சு.பாண்டிச் செல்வியின் இசைப்பாடல்

Pandi Selvi Poetry Song (சு.பாண்டிச் செல்வியின் இசைப்பாடல்). Book Day And Bharathi TV Are Branch of Bharathi Puthakalayamபல்லவி

ஊருக்குள்ள எளவட்டம் நூருபேரு இருந்தாலும் _ என்
உசுருக்கு புடிச்சவன் நீதானே !
மன்மதனா நீயுமில்ல மமதையும் உனக்குயில்ல _ இவ
மனசுக்குப் புடிச்சவன் நீதானே !

முறுக்காக மீசை வச்சு
கிறுக்காக லுங்கி கட்டி _ நீ
காத்திருப்ப பொட்டிக்கடையில…
அருகாமை வந்து நின்னா _ என்ன
அறுப்பாயே முட்டக் கண்ணால
உன்னைப் பூபோல சூடிக்குவேன் ரெட்டை சடையில..

சரணம் 1

தரிசு போல மனம் கிடக்கையிலே_ நீ
தண்ணியத்தான் இரைக்கிற
பொறண்டு பொறண்டுங்கூட உரக்கம்வல்ல_
நெஞ்சுல புளியத்தான் கரைக்கிற…

நடுச்சாமம் எந்திருச்சு சருவத்த தூக்கிக்கிட்டு
தனியாத்தான் நடக்குறேன்_
ஒரு விதமாத்தான் இருக்குறேன் !
கத்தாழப்பழமா செவக்குறேன் _ அவன்
கண்ணப் பாக்கத்தான் மருகுறேன் .

சரணம் 2

மத்தியான வெயில் நேரத்திலும்
என் மண்டைக்குள்ள முறைக்குற !
கண்ணாலம் கட்டி வாழ்ந்துக்கிற _
என்ன கைய நீட்டி அழைக்கிற..!

சிறுகாத்து வீசுனாலும் ஒருதூசு விழுமென
புருவத்துப் பக்கத்துல _
காவலுக்கு நிக்குறியே !
சாதி தடுத்தாலும் சேரணும் _
நாம கோடி வருசங்கள் வாழணும் !

 

Pandi Selvi Poetry Song (சு.பாண்டிச் செல்வியின் இசைப்பாடல்). Book Day And Bharathi TV Are Branch of Bharathi Puthakalayam

க. பாண்டிச்செல்வி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.