க. பாண்டிச்செல்வியின் மூன்று கவிதைகள்

Pandi Selvi Three Poems in Tamil. These Poems Expresses The Womens Centric. Book Day Website is Branch of Bharathi Puthakalayam.1. பாஞ்சாலிக்கு ஒர் விண்ணப்பம்

மனைவியை வைத்து சூதாடியவனுக்கு
தர்மர் என்ற பட்டம் !

சுயவரத்தில் விரும்பி மணந்தவளுக்கு
அவமானம் நேர்ந்தபோது,
அமைதிகாத்தவனுக்கு
வில்லாதி வில்லன் என்ற புகழ்!

துணைவியின் துகிலுரிக்கப்பட்டபோது குரல் எழுப்ப திரணியற்றவன்
மதயானைக்கு நிகரான பலசாலியாம்!

துச்சாதனனின் கைகளை
பதம் பார்க்க தவறியவன்
வால் வீச்சில் வல்லவனாம் !

சகிக்கு நடக்கும் கொடுமையை
முன்னமே அறியாதவன்
ஆரூடத்தில் சிறந்தவனாம் !

இந்த ஐவர்கள் ஐயாயிரம் கெளரவர்களுக்கு சமம் ..

ஆனாலும் பாஞ்சாலி
ஆறாவதாக தன்னை அறிந்து கொண்ட கணவன் வாய்க்கவேண்டுமென எண்ணினாள்!
ஒருபானை சோற்றுக்கு
ஒரு சோறு பதம்.2. மரணத்தின் வாசம்

உதிர்ந்திடும் இலையாய்
இலகுவாக பறந்திடவேண்டும்
என்னுயிர்.

இருக்கும்போது
கைகுலுக்கி விசாரிக்காத
சிரமப்படும்போது
சிரம் காட்டதவர்களுக்காக
காத்திராமல்
கடத்திவிடனும் என்னுடலை
சம்பிரதாயமின்றி.

உற்றாரின் பணம் செலவின்றி
ரணமின்றி நிகழ வேண்டும்
என் மரணம் !3

குடித்து, குடித்து
குடியையும்,
குடலையும் கெடுக்கும்,
மனிதா…..
படித்து, படித்துச் சொன்னாலும்,
இடித்துரைத்தாலும்,
உன் மனம் கேட்க மறுப்பதேனோ….

குடிப்பதனால்
கெடுவது தேகம் மட்டுமல்ல,
இந்த தேசமும்தான்!

நல்லவனாக
வலம் வந்தாய்
நகருக்குள்ள…!
வில்லனாக,
வீணாபோனாய் விஸ்கியினாலே.,

பாடுபட்ட பணத்தில்
பட்ட சரக்கு அடிச்சுபுட்டு
பட்டினி போட்டு வதைக்கிற
குடும்பத்தை,
கஞ்சிக்காக கையேந்தவும் வைக்கிற.,
உன்னை நம்பியிருக்கும் ஜீவன்களை,…..

சாராயம் அடிச்சா
சந்தோஷம் எகிறும்
சொற்பநாளைக்கு!
ஆயூசு முடிஞ்சிரும்
அற்ப நாளிலே

சுதி ஏற்றி
மதி இழந்து,
சுற்றம் தொலைத்து,
நடுவீதியில் வீழ்ந்து கிடப்பாய்,
ஆடையின்றி.
பாடைக்கட்ட நாதியின்றி
அனாதையாக போவாய்!
நாற்றத்திலே….

அன்பு மனைவி,
பாச குழந்தைகள்
முச்சந்தியில் நிற்கும்
நிற்கதியாய்,
எதிர்காலமற்று…….!
வீணாப்போன குடியினாலே.

விதவையான
இளம் மனைவி
வாழ்வு கேள்விக்குறியாய்? ,
கேலியாய் மாறும்!
கணவன் இறந்ததாலே..

அப்பன் வழியில்
மகனும் குடிப்பான்!
போதையிலே,
பாதைமறப்பான்,
பயணம் தொலைப்பான்.
மழலையின் முத்தத்தில்
இச்சைத் தீர்ப்பான்,
பச்ச குழந்தையையும் தீர்த்துக்கட்டுவான்.
பாழாப்போன குடியினாலே. .

பச்சையாக பொய் சொல்லி,
பெத்தவளிடம், காசை பறிப்பான்,
பிராந்தி வாங்க …
எட்டி உதைப்பான் தாயை
தள்ளாட்டத்திலே.,
மனபிராந்தியிலே அலைவான் ….
புத்தி பேதலித்ததனாலே!

பேறுபெற்ற ஆளுமைகளும்,
பாரின் மூலைக்குள்ளே
குடியினாளே!

சந்தேகத்திற்குரியவனாய் மாறுவான்.
தண்ணியடிப்பதானலே,
தீவிரவாதி பட்டியலில்
முதலிடம்பெறுவான்
இருபது வயசினிலே….
முப்பதுக்குள்ளே சந்ததி முடிந்துவிட்டால்
சமூகத்தின் சுபிட்சம் என்னவாகும்?
வாலிபனே.!

தேசத்தின் இதயம்
இளைஞன் நீயே
உன் இதயமோ
சல்லடையாகலாமோ
கேடுகெட்ட குடியினாலே…!

க. பாண்டிச்செல்விஇப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.