நூல் அறிமுகம்: தெலுங்கு தேவதைகள் – சுப்ரபாரதிமணியன்

நூல் அறிமுகம்: தெலுங்கு தேவதைகள் – சுப்ரபாரதிமணியன்

 ராஜி ரகுநாதன் மொழிபெயர்ப்பில் பால் டம்ளர் தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்

ராஜி ரகுநாதன் அவர்களின் தொடர்ந்த செயல்பாடுகளை 25 ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். வேற்று மாநிலத்திலிருந்து கொண்டு படைப்பிலக்கியச் செயல்பாட்டில் தொடர்ந்து இருந்து கொண்டிருப்பதும் ., பெரிய அளவு ஊக்குவிப்பு இல்லாத நிலையில்   சோர்வை மீறி செயல்படுவதும் ஆறுதல் தந்திருக்கிறது. அவரின் வெகு ஜன இதழ்களின் பங்களிப்பை மீறி தொடர்ந்த மொழிபெயர்ப்பு முயற்சிகளும் சமீப ஆண்டுகளாய் தமிழ் இலக்கிய இதழ்களில் அவரின் பங்களிப்பும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்து  வருகிறது.

அவரின் தெலுங்கு  கற்றுக்கொண்ட முயற்சிகள் அதன் தொடர்ச்சியாக படைப்பிலக்கிய முயற்சிகள் என்பதெல்லாம் ஒரு பெண் இயல்பாக தன்னை வழக்கமானத் தளைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு சமூகம் பற்றிய பார்வையை விரித்திருப்பதைக் கண்டிருக்கிறேன்.அதை இங்கு அவர் ஒரு கட்டுரையாகத் தந்திருப்பது நல்ல விடயம்.

மொழிபெயர்ப்பில் தெலுங்கு நிலம், கலாச்சாரம், மத்தியதரக்குடுமபங்களின் வாழ்நிலை அதுவும் பிராமண மற்றும் உயர் சாதி மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்ட படைப்புகளை தன் மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கு எடுத்துக் கொள்கிறார். அதிலும் தெலுங்கு பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் எடுத்துக் கொள்கிறார். இவ்வகை முயற்சிகளில் சிலரின்  படைப்புகளில்  தென்படும் தாழ்த்தப்பட்ட சாதிகள் பற்றியக்கதைகள், தெலுங்கான போராட்ட முயற்சிகள், நவீன கவிதை அம்சங்களை இவர் தவிர்த்து விட்டு வேறு தளத்தில் தெலுங்குப் படைப்பாளிகளை அறிமுகப்படுத்துகிறார் என்பதும் முக்கிய விடயம். இன்னும் சிலர்  ஏராளமான குடும்ப., பேய், திகில் கதைகளை மொழிபெயர்த்து வணிக ரீதியாக வெற்றி பெற்று பின் இலக்கிய முயற்சிகளுக்குள் வந்தது போல் இவர்  ஆன்மீக ரீதியான படைப்புகளின் மொழிபெயர்ப்பு அதன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு பிறகு  கொஞ்சம் இலக்கிய விடயங்களுக்கு பின்னால் வந்ததும் அதன் தொடர்ச்சியாய் அவரின் மொழிபெயர்ப்புப் படைப்புகளும் புது கோணம் கொண்டவை.மத்திய தர வர்க்கத்தின் பொருளாதாரம் நிறைவு தாண்டி காணப்படும் வாழ்வியலைத் தேர்ந்து கதைகளாக்குவது மொழிபெயர்ப்புப் பணிகளுக்கென்று அவற்றை தேர்வு செய்து கொள்வதுமாக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதன் அடையாளம் இந்தத் தொகுதி. அவரின் மொழிபெயர்ப்புப் பணியில் இது ஒரு முக்கிய நூல்.

ஒவ்வொரு குடும்பமும் ஒரு தீவு போல் தனக்கென்று ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டு….! அடுத்தவரின் மனநிலையும் உரிமையையும் மதிக்கத் தெரியாத சூழலில் தேசங்களிடையே நட்பு எவ்வாறு சாத்தியமாகும்? என்று தீவை விட்டு வெளியே வர நினைக்கும் பெண்கள் இக்கதைகளில் இருக்கிறார்கள்.

, “மண்ணோடு தொடர்பை அறுத்துக் கொள்வது முன்னேற்றம் ஆகுமா? இதுதான் முன்னேற்றம் என்றால் முன்னேற்றத்தின் பழங்கள் கசப்பாக இருக்கும் போலும்!” என்று நினைத்துக் கொண்டாள் முகுந்தா.

முகுந்தா மட்டுமா .. எத்தனையோ பெண்களின் குரல் இது . இவ்வகைக் குரல்களை தொடர்ந்து தன் சுயபடைப்புகளிலும் வெளிப்படுத்தி வௌகிறர்.

வீட்டு வேலைக்கு வரும் இரு வகைப்பெண்கள் :

ராணீ! ஒரு நாலு நாள் கழிச்சு வீட்டுக்கு வா. உனக்கு ஒரு பாவாடையும் சட்டையும் வாங்கித் தரேன்!'” என்றாள் லலிதம்மா.

 “வேண்டாங்கம்மா! எனக்கு ஸ்கூல்ல யூனிபாரம் கொடுப்பாங்க!” ராணி தலையை ஆட்டி மறுத்த போது அவள் கழுத்திலிருந்த சிவப்பு மணிமாலை மினுக் மினுக் என்று பளிச்சிட்டது.

 பால் சாப்பிடும் ஆசையால் நாய்க்குப் பால்  பழக்கப்பட்டதால் அதைப்பார்த்து பால் சாப்பிட ஆசைப்படும் வேலைக்காரச் சிறுமி அவள்

அதே வீட்டுக்கு அடுத்து வேலைக்கு வரும் பால் சாப்பிட ஆசைப்படாத வேலைக்காரச் சிறுமி.

இரு இளம் சிறுமிகள். உடல், மனம் என்று அவர்களுள் உள்ள வித்தியாசம் துல்லியமாக கணிக்கப்பட்ட கதை . தொகுதியின் தலைப்பாகவும் அமைந்துள்ளது.

சின்ன கொல்லைப்புறத்தில் பூங்கொடிகள். புதராக வளர்ந்த பூச்செடிகளும் காய்கறிச் செடிகளும். நடுவில் துளசி மாடம்…! இருளாக இருந்த சுற்றுப்புறத்தில் வெண்ணிலவின் ஒளி படர்ந்திருந்தது.என்கிற ரீதியில் மத்திய வர்க்க வீட்டுகள் துளசிமாடங்கள் கதைகளில் மிளிர்கின்றன.

உபச்சாரம், பாசமனிதர்களைக்கவனித்துக் கொள்வதில் இருக்கும் நேர்த்தி இவையெல்லாம் இன்னும் பொக்கிசங்களாக சில வீடுகளில் கொட்டிக்கிடக்கின்றன.

என்ன அருமையான மனிதர்கள்

நாளையைப் பற்றி கவலைப்பட மாட்டான். இருப்பதில் திருப்தியாக இருப்பான். நிகழ்கால நிமிடத்தை நல்லவிதமாக செலவழிப்பான் என்று புரிந்து கொண்ட எக்சிடென்சியலிச மனிதர்களை தொடர்ந்து காணும் வாய்ப்பு இக்கதைகளில் கிடைக்கிறது”.

இந்த சின்ன உடம்பு உபாதையை மனவியல் நோக்கில் மனைவிகள் தெளிந்து வாழ தரும் அனுபவங்கள் கதைகளில் அற்புதம்.

* “கீதா! உன் சித்தியை ஒருமுறை நம் வீட்டுக்கு அழைத்து வருகிறாயா?

சின்னக் குழந்தைக்கு இப்போதிலிருந்தே என்ன கற்றுத் தர வேண்டுமாம்? கம்ப்யூட்டரும், சந்திர மண்டல விஞ்ஞானமுமா? சரி… சரி… ! நான் ரிடையராகி விட்டேன்! அதற்கென்ன இப்போ?

நான் பழங்கால மனிதனாம்! இன்றைய இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலில் கற்றுத் தரும் கோரமான கல்வி எனக்குப் புரியாதாம்! அதனால்தான் பேரனுக்கு நான் ஹோம் ஒர்க் சொல்லித் தருவதில்லையாம்!

தலைமுறை இடைவெளியோ, நவீன வாழ்க்கை முறையின் அம்சங்களோ துல்லியமாக இக்கதைகள் காட்டுகின்றன.

அதனால் நகரத்துக்கு அருகில் வீடு மாறி விட்டேன். ஏதோ இங்கு வாழ்ந்த வரை சுகமாகக் கழித்தோம். அதோடு திருப்தி அடையவேண்டும். அனாவசியமாக வாழ்ந்த வீட்டோடு உறவு ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. உயிருள்ளவற்றின் மேல் மோகம் கூடாது. உயிரற்றவற்றின் மேல் பேராசையும் கூடாது. தனியாக வந்தோம். தனியாகவே போகப் போகிறோம். எல்லோரும் நன்றாக இருக்க வேணும். அவர்களோடு சேர்ந்து நாமும் நன்றாக இருக்க வேண்டும். ‘ஊர்வாருகமிவ பந்தனாத்…! என்று கூறியிருக்கிறதல்லவா? இதன் பொருள் என்ன தெரியுமா? ‘பழுத்த வெள்ளரிப்பழம் தானாகவே கொடியிலிருந்து விடுபட்டு விடும். அதே போல் என்னையும் பந்தத்திலிருந்து விடுவித்து விடு” என்று பிரார்த்திப்பதுதான் அதன் பொருள்”.

பழுத்த பழம் போல் முதியவர்களின் எண்ணங்கள் பல கதைகளில் நியாயமாகப் பதிவாகியிருக்கின்றன.

விலைமகள் செய்யும் தொழில் இழிவானதா என்று கேட்டுக் கொண்டாள். அவளுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத போதும் கணவன் செய்த வியாபார நஷ்டம், விளைச்சல் நஷ்டம், மார்கெட் நஷ்டம் எல்லாம் அவள் தலை மேல் ஒரேயடியாக விழுந்தன. வீராசாமி தன்னளவில் விடுதலையைத் தேடிக் கொண்டான். கண்ணை மூடிக் கொண்டு உயிரை விட்ட உடனே உறவுகள் அனைத்தும் அறுந்து போகின்றன. பணம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் எல்லாம் முடிந்து போகின்றன.

ஆனால் உயிரோடிருக்கும் கிருஷ்ணமணியும் இரண்டு குழந்தைகளும் அவன் போன வழியைப் பின்பற்றிச் சாக விரும்பவில்லை. தன்னம்பிக்கை இழந்து வீடு வீடாகச் சென்று வயிற்றுப் பசிக்கு கையேந்தவில்லை. யார் யாரையோ அண்டி சீ சீ என்று விரட்டப்பட்டு அவமானப்படவில்லை. நன்றாக வாழ்ந்த குடும்பம் அவளுடையது. கூலி வேலை செய்ய அவளால் இயலாது. நளினமான உடல் வாகு அவளுக்கு. முரட்டு வேலைகள் அவளுக்கு ஒத்து வராது. அவளுடைய அழகு அனைவரையும் கவர்ந்தது. குழந்தைகளை எப்படி எப்படியோ வளர்க்க வேண்டும் என்று எத்தனையோ கனவுகள் அவளுக்கு இருந்தன. வீராசாமி போல் மகனும், தன்னைப் போல் மகளும் அதிர்ஷ்டமில்லாதவர்களாக ஆகக் கூடாது என்று என்ணினாள். அதற்காக அவள் தேர்ந்தெடுத்த மார்க்கதில் அவள் பயணிக்கிறாள். தனக்கும் குடும்பத்துக்கும் சோறு போடும் வேலையை தெரிந்து விருப்பத்தோடுதான் செய்கிறாள்.

மகிழ்க்சியாக முகம் மலர இன்று பள்ளிக்குச் செல்லும் அவளுடைய குழந்தைகள், வருங்கால சமூகத்திற்கு எத்தகைய பங்காற்றப் போகிறார்கள் என்பதைக் காலம் தான் கூற வேண்டும்.

ஒரு பெண் ஒரு தன்னை இப்படியாக்கிக் கொள்ளும் இந்நிலையை நியாயப்படுத்துவதில்  இருக்கும் கொடுமை சொல்லி மாளாது.

மறதி எனும் வியாதி குடும்பத்தில் எல்லோரையும்தான் அலைக்கழிக்கும். அப்படித்தான் ஒரு வயதான அம்மாவும்..

வியாதியா? அம்மாவுக்கு அல்ஜிமர்ஸா? நம் வீட்டில் யாருக்குமே அப்படி ஒரு வியாதி இருந்ததில்லையே! ஐயோ! அம்மா! உனக்கு ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு பிடிக்காமல் போய் விட்டேனே! நான் ஒரு முட்டாள். அன்றைக்கே டாக்டரிடம் உன்னை அழைத்துச் சென்றிருந்தால் வீட்டிலேயே இருத்தி உன்னை காப்பாற்றி இருப்பேனே! எத்தனை முறை உன் மேல் கோபப்பட்டேன்? எத்தனை முறை எரிச்சலடைந்தேன்! அம்மா! எங்கே இருக்கிறாய்? என்னை மன்னிப்பாயா? அம்மா!…”

நீ நாலு பேருக்கு நடுவில் டான்ஸ் ஆடினால், எல்லோரும் உன் அழகை உற்றுப் பார்ப்பார்கள். அதை என்னால் பொறுக்க முடியாது. இந்த ஒரு பேராசை குணமாவது இந்த காதலனுக்கு இருக்கக் கூடாதா?” என்றான்.

இது ஒரு கோணம்

ஆனால் அந்தப் பெண்ணின் மனது எப்படி இருக்கும்.

ஒரே குணம் . இரு வேறு பார்வைகள் துல்லியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

குழந்தைகளின் உலகம்  பற்றிக்கதைகள் இல்லாமல் இருக்குமா என்ன.

“அப்பாடா! அம்மாவை கண்டிப்பதற்கு ஒரு அம்மம்மா இருக்காங்க!” என்று கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்தார்கள் பிள்ளைகள்.அப்படி வேடிக்கை பார்க்கும் குழந்தைகள்.

தெலுகு இலக்கிய உலகு: இடைவிடாமல்... எழுதிக் கொண்டே இருக்கிறேன்: டாக்டர்  முக்தேவி பாரதி! - Tamil Dhinasari

அதே குழந்தைகள் நிலை பாருங்கள்

இந்தக் குழந்தைகள் இனிமேல் லீவ் தேவை என்று எண்ணும்போதெல்லாம் யாராவது கிரேட் மேன் இறந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த விடுமுறை நாளில் இவர்கள் செய்வதெல்லாம் இது போன்ற பயனற்ற சினிமாக்கள் பார்ப்பதும் பகலில் உறங்கி சோம்பேறித்தனத்தை வளர்த்துக் கொள்வதும்தான். எந்த மனிதரின் இறப்பால் இந்த விடுமுறை கிடைத்ததோ அவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் அவருடைய ஆதர்சமான கொள்கைக்கு விரோதமான செயல்களையே தொண்ணூறு சதவிகிதம் மக்கள் செய்கிறார்கள். அதற்கு பதில் இரண்டு நிமிடம் மௌனம் வகித்து அந்த மனிதரின் பெயரில் அவருக்கு தொடர்புடைய துறையில் ஸ்காலர்ஷிப்போ அவார்டோ அறிவிக்கலாமே!’ என்று நினைத்துக் கொண்டாள் ராதா.

அவர்கள் பெறோர்களீடமிருந்து அந்நியமாகித் திரியும் அவலம் பற்றியக் கதைகளும் உண்டு.

ஒரு பூனையின் கதையைக் கேளுங்கள்

“எங்க தாத்தா காலத்தில் அடிக்கடி ஹோமம் பூஜை எல்லாம் செய்வாங்க. அப்போ எங்க வீட்டில் ஒரு பூனை இருந்தது. அது நைவேத்திய பதார்த்தத்தில் வாய் வைத்து விடுமோ என்று பயந்து யாகம் முடியும் வரை அதைக் கூடையைப் போட்டு கவிழ்த்து வைப்பாங்க. அதன் பின் எங்க தாத்தாவும் போயிட்டாரு. பூனையும் போயிட்டது. ஆனால் அதன்பின் நம்ப வீட்டில் யார் ஹோமம் செய்தாலும், செய்ய வேண்டிய வேலைகள் என்ற லிஸ்டில் முதலில் இருப்பது ஒரு பூனையை எங்கிருந்தாவது பிடித்துக்கொண்டு கூடையைப் போட்டு கவிழ்த்து வைக்க வேண்டும் என்பதுதான். ஊர் பூரா சுற்றி ஒரு பூனையை எப்படியாவது பிடித்து வந்து கூடையில் கவிழ்த்து வைத்த பின்தான் ஹோமத்தைத் தொடங்குவாங்க. அப்படிப் பூனையைப் பிடித்து வந்து கவிழ்த்து வைக்காவிட்டால் யாகம் பலனளிக்காது என்று எல்லோருக்கும் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. இதுதான் இந்தப் பூனையின் கதை.பூனைகளைப் போன்ற பல மனிதர்களின் கதைகளும் இதிலுள்ளன.

“வீட்டு வேலை எதுவும் வராதவன் எல்லாவற்றுக்கும் மனைவி கையையே எதிர்பார்ப்பான். இவனைக் கட்டிக் கொண்டு எங்கள் பெண் என்னத்த சுகப்படப் போறாள்?. தினமும் இல்லாவிட்டாலும் தேவையான போதாவது ஒரு அவசரத்துக்கு ஒரு அடுப்பு மூட்டி சமையல் செய்யக் கூடத் தெரியாதவனுக்கு எங்க பெண்ணைக் கொடுத்தால் பின்னால் தகராறு வந்திடும். எங்களுக்கு இந்த சம்பந்தம் பிடிக்கவில்லை” என்றார்கள்.

ஒரு ஆண் பெண் செய்யும் வேலையை பகிர்ந்து கொள்ளாத போது அவன் அவமானப்பட வேண்டியிருக்கிறது. நவீன வாழ்க்கையில் இது சகஜம்.

மீண்டும் அழகான வெண்ணிலவு வெளிப்பட்டு அவர் மனதை நிறைத்தது.  என்பது போல் வரிகள் , கதைகள் மனதிற்கு தெளிவு தரும் வகையில் சிலகதைகள் உள்ளன.

ஒரு வாரம் பத்து நாள் உங்க அண்ணன் வீட்டுக்குப் போய் இருந்துட்டு வாயேன் லலிதா. அவரும் கூபிட்டுகிட்டே இருக்காரு. நாங்க ஏதோ பாத்துக்கறோம்…! நிம்மதியா போய் இருந்துட்டு வா!” என்றார்

அவள் போன பின்பு மாறுதாலிவிட்ட்து போல் அவர்கள் ஆவது சூழலா. அவளின் இடம் வெறுமையாய் தென்படாததா. ஆச்ச்ரயம்தரும் மனிதர்கள்.

தலைமுறை இடைவெளி என்பது என்ன இதுவும் கூடத்தான்.

அந்த நிசப்த சுவர்கத்தில் என்னால் இருக்க முடியவில்லை சாரதா. மூச்சு முட்டியது. வீட்டில் எல்லா வசதியும் சுவர்க்கம் போல் இருந்தும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசி கொள்ளாவிட்டால் எப்படி உயிர் வாழ்வது? நீயே சொல்லு! மனித வாழ்க்கைக்கு சாப்பாடு மட்டும் போதுமா? அப்படிப் பார்த்தால் தேவையான சாப்பாடு நம்மிடம் இல்லையா? அங்கே ஏன் போகணும்? அங்கே இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் நான் பேசுவதையே மறந்து விடுவேனோ என்று பயம் வந்து விட்டது. அதான் விழுந்தடித்துக் கொண்டு திரும்ப வந்து விட்டோம்” என்று கூறி சரோஜினி கலகலவென்று சிரித்தாள். வியந்துபோய் கேட்டுக் கொண்டிருந்த சாரதாவும் சிரிப்பில் சேர்ந்து கொண்டாள்.

“குழந்தைகளுக்கு சின்னச் சின்ன வேலைகளை செய்து சந்தோஷப்படுவது தாய்மைப் பண்பு. அதையெல்லாம் உன் புண்ணியத்தால் இன்னைக்கு நானும் செய்து என்ஜாய் செய்தேன்” என்று ரவீந்திரன் சிரித்துக் கொண்டே கூறிய போது அனைவரும் அந்த மகிழ்ச்சியில் சேர்ந்து கொண்டனர்.

“எனக்கு பேபி சிட்டிங் உத்தியோகத்திலிருந்து விடுதலை அளித்த தாய்மடிக்கு நன்றி!” என்று கூறிச் சிரித்தான் ரவீந்திரன்.

 ஆண்களும் பல விசயங்களில் விடுதலை வேண்டுகிறார்கள்.

உயர்சாதிக் குடும்ப சம்பிரதாயங்கள் ஒரு புறம் சுமை. அவர்களுக்கு அது  சில சமயம் சுகம் .உத்திரத்தின் மீது நின்று கொண்டு பொட்டு வைத்து வெற்றிலை பாக்கு கொடுக்கும் சடங்கு , திரியைப் போட்டு எண்ணெய் விடக்கூடாது, பச்சைபுடவையை சடங்காய் கட்டிக்கொள்லும் போக்கு .. ..முதற்கொண்டு நூற்றுக்கணக்கான இவ்வகை விடயங்களை இதில் காணலாம்.

 நிலத்தை கஜம் என்று குறிப்பிடுவது ( தமிழிலும் குறிப்பிடுவது என்றாலும் அரதப்பழசு )  முதல் மத்திய தரக்குடும்ப  மொழியின் பல குறிப்புகள் வரை  அவை அந்தச் சூழலை சரியாகப் பிரதிபலிக்கின்றன.

தமிழ்க்கதைகளை படிக்கும் இயல்பில் வாசகன் தேர்ச்சி பெறுகிறான. தமிழ்ச்சூழக்குள் வெகுவாகப் பொருந்தி வரும் கதைகள் இவை . அதே சமயம் வரிக்கு வரி மொழிபெயர்க்கப்படாமல் அவற்றை உள்வாங்கிக் கொண்டு மொழிபெயர்க்கும் அவரின் உத்திகளைப் பற்றி அவரே சொல்லி தமிழ்வாசகனை தெலுங்கு சூழலில் கொண்டு போய் நிறுத்தி சற்றே அந்நியப்படுத்தாமல் இக்கதைகளை அவர் மொழிபெயர்த்திருப்பது ஒரு முக்கியத் தடத்தில் பயணிக்கும் சுகமானப் பயணமாக இருக்கிறது .

(பிரதிகளுக்கு  ராஜி ரகுநாதன் ஹைதராபாத் 98490 63617                                                          ராஜி ரகுநாதன்,

Raji Ragunathan,

MIG-A-110,

Dr A.S.Rao Nagar,

Hyderabad-500062 ,

mobile: 9849063617

., 234 பக்கங்கள், ரூ200 )

சுப்ரபாரதிமணியன் , திருப்பூர்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *