பாலஸ்தீனம் : நம்மால் என்ன செய்ய முடியும் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : பாலஸ்தீனம் : நம்மால் என்ன செய்ய முடியும்?
நூலாசிரியர் : இ.பா. சிந்தன்
வெளியீடு : தமுஎகச இணைந்து பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 004 24332424
பாலஸ்தீனம் அங்கே ஒரு மனிதக் கூட்டத்தை இன்னொரு மனிதக் கூட்டம் வேட்டையாடுகிறது உலகத்தில் உள்ள மனிதர்களையெல்லாம் குண்டு போட்டுக் கொன்று விட்டு யூதர்கள் மட்டும் வாழ நினைக்கிறார்களோ என்னவோ சர்வதேச சமுதாயம், ஐ. நா சபை நீதி, நேர்மை எல்லாம், நீர் பட்டால் கரைந்து போகும் மண்ணாங்கட்டிகள் தானோ இலங்கையில் இனப்படுகொலை நடக்கவே இல்லை. இஸ்ரேலில் சியோனிசம் செய்வதெல்லாம் மனிதநேயத் தொண்டு தானே?
உலகத்தில் விற்பனையாகும் ஆயுதங்களில் 40% ஆயுதத்தை இஸ்ரேல் தான் விற்கிறது வாங்கும் நாடும் விற்கும் நாடும் மனித நேயத்தையா பேணுகிறது?
ஒரு நாடு என்றால் அதற்கு எல்லை இருக்க வேண்டும் அல்லவா? இஸ்ரேல் என்ற நாட்டுக்கு மட்டும் இன்னும் எல்லையே இல்லை, அதன் ஆசைகளுக்கும் எல்லையே இல்லை. நாட்டை பிடித்துக் கொண்டார்கள் எல்லையை வகுக்க வில்லை காரணம். எல்லையை இன்னும் விரிவு படுத்திச் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் தான். 70 ஆண்டுகளாக எல்லையை விரித்துக் கொண்டே தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.
காசா பாலஸ்தீனர்கள் மேற்கு கரை பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய பாலஸ்தீனர்கள் அகதி பாலஸ்தீனர்கள்.
பாலஸ்தீனர்களை நான்கு வகையாகப் பிரித்ததோடு பிரச்சனைகளையும் நான்கு விதமாகப் பிரித்துத் தருகிறார்கள் ஒருவர் அனுபவிக்கும் பிரச்சனை இன்னொருவருக்கு இல்லை.
சித்திரவதைகள் கூட ஒன்று போல் இருப்பதில்லை எந்த வகையிலும் ஒன்று சேர விடுவதில்லை. ஒவ்வொரு வகையில் இருக்கும் என்ன வகையான சித்திரவதைகள் என்பதை நூல் வாங்கி படித்துத் தெரிந்து
கொள்ளலாம்.
பாதுகாப்புச் சுவர் சோதனைச் சாவடிகள் சட்ட விரோத யூதக் குடியிருப்புகள் நிலங்கள் ஆக்கிரமிப்பு
வளங்கள் ஆக்கிரமிப்பு பொருளாதாரக் கட்டுப்பாடு ராணுவ ஆக்கிரமிப்பு நீர் கட்டுப்பாடு விவசாயச் சுரண்டல் தொழிற் சுரண்டல் எத்தனை சுரண்டகளோடு பாலத்தீனர்கள் குடியிருக்கும் குடியிருப்புப் பகுதிக்குள். மிகக் கொடூரமான யூதத் தீவிரவாதிகள் ஆயிரம் பேரை, சகல வித ஆயுதங்களோடு குடி அமர்த்துவது. அந்த ஆயிரம் பேருக்கும் பாதுகாப்பு என்று ராணுவத்தைக் கொண்டு வந்து நிறுத்துவது.
எத்தனை துன்பங்கள் அய்யோ படிக்கப் படிக்க நெஞ்சு பதறுகிறது.
உலக நாடுகள், ஐ. நா சபை, எத்தனையோ பெரிய தலைவர்கள், போராளிகள் எல்லாம் இருந்தும்
யாரும் தட்டிக் கேட்காத போது நாம் என்ன செய்ய முடியும். என்றுதான் தோன்றுகிறது.
பாலஸ்தீனர்கள் அனுபவிக்கும் பல கொடுமைகளை, யூதர்கள் புரியும் கொடும் செயல்களை எல்லாம் வரி வரியாக எடுத்து இயம்புகிறது.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மீதெல்லாம் கல்லெறிவது பெரும் கொடுமை. அதைவிட பெரும் கொடுமை
கல்விச்சாலைகளே இரண்டு விதமாக செயல்படுவது. யூதக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் பாலஸ்தீன குழந்தைகளை படிக்க விடுவதில்லை. ஆள்பவனுக்கு ஒரு பள்ளி அடிமைகளுக்கு ஒரு பள்ளி என்பதைப் போல,
வீடுகளின் மீது கல் எறிவதும் வீதிகளுக்கு நடுவே சுவர் எழுப்புவதும் பாலஸ்தீனர்கள் குடியிருக்கும் பகுதியில்
யூத ராணுவத்தினரை குடியமர்த்துவதும். இதுதான் கொடுமை என்றால்
அந்தக் கொடூர அரக்கர்களிடம் இருந்து இந்தியா ஆயுதம் வாங்குவது கொடுமையிலும் கொடுமை. அதனிலும் கொடுமை என்ன தெரியுமா?
உலக ஊடகங்கள் அனைத்தும் நவ துவாரங்களை மூடிக் கொண்டிருப்பதும் தனது மக்களுக்காகப் போராடும்
ஹமாஸ் என்ற அமைப்பை பயங்கரவாத அமைப்பாக சித்தரிப்பதையும்.
கண்ணீரோடு விவரிக்கிறது இந்த நூல். பாலஸ்தீனம் நம்மால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியை முன் வைக்கும்
இந்த நூல், கேள்வி கேட்பதோடு பதிலும் சொல்கிறது.
பதில் சொல்வதோடு நமக்குள் ஏராளமான கேள்விகளையும் எழுப்புகிறது.
யூதர்கள் யார்?
ஏன் அவர்களுக்கென்று ஒரு நாடு இல்லாமல் போனது?
ஹிட்லர் தனது நாட்டுக்குள் யூதர்களே இருக்கக் கூடாது என ஏன் நினைத்தார். பல லட்சம் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள், யூதர்கள் மீது ஹிட்லருக்கு அப்படியென்ன பகை?
உலகில் பல நாடுகள் இருக்க யூதர்கள் ஏன் பாலஸ்தீனத்தை குறி வைத்தார்கள்?
பாலஸ்தீனத்திற்கும் யூதர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இல்லையா? இது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்க விடை, இந்த நூலில் போதுமானதாய் இல்லை. ஆனால் கேள்விகளை மனதில் விதைக்கிறது.
யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை கற்பனை செய்தார்கள், எறும்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து எச்சில் துப்பியே ஒரு கடலை உருவாக்க நினைத்தது போல். அதுவும் அது, வேறொரு மக்கள் வாழுகிற நாடு, நம்ம ஊரில் சொல்வார்களே ஆண்டிகளெல்லாம் ஒன்று சேர்ந்து மடம் கட்டிய கதையென்று. ஆனால், அப்படி கதையாய் கற்பனையாய் வெறும் வெட்டிப் பேச்சாய்ப் போய் விடவில்லை,
எறும்புகள் நடந்து இமையத்தைத் தரையாக்கியது போல் எறும்புகள் எச்சி துப்பி ஒரு கடலை உருவாக்கியது போல்
இஸ்ரேல் என்ற ஒரு நூற்றாண்டுக் கனவை எட்டிப் பிடித்து விட்டார்கள்.
நம்பவே முடியாத ஒன்றை நடத்திக் காட்டி விட்டார்கள்.ஆனால், அவர்களுக்கான ஒரு நாட்டை உருவாக்கியது
வெற்று நிலத்தில் அல்ல வேறொரு மக்கள் பெருங்கூட்டமாய் வாழ்ந்து கொண்டிருந்த நிலத்தில்.
அதாவது, மனைவி மக்கள் பேரன் பேத்தி என்று சேர்ந்து வாழ்ந்த ஒரு குடும்பத்துக்குள். தாகம் என்று தண்ணீ கேட்டு வருகிறான் யூதன். தண்ணீர் வாங்கி குடித்த யூதன் தண்ணீரோடு போகவில்லை திருமணமாகி பல பிள்ளைகளைப் பெற்ற அந்தக் கிழவியை திருமணம் செய்து கொண்டு கிழவியை வைத்துக்கொண்டு பிள்ளைகளைப் பூராம் தெருவில் விட்டு விட்டான்.
யூதர்கள் மிகப் பயங்கரமானவர்களாய் இருக்கிறார்கள். தொழில்நுட்பத்தில் மிக ராட்சசத் தனமாய் வளர்ந்து விட்டார்கள். பாலஸ்தீனம் என்ற ஒரு நாட்டுக்குள் புகுந்து. அந்த நாட்டை அவர்கள் சொந்தமாக்கி கொண்டு இஸ்ரேல் என்று பெயர் வைத்துக் கொண்ட கதையை படித்தாலே போதும். யூதர்களை புரிந்து கொள்ள. யூதர்கள் உலக நாட்டுக்கே அபாயகரமானவர்கள் என்பதால் தான் ஹிட்லர் அவர்களை அழிக்க நினைத்தானோ என்னவோ?
அவர்கள் வளர்வதால் என்ன வளர்ந்து விட்டதால் நமக்கென்ன பிரச்சனை? நமக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்கள் பாலஸ்தீனத்தோடு நிற்பார்களா? என்பதே கேள்விதான்.
நண்பர்களே தோழர்களே வாங்கி படியுங்கள் அல்லது தேடி படியுங்கள்.
நூலின் தகவல்கள் :
எழுத்தாளர். பொன் விக்ரம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமை