Pallas's Fish-Eagle Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.பல்லாஸ் மீன் கழுகு

சில வாரங்களுக்கு முன் காலநிலை மாற்றம் பற்றி வந்த எச்சரிக்கையை தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி புதன்கிழமை அன்று சென்னையில் ஒரு சில பகுதிகளில் நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் வங்காள விரிகுடா கடலில் 5.1 ரிக்டர் அளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானதாக அமெரிக்கா நிலஅதிர்வு கண்காணிப்பு மையம் உறுதி செய்தது.

கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும் பறவைகளுக்கும் என்ன தொடர்பு ?

மனிதர்களாகிய நாம் தான் ஒவ்வொரு நாடுகளும் அவரவர்கள் நாடுகளில் உள்ள சட்டங்களுக்கு ஏற்றார் போல் எல்லைகளை (Political Boundries) வகுத்துள்ளோம். ஆனால் விலங்குகள் குறிப்பாக பறவைகளுக்கு “யாதும் ஊரே யாவரும் கேளிர்” தான், தனக்கு எங்கு உணவு, இனப்பெருக்கம் போன்றவற்றிக்கு  சாதகமான இயற்கை சூழல் உள்ளதோ அங்கு சென்று வாழும். அதன்படி நவம்பர் முதல் பிப்ரவரி வரை பனி பிரதேசங்களில் பனி சூழ்ந்து அதன் வாழ்விடம் பாதிக்கப்படுவதால் இந்தியாவில் அதே மாதங்களில் குளிர்ச்சியாக இருப்பதனாலும் இடம் பெயர்கின்றன. அப்படி வரும் பல பறவை இனங்களில் பல்லாஸ் மீன் கழுகும், பல்லாஸ் ஆலா என இரண்டு பறவைகளும் அடங்கும். இவை இரண்டும் ஒரே அறிவியலாளரின் பெயரைக் கொண்டுள்ளன.

பீட்டர் சைமன் பல்லாஸ் (Peter Simon Pallas) அவர்கள் தாவரவியலாளர் மற்றும் விலங்கியலாளர், ஜெர்மனியில் பிறந்தவர், பள்ளிக்கல்வி கற்காமல் தனியார் ஆசிரியர்களிடம்  கற்றார் பின்பு இயற்கை வரலாறு மீதான ஆர்வம் அவருக்கு ஏட்பட்டது. இவர் 1766ல் டச் அருங்காட்சியகத்தில் இருந்த பாடம் செய்த முதுகெழும்புள்ள விலங்குகளைப் பற்றி புதிய தகவல்களை  கண்டறிந்தார். பல்லாஸ் அவர்கள் ருசியாவில் உள்ள  செயின்ட் பெடெஸ்பேர்க் அறிவியல் அகாடமியில் 1768 முதல் 1774 வரை பேராசிரியராக பணியாற்றினார். மத்திய ருஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டு இயற்கை மாதிரிகளை சேகரித்து வந்தார். காஸ்பியன் கடல், அல்டை மலை போன்ற பல பகுதிகளில் ஆய்வு செய்து கிடைத்த தகவல்களை அகாடமி மூலம் அவ்வப்போதே அறிக்கைகளாக வெளியிட்டார்.

இவர் தாவரங்கள், விலங்குகள் மட்டுமல்லாது புவியியல், கனிமவியில், பூர்வீகமக்கள், மதம், வாழக்கை முறை என பெரும்பாலான தகவல்களை பதிவு செய்தார். அப்பொழுது கிராஸ்நோயார்ஸ்க் என்ற இடத்தில 1772ல் ஒரு வித்தியாசமான 680 கிலோ எடை உள்ள உலகத்தை பார்க்கிறார். கல்-இரும்பு விண்கல் என்பது செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் அகாடமிக்கு அனுப்பி உறுதி செய்யப்பட்டனர். இன்றும் பல்லசைட் (Pallasite) என்று இவருடைய பெயரில் நாம் அழைக்கிறோம்.

Pallas's Fish-Eagle Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.
(படம் – https://en.wikipedia.org/wiki/Peter_Simon_Pallas)

ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியில் வெளிநாட்டு உறுப்பினராக 1776ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்கன் தத்துவ அகாடமியில் உறுப்பினராக 1791ல் தேர்ந்துடுக்கப்பட்டார். திரும்பவும் 1793 முதல் 1794 வரை தெற்கு ரஷ்ய பகுதிகளுக்கு திட்டமிட்டார். இம்முறை அவருடைய மகளையும் உடன் அழைத்து சென்றார்.

பல்லி, பாம்பு, பூனை, வௌவால், நீர்க்காகம், கௌதாரி, ரோஸ்பின்ச், தத்துக்கிளி கதிர்க்குருவி, ஆகியவற்றிற்கு பல்லாஸ் என்று இவருடைய பெயரையே பொது பெயராக பயன்படுத்தி வருகிறோம். அறிவியல் பெயராக ஆமை, எலி, செந்தலையன்  மற்றும் மீன் ஆகியவற்றிக்கு பயன்படுத்துகிறோம். மேலும் ஒரு சிறு கோளுக்கு (asteroid) 21087 Petsimpallas என்று இவருடைய பெயரை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அழிந்து கொண்டிருக்கும் பல்லாஸ் மீன் கழுகு

பல்லாஸ் ஆலா தென் இந்திய பகுதிகளுக்கு வலசை வருகின்ற எண்ணிக்கையில் சீராக (Least Concern) உள்ள பறவை. ஆனால் பல்லாஸ் மீன் கழுகோ பங்களாதேஷ் பகுதிக்கு மட்டும் தான் வருகிறது இதில் துயரமான தகவல் அருகிவிட்ட  உயிரினம்  (Endngered) பட்டியலில்  உள்ளது, மேலும் எண்ணிக்கையில் குறைந்து வருகிறது, வரும் காலங்களில் இன்னும் அற்றுப்போகும் சூழல் நிலவுவதாக பறவை ஆராய்ச்சியாளர்கள்  தெரிவித்துள்ளனர். ஆதலால் நாம் இப்போது பல்லாஸ் மீன் கழுகு  பற்றியே பேசுவோம். இதன் அறிவியல் பெயர் Haliaeetus leucoryphus.

பல்லாஸ் மீன் கழுகின் வலசை பாதையை கண்டறிய 2013-14ஆம் ஆண்டுகளில் முதன் முதலில் செயற்கைக்கோள் கண்காணிப்பு முறையை பயன்படுத்தினர். அதன்படி குளிர்காலங்களில் இந்தியாவில் இனப்பெருக்கம் செய்கிறது. கோடைகாலங்களில் இமாலய பகுதிகளுக்கும்  மங்கோலியா நாட்டுக்கும் செல்கிறது  என முடிவு செய்தனர். ஆசியாவின் பெரும் பகுதி, மேற்கு காஸ்பியன் கடல் முதல் கிழக்கு சீனா வரை பின்பு ரஷ்யாவிலிருந்து இந்தியா, மியான்மார் பகுதிகள் வரை பரவி காணப்படுகிறது.

Pallas's Fish-Eagle Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.
 (Pallas’s Fish-Eagle | படம் – Ebird)

பல்லாஸ் மீன் கழுகும் பிரம்மபுத்திரா ஆற்றங்கரையோரங்களை நம்பியே வருகிறது. ஆனால் சுரங்கத்தொழில், மனிதக்கழிவு நீர், பூச்சிக்கொல்லி, தொழிற்சாலைக் கழிவுகள், உலோகங்கள், உரங்கள், நகரமயமாதல் போன்ற மனித செயல்பாடுகளால் அவைகளின் நம்பிக்கையை குலைத்துவிட்டோம் என்றே சொல்லலாம். அதோடல்லாமல் இப்பறவையின் குஞ்சுகளை விற்பதற்காக இப்பகுதியில் உள்ளவர்கள் கூடுகளையும்  அழிக்கின்றனர்.

இத்தனை பிரச்சனைகள் நிறைந்த வாழ்விடங்களில்  உள்ள இறால், மீன்கள் கணுக்காலிகள் போன்ற உணவுகளை தேடுகிறது. இந்த உணவுகளிலும் மேலே சொன்ன பிரச்சனைகளால்  கரிமபாசுபரசு என்ற பூச்சிக்கொல்லிகளும்,  நீர் மின் அணைகளினால் (Hydro Electric Dam) வரும் பாதரச கழிவுகளும் கலந்துள்ளதாக  கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையில் உள்ள காகங்கள், செம்பருந்து போன்ற பறவைகள் இப்பறவையின் முட்டை மற்றும் குஞ்சுகளை உண்ணுகின்றன.

வங்காள விரிகுடாவும், ஆறுகளும்

ஏற்கனவே கால நிலை மாற்றத்தால் வலசை பறவைகளின் வருகை குறைந்திருப்பதாக பல ஆய்வுக்கட்டுரைகள் நமக்கு தெரியப்படுத்தியுள்ளன. இருப்பினும் பிரச்சனைகளை சரி செய்யும் முன்னர் மேலும் பல பிரச்சனைகள் போட்டி போட்டுகொண்டு வருகிறது அதில் ஒன்று தான் கால நிலை மாற்ற எச்சரிக்கையை  தொடர்ந்து ஏற்பட்ட  நில நடுக்கம். இது போன்ற பருவ மழை காற்று, தென்மேற்கு பருவ மழை போன்ற இயல்பான செயல்பாடுகள் கடலின் நீர் சுழட்சியை மாற்றியமைக்கும், இது கடலை சார்ந்துள்ள நீர்நிலைகளிலும் பல்வேறு மாற்றங்களை  ஏற்படுத்துகிறது  என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

Pallas's Fish-Eagle Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.
 (படம் – Ebird)

இந்தியாவில் மொத்தம் ஐந்து முக்கிய ஆறுகளான வடக்கே பிரம்மபுத்திராவும், மத்திய இந்தியாவில் மகாநதி, கிருஷ்ணா, கோதாவரி, மற்றும் தெற்கில் காவேரியும்  வங்காள விரிகுடா கடலுடன் இணைகிறது.  நான்கு மாநிலங்களிலிருந்து மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரப்பிரதேஷ், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளிலிருந்து சிறு ஆறுகளும் வங்காள விரிகுடாவில் இணைகின்றன. மொத்தம் 5,15,500 சதுர கிலோமீட்டர் கொண்டது. வங்காள விரிகுடா கடலில் ஏற்படும் எந்த மாற்றங்களுக்கும் இந்த ஆறுகளும் மாற்றங்களுக்கு உட்படும். தற்போது ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கமும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பல்லாஸ் மீன் கழுகு பதிமூன்று மாநிலங்களில் வாழ்ந்தது தற்போது அஸ்ஸாம், உத்ராகாண்ட், அருணாச்சல பிரதேஷ் மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. வரலாற்று தரவுகளில் 1800களில் இந்தியாவில் கடற்கரை மற்றும் குளங்களில் இப்பறவையின் கூடுகள் தென்பட்டன என்று குறிப்பிட்டுள்ளனர், மேலும்  5000 மீட்டர் உயரம் வரை உள்ள மலைபகுதிகளான ஹிமாலய, நேபால், பூட்டான் போன்ற இடங்களிலும் இதனைக் கண்டுள்ளனர்.

இப்பறவை பற்றிய ஆய்வுக்காக பயணம் செய்த ஆராய்ச்சியாளர் ஆங்கிலத்தில் வருத்தங்களுடன் பதிவு செய்த வரிகளை தமிழில் இங்கு குறிப்பிடுகிறேன் “அதன் வாழ்விடங்கள் சிதைந்து காணப்படுகிறது, சிதைக்கப்பட்டும் வருகிறது, இனிமேலும் சதுப்புநிலங்களை தனிமைபடுத்தி பாதுகாக்கவிட்டால் இப்பறவை இனம் முடிவுக்கு வரும்” என்று வேதனையை எச்சரிக்கையாக வெளிப்படுத்தியுள்ளார்.

அதே வருத்தத்துடனும்  பங்களாதேஷ் ராப்டார் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு முன்முயற்சி திட்டம் அறிவியல் அடிப்படையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி  செயல்பட்டு வருவதால் மீட்டுவிடுவோம்  என்ற நம்பிக்கையிலும் இக்கட்டுரையை முடிக்கிறேன்.

தரவுகள்

  1. https://www.researchgate.net/profile/Bashir-Ahmed-21/publication/316282804_Pallas’s_Fish_Eagle_conservation_project_Bangladesh/links/58f96ff4a6fdccb121c9da08/Pallass-Fish-Eagle-conservation-project-Bangladesh.pdf
  2. https://www.researchgate.net/publication/228561187_Earthquakes_and_relative_sealevel_changes

  3. Steele, M. (2017). Where in the World are Pallas’s Fish Eagles? Migration and Ecology of Haliaeetus leucoryphus in Asia. University of Arkansas.

  4. Kar, S. Impact of Global Warming on The Probable Earthquake in The Bengal Basin area with respect to The Global Scenario.

  5. Miron, M. K., & Chowdhury, S. U. (2019). Breeding Density and Habitat Selection of the Grey-Headed Fish-Eagle in Noakhali District, Bangladesh. Journal of Raptor Research, 53(2), 134-141.

  6. https://en.wikipedia.org/wiki/Peter_Simon_Pallas

முனைவர். வெ. கிருபாநந்தினி
பறவைகள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: [email protected]

முந்தைய தொடரை வாசிக்க: 

பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 3: பச்சைக்கிளி – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 4 (Green Cheeked Parakeet) – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 5 – லோட்டன் தேன்சிட்டு (Loten’s Sunbird) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 6 – செட்டிகதிர்க்குருவி | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 7 – Yellow-eyed Pigeon | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 8 – Jerdon’s Nghtjar (பக்கி) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 9 – நீலகிரி காட்டுப்புறா | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 10 – காட்டுக்கோழி | முனைவர். வெ. கிருபாநந்தினி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *