கடுங் கோபக்காரி நானெ
வர்ணம் பூசி சித்தரிக்கிறார்கள் ,
பரப்புரை செய்கிறார்கள் .
மூட்டிவிட்டு
முட்டுச்சந்தில் முனங்குகிறார்கள்
நெருப்பின்றி புகையுமா ஆராய்கிறார்கள்
பற்றவைத்த அறிவாளிகள்.
அப்படியென்ன வினையாற்றினேனெ விம்முகிறார்கள் இந்த கோவேறுகள்.!
அடிமைச்சங்கிலியின் ஒரு கண்ணியை அறுக்கமுற்பட்டேனென அதெப்படி
பாலூட்டும் என் மார்பகம் நிமிரலாமா ?
எங்கே அந்த மீசைக்காரன்
ரெளத்திரம் கற்கச் சொன்னவன்
எத்தனை யுகங்கள்
எனச் சொல்லவில்லையே !
எல்லா நாட்கள் போல் இன்றல்ல..?
உன் நினைவு தோன்றலின் அனுபவத்தை வாசித்து என் நாவு சுவைத்துண்கையில்
உமிழ்நீர் உப்பு கரிக்கின்றது.!
வறண்ட கண்களின் வெறித்த பார்வையோடு
கால்கள் பயணிக்க
பாதம் தேடுகின்றது
கடற்கரை குறுமணலில்..
உன்சுவடுகளை
கதகதப்பான நின் சீண்டலில் தொலைத்த
நாட்களைத் தேடுகையில்
மணல் சுழலில் பதப்பட்டுக் கிடந்தன ……
காயம் குறித்து
கவலைகொள்ளவில்லை,
கனி.
சுவைக்குறித்து
சொல்லவில்லை,
கிளி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
கிளையும் கனியும் எனக்கும் படித்ததும் பிடித்தது. சிறப்பான கவிதை