நூல் அறிமுகம்: பழையன கழிதலும் – கருணா மூர்த்திநூல்: பழையன கழிதலும்
ஆசிரியர்: சிவகாமி IAS 
வெளியீடு: அடையாளம் பதிப்பகம்
விலை: ரூபாய் 175
முதல் பதிப்பு: 2017
மொத்த பக்கங்கள்: 303

இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்த உடனேயே எனக்கு எனது கிராமத்து பழைய நினைவுகள் வலம் வர ஆரம்பித்துவிட்டன. ஒலாகாசி என் ஊர்.பக்கத்து ஊரில் உள்ள சித்தாதூரில் தான் அவர் வசித்தார். குடியாத்தம் அரசினர் திருமகள் கலைக் கல்லூரியில் படிக்கும் பொழுது புதுமுக வகுப்பில் நானும் பிஏ வகுப்பில் இரண்டாம் ஆண்டில் அவரும் இருந்தார். 1974இல் நான் பணி அமர்ந்த முதலில் சோவியத் புத்தக கண்காட்சி நிகழ்ச்சியில் உரையாற்ற அழைத்திருந்தார்கள். அப்போது அவரும் வந்திருந்தார் .அவர் இன்று இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய கட்சியின் *ராஜாவாக * திகழ்ந்து கொண்டிருப்பதை நினைத்து குறித்து புளங்காகிதம் அடைகிறேன் .அன்றைய நிகழ்வுக்குப் பிறகு நான் அவரது பேச்சாற்றலை கண்ட பிறகு நான் வெளியெங்கும் பேசுவதை நிறுத்திக் கொண்டு விட்டேன்.

ஏனோ இதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஓ அதுதான் பழையன கழிதலும் போல. சிவகாமி அவர்கள் இந்திய ஆட்சிப் பணியில் தேர்வு பெற்று மாவட்ட ஆட்சியராக பணியாற்றி திறம்பட சுயநலமின்றி பொதுமக்கள் நலன் கருதி பணியாற்றியவர் .சில பல காரணங்களுக்காக பணியை விருப்ப ஓய்வில் உதறிவிட்டு வந்தவர். நாட்டு மக்கள் நலனுக்காக கட்சி ஆரம்பித்து நடத்தி வருகின்றார் பெருந்தன்மை மிக்கவர்.

1986இல் பழையன கழிதலும் என்ற என் முதல் நாவலை எழுதினேன். எழுதினேன் என்பதற்கும் ஏன் எழுத வேண்டும் என்பதற்காக இந்த முன்னுரையை உங்கள் முன் வைக்கிறேன். பத்து வருடம் கழித்து அதன் மீது எழுந்த விமர்சனங்கள் கருத்துக்களை உள்வாங்கி இன்று எனது மேற்பார்வையில் முயற்சியாகவே பழையன கழிதல் ஆசிரியை குறித்த ,இந்த நாவல் என்கிறார் சிவகாமி அவர்கள். நாவல் என்று எதை எண்ணியிருந்தேன். வாழ்க்கையை கழிக்க வேண்டியது எனது கட்டாயம் என்ன வாசகரையும் பிரச்சினைகளுக்கு தீர்வு என்பதையும் மனதில் கொண்டு நாவல் எழுதினேன். நாவலின் கதாபாத்திரங்களுக்கும் அவற்றின் சாயலில் நான் கண்ட மனிதர்களுக்கும் உள்ள உறவு அதை திரித்து அது கற்பனையாக நிகழ்ச்சிகளை சேர்க்க வேண்டிய நிர்பந்தம் என்ன என்ற கேள்விக்கு ஆகவே இந்த நாவல் அமைந்திருக்கிறது.

நான் வாழ்ந்த சமூகத்தை கலா- கதை பூர்வமாக படம்பிடித்து த,லித் மக்கள் முன்னேற வேண்டும் என்ற எனது ஆசையை வெளிப்படுத்தும் முயற்சியாக பழையன கழிதலும் என்ற நாவல் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். குறித்து என்னும் நாவலும் ஆகிய நான் ஜாதி ஒழிப்பிற்கான போராட்டத்தில் என்னை இணைத்துக் கொண்டு சிந்தனைத் தளத்தில் மட்டுமல்லாது அரசியல் ரீதியாக தலித்துகள் பலம் பெறுவதற்கு என் சிந்தனையையும் செயலையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக இருப்பதைப் பார்க்கிறேன்,என்று தனது முன்னுரையில் கூறியிருக்கிறார் சிவகாமி அவர்கள்.

தமிழின் முதல் நாவல் தமிழ் இலக்கியங்களில் இலை மறை காய் மறையாக பேசப்பட்ட விஷயங்களை ஜாதிய அரசியலில் அன்றாட உரையாடல் ஆக்கி,ஜாதி ஒழிப்புக்கு முனைப்பு கூட்டிய படைப்பு இது. எண்பதுகளில் தமிழ் சமூகத்தில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்திய நாவலும் கூட. சிவகாமி தொடங்கி வைத்த இந்தப் போக்கே தலித் தலைவர்கள் தொடர்ந்து எழுதப்படுவதற்கு பெரும் உந்து சக்தியாக இருந்துவருகிறது .தலித் மக்களின் போராட்டங்களையும் அவர்களுடைய தலைமை வீரியம் மிக்கதாக இருக்க வேண்டியதையும் மக்கள் மொழியில் படைத்திருக்கிறார் இந்த நாவல் ஆசிரியர் சிவகாமி அவர்கள் .

நாவலில் கௌரி பிறந்து வளர்ந்த கதையை சொல்கிறது. காளிமுத்து பெரியப்பா முதலான கதாபாத்திரங்களோடு கௌரி தான் சிவகாமி ,சிவகாமி தான் கௌரி என்கிற அளவில் புரிந்து கொள்ளத்தக்க அளவிலேயே நாவல் படைக்கப்பட்டிருக்கிறது. உடையார் தங்கத்தை வைத்துக்கொண்டிருந்தார் ,தங்கத்தை பலாத்காரம் செய்தார் என்பது சொந்த வாழ்வில் பெரியம்மா ரெட்டியாரை வைத்திருந்தாள் என்பதை ஒத்துப்போவதாக ஆசிரியர் சொல்லியிருக்கிறார். பைத்தியக்கார பிள்ளையும் அம்மாவும் என்று கதை பண்ணியிருக்கலாம். ஊர் ஜாதி சச்சரவு என்று எழுதிக் கொண்டு போக தூண்டியது எது ?புலியூர் சேரியில் ஆண்களும் பெண்களும் நடவு வேலைக்கு போகக்கூடாது என்று முடிவெடுத்ததும் மேல்ஜாதி ஆட்களை கொண்டு வர முயற்சி செய்ததும் ,தடுக்கப்பட்ட தும், உயிரில் எரித்ததும் எரிந்தது மாநில கட்சிகளை நாவலாசிரியர் எழுதுவது என்ன தொடர்பு, எது உந்து சக்தி என்று அலசுகிறார் ஆசிரியர்.

மற்றவர்கள் குடிப்பதை குறை சொல்லும் தந்தையை காணும் மகள், தந்தை குடிப்பதையும் கண்டிக்கிறார், கண்டிக்கவில்லை சொல்லி காட்டினால் அதற்கு தந்தை வானுக்கும் பூமிக்குமாக குதிக்கிறார் .குதித்து செருப்பால அடிப்பேன் என்று மகளையே திட்டுகிறார். அப்பாவுக்கு பல சித்திகள் வருகிறார்கள்; சித்தி பிள்ளைகளும் வருகிறார்கள். சிறுவயதில் ஏற்பட்ட அனுபவங்களை மனதில் வைத்துக்கொண்டு நடுநிலையற்ற சித்தரிப்பில் மேல் சாதியினருக்கு சிம்மசொப்பனமாக இருந்த காத்தமுத்து என்ற கதாபாத்திரத்தை சிதைத்து இருப்பது குறித்தும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். பழையன கழிதலும் நாவலின் ஆசிரியை தனது தந்தையை ஒத்த பாத்திரங்களைப் படைத்து நாவல் என்ற பெயரில் அவரை கொடும்பாவி எரித்து இருந்தாள் என்று சொல்ல வேண்டும் . முழு உண்மை என்று எதுவும் இல்லை என்றும் எல்லாம் சம்பந்தப்பட்டவரின் அணுகுமுறை மட்டுமே என்பதை ஆதாரங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும் என்று தோன்றியது அவருக்கு.மேல் ஜாதிக்காரர்கள் தான் கீழ் ஜாதிக்காரர்களைச் சுரண்டுகிறார்கள் என்பதில்லை. கீழ் ஜாதியை சேர்ந்த சமுதாய தலைவன் தன் ஜாதி மக்களை சுரண்ட முடியும் .மேல் ஜாதிக்காரர்கள் தான் கீழ் ஜாதிப் பெண்களை பலவந்தப் படுத்துகிறார்கள் என்பதில்லை. காத்தமுத்து போன்றவர்கள் தனது சமுதாயத்திலேயே நலிந்த பெண்களை பலவந்தப் படுத்த முடியும் . எனவே மேல் ஜாதி கீழ் ஜாதி என்று எதுவும் இல்லை .வலிமை உள்ளவர்கள் மற்றவர்களை ஏய்த்துப் பிழைக்கின்றார்கள் என்ற பிம்பம் தானே வெளிப்பட்டு இருக்கிறது என்கிறார் ஆசிரியர்.

கிராமப்புறங்களில் ஜாதி கட்டுமானங்கள் எப்படி வலுப்பெற்றன. இதை உடைத்து எறிய சமரசமற்ற தன்னோடு பிற ஒடுக்கப்பட்ட பிற்பட்ட இனங்களை இணைத்து போராடுகிற தலைமையை உருவாக்க வேண்டும் என்பதுதான் அந்த நாவலின் ஆன்மா என்கிறார் ஆசிரியர். காரல் மார்க்ஸ் சொல்லுகிறார் பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள் என்று .பாட்டாளி மக்கள் இங்கு பெரும்பான்மை வன்னியரும் தலித்துகளும் தான் .ஆக இந்த இருவரையும் ஒன்று இணைத்துவிட்டால் புரட்சி பக்கமும் வெடித்துவிடும் ;நாடு தலைகீழாகி விடும் என்று நினைக்கின்ற ஆசிரியர் சந்திரன் என்ற நேர்மையான, சத்தியம் அதிகமுள்ள ஒழுக்கமுள்ள தலித் இளைஞன் தலைமையில் இந்த வன்னியரும் தலித்தும் அணிதிரள எழுதி இருக்கிறார்.

மது பழக்கம் குறித்தும் ஆசிரியர் கோடிட்டு காட்டுகிறார். ஆதிகால மனிதனுக்கு மதுவின் மீதுள்ள தாகம் ஏன் வளர்ந்து வர வேண்டும். சமூக மதிப்பீடுகளை அழிவுக்கு உள்ளாக்கப் கிளர்ச்சியை விரும்புகிற வெளிப்படுத்துகிற செயல்பாடாக இருக்கிறது அது. மதுவின் கிளர்ச்சிக்கு பழகிப்போன புத்தியும் உடலும் மீண்டும் மீண்டும் அதன் தேவையை வலியுறுத்துகிறதா?

மது இன்றி அத்தகைய கிளர்ச்சியை எப்படி இருத்திக் கொள்வது என்று ஆசிரியர் கேள்வி கேட்கிறார்.

பன்றி கறி குறித்த ஆசிரியரின் பார்வையை படிக்கும் பொழுது எனக்கு சாரு நிவேதிதா அவரின் எழுத்தும், ஹவாய்தீவு சுற்றுப்பயணம் சென்ற பொழுது ஒரு மாலைப் பொழுது களியாட்டத்தில் கலந்து கொண்ட நிகழ்வும் அங்கு பன்றி இறைச்சி முடி முதல் அடி வரை சமைத்து பரிமாறப்பட்ட நிகழ்வும் , நினைவு வந்தது.(இது குறித்து முகநூலில் தனியே ஒரு பதிவு செய்ய வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளாக விரும்புகிறேன். இன்னும் முடிந்தபாடில்லை) “*வர்ற வழியில் சகுனம் சரியில்லை. பசுவை காளைஏறின போது கன்று குட்டி பசுவின் மடியை முட்டிச்சாம்.அதே சமயத்தில் அம்மாக்கும் காணாமல் போன தனது மகன் ஞாபகம் வந்துச்சாம். என்ன அற்புதமான வார்த்தை பிரயோகங்கள்*.

இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் .

மின்னும் பொன் உருவாய் எழுத்துக்கள்

மன்னுகின்றன , மின்னுகின்றன. என்னளவில் இளம் எழுத்தாளர்கள் எல்லோரும் பத்திரப்படுத்தி படிக்கப்பட வேண்டிய நூல் வரிசையில் இதையும் வைத்துக்கொள்ளலாம்.