தின் கீழ் 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஒண்ணாங்கிளாஸை ஏன் கஸ்தூரிரங்கன் கவனிக்கவில்லை என்பதை அறிய முடியவில்லை. ஏற்கனவே எட்டாம் வகுப்பிற்கு அறுபதுகளுக்கு முன்னர் பொதுத் தேர்வு இஎஸ்எஸ்எல்சி என்ற பெயரில் நடைபெற்று வந்தது பின்னர் ரத்து செய்யப்பட்டு பள்ளி அளவில் தேர்வு முறையை உருவாக்கிக் கொள்ள அனுமதித்தது. பிந்திய காலங்களில்தான் இவை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

இவை ஒரு பக்கம் இருந்தாலும் தேர்வுக்காலத்தில் குழந்தைகளிடம் இருக்கும் அச்சத்தை தணித்திடும் பொருட்டும், தங்கள் நிறுவனத்தை உயர்ந்ததாக காட்டிக்கொள்ளும் வகையிலும் சில தனியார் பள்ளிகளில் வாரந்தோறும் இன்னும் சொல்லப் போனால் நாள்தோறும் தேர்வுகளை நடத்துவது வழக்கமாகவே இருந்து வருகிறது. நல்ல வேளை இந்த கூத்துகளையெல்லாம் பார்க்காமல் பாவ்லோ ப்ரெய்ரே சென்ற நூற்றாண்டிலேயே போய்ச் சேர்ந்து விட்டார்.

பள்ளிக்கூடப் பரீட்சைகள்தான் இப்படியென்றால் சமீபகாலங்களில் நடைபெறக்கூடிய நீட் தேர்வுகள் அதற்கு மேலாகவே இருந்து வருகிறது. தேர்வுக்கு வருவோரை மிரட்டி உருட்டும் அடியாள் வேலைகள்தான் நடைபெறுகிறதேயொழிய அனுசரணையான நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.

கற்றலை கைவிடத் தூண்டுவதை ஒரே நோக்கமாக கொண்டுள்ள இத்தகைய புதிய கல்விக் கொள்கைக்கும் தேர்வு முறைக்கும் எதிராக இந்தியாவின் பல பகுதிகளிலும் எழுச்சி இருந்து வருகிறது. மாற்று முறைகள் முன் வைக்கப்படுகின்றன. அதே நேரத்தில் கிட்டத்தட்ட எண்பது வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் நியூயார்க் நகரின் ப்ரூக்ளினில் உள்ள ஃபோர்ட் ஹாமில்டன் ஹைஸ்கூலில் பயில்கின்ற மாணாக்கர்கள் தேர்வுகளுக்கு எதிராக ஒரு வித்தியாசமான முறையை துவக்கியிருக்கின்றனர். அவர்கள் எந்த வகுப்பில் பயின்று வருகின்றனர் என்பது செய்தியில் காணப்படவில்லை.

இருந்தாலும் இந்த முறையையும் பரீட்சைகளில் மட்டுமின்றி வேறு தளங்களிலும் நாம் ஏன் பரீசீலனை செய்யக்கூடாது?

 

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *