நூல் அறிமுகம்: இ.பா.சிந்தனின் “பாலஸ்தீனம்-வரலாறும் சினிமாவும்..” – எஸ்.குமரவேல் (இந்திய மாணவர் சங்கம்)உலகம் முழுவதும் பல்வேறு இன்னல்களையும் புறக்கணிப்புகளையும் கடந்துவந்த யூதர்கள் தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற லட்சியம்தின்பால் உருவான நாடுதான் இஸ்ரேல், அதற்காக அவர்கள் நடத்திய மாபெரும் இனவழிப்பு இன்றளவும் நடத்திக்கொண்டிருக்கும் நரவேட்டை ஆக்கிரமிப்பு குறித்தும் உண்மையாகவே இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் உள்ள பிரச்சனையை என்ன, அதற்கான தீர்வுதான் என்ன என நமக்கு விரிவாக கொடுக்கிறது தோழர் E.Pசிந்தன் அவர்கள் எழுதிய பாலஸ்தீனம்- வரலாறும் சினிமாவும் என்ற புத்தகம்..

பல்வேறு ஆக்கிரமிப்புகளை கடந்து வந்த பாலஸ்தீனம் அரபு நாடுகளில் மிக முக்கியமானதாக இருக்கிறது எண்ணெய் வளம் பெரிதும் இல்லையென்றாலும் ஆப்பிரிக்கா ஐரோப்பா ஆசியா ஆகிய மூன்று கண்டங்கள் உடனும் தன்னுடைய எல்லைகளை பங்குபோட்டுகொண்டு இருக்கிறது திராட்சை ஆரஞ்சு பழங்கள் என செழிப்பான விவசாயம் ஒருபுறம் அங்கு இருக்கிறது, கூடவே மாதா கோவிலும் யூத வழிபாட்டுத் தலமும் மசூதியும் ஒருங்கே அமைந்த உலகின் மதங்களின் புனித தலமாக கருதப்படும் ஜெருசெலத்தையும் உள்ளடக்கியிருக்கிறது..

முதலாம் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் வந்த பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான தனி தேசம் அமைக்கப்படும் என்று பிரிட்டன் யூத தேசத்தை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் யூத அடிப்படைவாத குழுவான சியோனிஸ அமைப்பிற்கு உறுதியளித்தது,பின்னர் 1936இல் பாலஸ்தீனத்தில் ராணுவ ஜெனரலாக பிரிட்டனால் நியமிக்கப்பட்ட வின்கேட்ஸ் யூதர்களுக்கான தனிநாட்டை பாலசுதேநாத்திற்குள் அமைப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் சட்டபூர்வமாக பிரிட்டன் உதவியைக் கொண்டு செயல்படுத்தினார், உலகமெங்கும் இருக்கும் யூதர்களிடம் பாலஸ்தீனம் யூதர்களுக்காக இறைவன் அருளிய நாடு எனவும் பாலஸ்தீனத்தில் யூதர்கள் தனிநாடு அமைப்பதே கடவுளுக்குச் செய்யும் தொண்டு எனவும் உலகம் முழுவதும் உள்ள யூதர்களின் மத்தியில் சியோனிசவாதிகளால் பரப்புரை செய்யப்பட்டது மத அடிப்பைவாதிகளின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட யூதர்கள் உலகமெங்கும் இருந்து பாலஸ்தீனத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர் , பாலஸ்தீனம் என்ற ஒரு நாடு பிரிக்கப்பட்டு இஸ்ரேல் உருவாக போகிறது என யூதர்களுக்கு தெரிவதற்கு முன்னால் அவர்கள் குடியேற விரும்பிய நாடாக அமெரிக்கா தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரோத்திசைட் என்ற பெரும் பணக்காரன் மூலம் 50 ஏக்கர் நிலத்தை பாலஸ்தீனத்தில் குறைந்த விலைக்கு வாங்கி அங்கு வாழ்ந்துவந்த பாலஸ்தீன மக்களை அடித்து விரட்டினர் பின்னர் இவ்வாறு வாங்கப்படும் இடங்களில் யூதர்கள் குடியமர்த்தப்பட்டனர்,யூதர்களுக்கு அங்கு நிலம் வாங்குவதில் தாராள சலுகைகளும் வழங்கப்பட்டது,

பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும் Palathenam Varalarum Cinemavum
பிரிட்டனின் ராணுவத்தில் பயிற்சி பெற்ற யூத தீவிரவாத அமைப்பான ஹகன்னா (பின்னாளில் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட பின்னர் இது இஸ்ரேல் ராணுவமாக செயல்பட்டது) சட்டவிரோதமாக குடியிருப்புகளை பிரிட்டன் உதவியுடன் பாலஸ்தீனத்தில் ஏற்படுத்தியது,

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிரிட்டன் தன் காலனி நாடுகளை இழக்கவே அமெரிக்கா உலகில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக வளர்ந்து இருந்தது அந்த நிலையில் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர் யூதர்கள் அமெரிக்காவின் விசுவாசிகளாக மாறினார்.30 ஆண்டுகளாக பாலஸ்தீனத்தை ஆண்டு பிரிட்டன் அமெரிக்காவின் தலையீட்டுக்கு பின்னால் பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேறும் முடிவுக்கு வந்தது, 1947இல் ஐநா சபையால் பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து அங்கு யூதர்களுக்கு தனிநாடு அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதனடிப்படையில் வெறும் 5.5% யூதர்கள் மட்டுமே வாழும் பாலஸ்தீனத்தில் 50 சதவீத நிலப்பகுதியை இஸ்ரேல் எனும் தனி நாடு அமைக்கவும் ஜெருசேலம் உள்ளிட்ட பகுதிகளை பிரிட்டன் கட்டுப்பாட்டில் வைப்பது எனவும் மற்ற பகுதிகளில் பாலஸ்தீனம் அமைப்பது எனவும் தீர்மானம் போடப்பட்ட நிலையில் 1948 மே மாதத்தில் இஸ்ரேல் என்கிற ஒரு தேசம் பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்களை கொன்று குவித்து இரண்டாகப் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது, இவை அனைத்தும் நடைபெறும் போது தங்கள் நாடு இரண்டாக மூன்றாக உடையபோகிறது என்பது கூட பாலஸ்தீன மக்களுக்கு தெரியாது என்பது வேதனையின் உச்சம் .

ஒரு வருட காலத்தில் அவர்களிடம் கருத்து கேட்கவில்லை என்று குறிப்பிடத்தக்க என்ன நடக்கிறது என்பதை யூகிக்க கூட முடியாத அப்பாவி மக்களாக பாலஸ்தீனர்கள் இருந்தார்கள்,

ஐநா ஒப்பந்தம் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட ஓராண்டுக்குள் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் 78 சதவீத பகுதிகளை சட்டவிரோதமாக கைப்பற்றியிருந்தது ஐநா சபையின் தீர்மானத்தை முற்றிலும் மதிக்காத இஸ்ரேலை எதிர்த்து எகிப்து சிரியா ஜோர்டான் போன்ற அரபு நாடுகளில் மீண்டும் பழைய பாலஸ்தீனத்தில் அமைக்கும் நோக்கில் 1967 நடத்திய ஆறு நாள் போரில் அமெரிக்காவின் அதிநவீன ஆயுதங்களை கொண்டு அரபு நாடுகள் தோற்கடிக்கப்பட்டது,அந்த போருக்கு பின்னர்தான் இஸ்ரேல் எவ்வளவு சக்தி வாய்ந்த ராணுவத்தை கொண்டுள்ளது என்பதையும் எவ்வளவு ஆபத்தானது என்பதையும் உலகம் உணரத்தொடங்கியது, தற்போது பெரும்பாலான பாலஸ்தீனத்தை முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டில் இஸ்ரேல் வைத்துள்ளது,

பாலஸ்தீனம் Archives - மாற்று
1948 -49 காலத்தில் மட்டுமே ஏறத்தாழ எட்டு லட்சம் பாலஸ்தீனர்கள் சொந்த நாட்டைவிட்டு வெளியேற்றபட்டனர் 540க்கும் மேற்பட்ட கிராமங்கள் தரைமட்டமாக்கபட்டு அவை சட்டவிரோத யூதர்களின் குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளன 50 சதவீதத்திற்கு போராடிய பாலஸ்தீனர்கள் தற்போது 22 சதவீத நிலத்திற்காக போராடிகொண்டிருக்கிறார்கள் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் என்றாவது ஒருநாள் மீண்டும் வீடு திரும்ப மாட்டோமா??? என்கிற எண்ணத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், தலைமுறைகளும் அவர்கள் கடந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…

70 ஆண்டுகாலமாக இஸ்ரேலியர்களால் அழிக்கப்பட்ட தங்களுடைய நிலத்தை, கல்வியை, பண்பாட்டு வரலாற்று மீட்பதற்கான பாலஸ்தீனர்களின் போராட்டம் எண்ணிலடங்கா துயரங்களையும் ரணமிகு வடுக்களையும் சுமந்துகொண்டு பயணிக்கிறது,
ஏன் தாக்கப்படுகிறோம் நம் உடைமகள் ஏன் பறிக்கப்படுகின்றன ஏன் நாம் சொந்த நாட்டில் அகதிகளாக இருக்கிறோம்,சொந்த நிலத்திலேயே அடிமையாக வேலை செய்யும் சூழல் எப்படி உருவானது,எப்படி சொந்த நாட்டிலே பிச்சைக்காரர்களாக அழைகிறோம் என யோசிப்பதற்கு கூட அவகாசம் இல்லாத நிலையில் பாலஸ்தீனர்கள் இருந்தார்கள்.

138 நாடுகள் ஐநா சபையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்த போதிலும் ஏன் இன்றும் சுதந்திர பாலஸ்தீனம் அமையவில்லை சர்வதேச நீதிமன்றங்களில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்புகள் என்ன ஆனது? பாலஸ்தீன மக்களின் எழுச்சி மிகு முதலாம் மற்றும் இரண்டாம் பாலஸ்தீன மக்கள் எழுச்சி எவ்வாறு சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது? பாலஸ்தீனத்தில் ஏராளமான கிருத்துவர்கள் இருந்தபோதிலும் அதை ஒரு இஸ்லாமிய நாடாக இஸ்ரேல் பொதுவெளியில் கட்டமைக்க திணிப்பதன் நோக்கம் என்ன? பாலஸ்தீனர்களின் இலக்கியமும் பண்பாடும் என்னவானது பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் அங்குள்ள இடதுசாரிகளின் பங்கு என்ன போன்ற போன்ற பல்வேறு கேள்விகளுக்கு புத்தகம் விரிவான விடை அளிக்கிறது…
பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் ஒரு மத அடிப்படைவாத அமைப்பாக இருந்த போதிலும் ஏன் உலக ஜனநாயக சக்திகள் அதற்கு ஆதரவு தரவேண்டும் என நூலாசிரியர் ஒரு இடதுசாரி சிந்தனையாளரின் பார்வையிலிருந்து இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைகளை அணுகியுள்ளார்.

படு மாடுகள் போராளிகளான பீத் கிராமத்து போராட்ட வடிவத்தையும், பித்ருஸ் கிராமத்தில் பெண்களின் ஆக்கிரமிப்பு சுவருக்கு எதிரான போராட்டத்தையும் நாம் தலைமுறைக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியது, இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச புறக்கணிப்பை(PDS) இயக்கத்தின் பங்கு அளப்பரியது.

ஒவ்வொரு முறை பாலஸ்தீனத்திற்கு நாடு அமைப்பது தொடர்பான தீர்மானம் ஐநா சபையில் வரும்போதெல்லாம் இந்த 70 ஆண்டு காலமாக அமெரிக்கா தொடர்ந்து தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்துக்கொண்டே வருகிறது,இஸ்ரேலின் இனவழிப்புக்கு அமேரிக்கா உற்ற பங்குதாரராக இப்போதும் இருந்து வருகிறது, 147 திரைப்படங்களை துணைக்கு வைத்துக்கொண்டு தோழர் சிந்தன் அவர்கள் எழுதிய இந்தநூல் முக்கியமான வரலாற்று நூலாக இருக்கும் என நம்புகிறேன்,வரலாற்று நிகழ்வுகள் என்பதால் முடிந்தளவுக்கு எளிமையாக சொல்ல முனைப்போடு செயல்பட்டிருக்கிறார் தோழருக்கு அன்பும் நன்றியும்..

பாலஸ்தீனர்களின் இந்த 70 ஆண்டுகால போராட்டத்தில் அவர்கள் பெற்றதைக் காட்டிலும் இழந்ததுதான் அதிகத்திலும் அதிகம், அமெரிக்காவின் நச்சு குஸ்கந்தையான இஸ்ரேல் பாஸ்பரஸ் குண்டுகளை வீசும் பொழுது அதை எதிர்த்து போராட பாலஸ்தீனர்கள் கையில் வெறும் கற்களே மிஞ்சியிருந்தன அந்த கற்களும் இஸ்ரேல் தீவிரவாதிகளால் உடைக்கப்பட்ட பாலஸ்தீனர்களின் வீடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை, ஒருவரின் வரலாற்றை அழிப்பது என்பது ஒரு மனிதனை கொள்வதற்கு சமம் எனில் பாலஸ்தீனம் என்ற நாட்டின் ஒட்டுமொத்த வரலாற்றையும் இஸ்ரேல் அழித்திருக்கிறது.

பாலஸ்தீனம்: வரலாறும் சினிமாவும் | Buy Tamil & English Books Online | CommonFolks

விடுதலைக்கான போராட்டத்தில் பாலஸ்தீன இளைஞர்கள் குழந்தைகள் பெண்கள் என நாள்தோறும் அன்று துவங்கி இன்றுவரை இறந்து கொண்டே இருக்கிறார்கள் ஆனால் அந்த உயிர்கள் இழப்புகள் எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் அவர்களின் அடையாளத்தை நிலத்தை மரத்தைப் பாபித்துகக்கத்தான் போராடிக்கொண்டிருக்கிறார்கள்,புத்தகங்களை சமைக்க வேண்டிய குழந்தைகள் இன்று குளுக்கோஸ் பாட்டிலோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்,குண்டு சத்தமும் வெடிசத்தமும் அலாரம் ஆகி பழகிவிட்ட நிலையில் அவர்களின் உரிமைக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது,

தான் செய்த அத்தனை அட்டூழியங்களையும் மதத்தின் பெயராலேயே செய்த இஸ்ரேல் பாலஸ்தீனர்களின் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்தாதவரை இரு நாட்டுக்கும் அமைதி நிவப்போவதில்லை என்ற மார்வன் பர்கோர்த்தியின் வார்த்தைக்கு உயிரூட்டாமல் பாலஸ்தீனர்களை காப்பாற்ற முடியாது. பாலஸ்தீன குழந்தைகள் வெடி சத்தம் இல்லாத அமைதி வாழ்க்கை கிடைக்காது. எனவே பாலஸ்தினார்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டியது உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஜனநாயக சக்திகள் கடமை என்பதை புத்தகம் ஆழமாகப் பதிவு செய்கிறது.

பாலஸ்தீனம்(வரலாறும் சினிமாவும்)- இஸ்ரேலின் உண்மையான எஜமானர்களின் கதை…..

பாலஸ்தீனம்-வரலாறும் சினிமாவும்..
நூல் ஆசிரியர்: இ.பா.சிந்தன்
பக்கங்கள்: 191

 

தோழமையுடன்
எஸ்.குமரவேல்
மாநில செயற்குழு
இந்திய மாணவர் சங்கம்…