பழைய பஞ்சாங்கம் (Palaiya Panchangam) - 27: நெருப்பாற்றில் நீந்துவது யார்? | இந்திய அரசியல் வரலாற்றில் கம்யூனிஸ்ட் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகளையும், பிற கட்சிகள் சந்தித்ததாகச் சொல்லிக்கொள்ளும் போராட்டங்களையும் ஒப்பிட்டுப் பேசுகிறது. | www.bookday.in

பழைய பஞ்சாங்கம் – 27: நெருப்பாற்றில் நீந்துவது யார்? – ராமச்சந்திர வைத்தியநாத்

நெருப்பாற்றில் நீந்துவது யார்?

பழைய பஞ்சாங்கம் – 27

– ராமச்சந்திர வைத்தியநாத்

பொதுவாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில்  செயல்படக்கூடிய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும்வரை தாங்கள் நெருப்பாற்றில் நீந்தி வந்ததாக அவ்வப்போது கூறுவதுண்டு.   கடுமையான போராட்டத்திற்கும் அடக்குமுறைக்கும்  இடையில் செயல்பட்டிருப்பதைத்தான் அவர்கள் அவ்வாறு கூறிவருகின்றனர்.  ஆயின் உண்மையில் கடந்த நூறாண்டு இந்திய அரசியல் வரலாற்றைப் பார்க்கையில் இது பெரிய தகிடுதத்தம் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் செயல்படத் துவங்கிய அதே காலத்தில் அல்லது சற்று பிந்தி உருவானதொரு இயக்கம் ராஷ்டிரிய ஸ்வயம் ஸேவக் எனும் ஆர்எஸ்எஸ் ஆகும்.  மக்களிடையே பேதத்தை உருவாக்குவதை ஒரே நோக்கமாக கொண்டு, பல்வேறு மதக் கலவரங்களுக்கும் கோயில் இடிப்புகளுக்கும் பெயர்போனது  அந்த இயக்கம்.  அது பல்வேறு காலகட்டங்களில் குறிப்பாக காந்தியடிகள் கொலைக்குப் பின்னரும், அவசர நிலைக் காலத்திலும் மட்டுமின்றி, வேறு கட்டங்களிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது.  ஆயின் ஒவ்வொரு நிலையிலும் ஆள்வோரின் பாதாரவிந்தங்களில் பூனையாய் படுத்துக் கிடந்து, அரண்டு பிரண்ட பின்னரே அவற்றின் மீதான தடைகள் நீங்கியிருக்கின்றன.

அதுவும் அவசர நிலைக்கு எதிரான போராட்டத்தை தாங்கள் முன்னிருந்து நடத்தியதாக சுயம்சேவக்குகள் மட்டுமின்றி, வேறு பல இந்துத்துவ சக்திகளும் இன்னமும் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கின்றனர்.  உண்மையில் அன்றைய பிரதமருடன் அதன் சர்சங்கசாலக் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்து, கைகோர்த்து செயல்படுவதாக கடிதமே எழுதியிருக்கிறார்.

இவர்கள் தவிர வேறு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கட்சிகள் கடந்த காலங்களில் ஆளும் வர்க்கத்தின் அடக்கு முறைக்கும் ஒடுக்கு முறைக்கும் உள்ளானாலும், மக்களுக்காக தொடர்ந்து போராடிவரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப்போன்று தடைகளையும், கடும் சவால்களையும், சிறைக்கூடங்களையும், தூக்கு மேடைகளையும் சந்தித்தது கிடையாது என்று அறுதியிட்டு கூற முடியும்.

பழைய பஞ்சாங்கம் (Palaiya Panchangam) - 27: நெருப்பாற்றில் நீந்துவது யார்? | இந்திய அரசியல் வரலாற்றில் கம்யூனிஸ்ட் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகளையும், பிற கட்சிகள் சந்தித்ததாகச் சொல்லிக்கொள்ளும் போராட்டங்களையும் ஒப்பிட்டுப் பேசுகிறது. | www.bookday.in

அகில இந்திய அளவில் 1924ல் கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கு,  பின்னர் பெஷாவர் சதி வழக்கு, அடுத்து மீரத் சதி வழக்கு போன்ற கடுமையான வழக்குகளை காலனிய ஆட்சியில் எதிர்கொண்ட கம்யூனிஸ்ட் இயக்கம் சுதந்திரம் பெறும் தருவாயிலும் தடைக்குள்ளாகியிருந்தது.  பல்வேறு தலைவர்கள் சிறைக்கூடங்களில் இருந்தனர்.  அவர்கள் மக்களைச் சந்திக்காமலேயே தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  இதுதவிர எந்த நாளிலுமே எந்த இந்தியப் பத்திரிகைகளும் கம்யூனிஸ்டுகள் பற்றி நேர்மறையாக ஒரு வார்த்தை எழுதியது கிடையாது. இதில் விதிவிலக்கு ஏதுமில்லை. தாங்கள் கொண்டிருக்கும் நிலைபாட்டோடு கம்யூனிஸ்டுகளின் செயல்பாடு ஒத்திருக்கையில் மட்டும் அவர்களை முன்னிருத்துவதுண்டு. இன்றும் இப்போக்கு தொடந்து வருகிறது.

இப்பின்னணில் இச்செய்தியை பார்க்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே பிளவுறாத மதராஸ் மாகாணத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக பல்வேறு சதிவழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.  கட்சி அலுவலகத்தில் இருந்த   டைப்ரைட்டரும் வெள்ளைத்தாளும் சதிக்கு ஆதாரமாக குறிப்பிடப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

கம்யூனிஸ்டுகள் “சுத்திப் போடப்பட்டனர்” என்ற செய்தியின் தலைப்பே பத்திரிகையில் நோக்கத்தையும் பார்வையையும் வெளிப்படுத்துகிறது.  மாகாணமெங்கிலும் மட்டுமின்றி இதர மாகாணங்களிலும் டிராம்வேயில் பணிபுரியுக்கூடிய தொழிலாளி மற்றும் சென்னை கார்ப்பரேஷனின் தூய்மைப்பணியாளர் உள்ளிட்ட  சாதாரண செயற்பாட்டாளர்களும் தொழிற்சங்க தலைவர்களும் கைது செய்யப்பட்டிருப்பதோடு, சொத்தை சொள்ளையான காரணங்களின் பேரில் புத்தகங்களும் அலுவலக உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதையும் இச்செய்தி விரிவாக அளித்துள்ளது.

மக்கள் பிரச்சனைகளுக்காக அவர்களோடு ஒன்றிணைந்து இயக்கங்களை மேற்கொண்டு வரும் கம்யூனிஸ்டுகளை அவர்களிடமிருந்து தனிமைப்படுத்துவதைத்தான் ஆளும் வர்க்கத்தின் /  கட்சியின்  இச்செயல்பாடுகள் நோக்கமாக கொண்டுள்ளன. தேர்தல் அரசியலில் கம்யூனிஸ்டுகளுடன் ஒன்றிணைவோர் இதில் ஒன்றும் விதிவிலக்கல்ல என்பதும் உணரப்பட வேண்டும்.

இது 48 உடன் நின்றுவிடவில்லை. 2026லும் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில்  சகல பகுதிகளிலும் தொடர்ந்து வருகிறது.

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *