பண்டிகை சிறுகதை – நிரஞ்சனன்

பண்டிகை சிறுகதை – நிரஞ்சனன்
எக்கோ, அண்ணே இருக்காகளா?

என்ன ருக்கு…. என்கிட்ட சொல்லு…..

சொல்ல என்ன, கைமாத்து வேணும்…

என்னடி….. ?

அவிக தங்கச்சி, என் கொழுந்தியா ஊர்ல திருவிழா, .., சொல்லிட்டு அழைச்சிட்டு போச்சு…. சும்மா போக முடியுமா சொல்லு….. அதான்…..

ஏண்டி…. கடன் வாங்கி செலவு பண்ணனும் என்ன இருக்கு, போகாம இருக்க வேண்டியது தான…..

ஏக்கோ…. இஷ்டம் ன கொடு….. உன்கிட்ட அறிவுரை கேட்கல……

பாருடி கோவத்தை…. என்னங்க…..? ருக்கு வந்து இருக்கா……

பணம் வாங்கிக் கொண்டு, இல்லம் வந்தவள், அவனவளிடம் இந்தாங்க, மருமக பிள்ளைக்கும் கொழுந்தியாளுக்கும் தம்பிக்கும் புது துணி வாங்கிட்டு வாங்க, தின்பண்டம் வாங்கிட்டு வாங்க… ஒரு எட்டு போய்ட்டு வந்துடுவோம்….

ஏதுடி பணம்….. கை மாத்து வாங்கினியா…. இது தேவையா?

இங்க பாருங்க, ஒன்னும் ஒன்னும் இது தேவையா என பார்த்தோம், எல்லாத்தையும் தட்டிவிடத் தான் பார்ப்போம்….. ரெண்டு ஞாயிறு வேலைக்கு போன போச்சு ….

எங்க அம்மா அடுத்து, அவள நீ தான் கண்ணும் கருத்துமா பார்க்க…..

அவ என்னைய எப்படி பார்க்க தெரியல, அவ என் பொண்ணுங்க….

எப்படி ருக்குக்கு சொந்தம் விட்டு போக மனது இல்லையோ, அதே போல அங்க இவளுக்கு இருந்த வரவேற்பு கண்டு…. வாங்கிய கடன்….. என்ன…. இதுக்கு மேல என்ன இருக்கு என்பது போல இருந்தது……

இவர் கூட ஒரு சுத்து சுத்திட்டு வா ணே…. சாப்பாடு தயார் பண்ணுறேன்….. நானும் வரேண்டி உன்கூட…அவுக போகட்டும்….

மாப்பிளை மச்சான், தெருள போக, இது என் மச்சான் பொங்கலுக்கு வந்து இருக்காக என உரிமையோடு ஊரார்க்கு அறிமுக படுத்த, அவர் மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி….

அப்படியே கோவில் போக, பூசாரி கிட்ட சொல்லி ஊர்ல இருந்து வந்து இருக்காக, மரியாதை கொடுங்க சொல்ல, சாமி மேல இருந்த அங்கவஸ்த்ரம் எடுத்த இவரு தலைல கட்ட, மாப்பிளைக்கும் கட்டுங்க என சொல்லி இருவரும், தலைப்பகையோடு வீடு வந்தனர்…..

பண்டிகை நாள், ஊர் திருவிழா….. கோழி அடிச்சி குழம்பு தயாரா இருக்க…. வந்தவுடன் சாப்பிட சொல்லி பரிமாற அங்கே அன்பு வெள்ளம் சொல்லுறது விட அன்பு ஆழிபேரலை தான் சொல்லணும்…. திக்குமுக்காடி போய் விட்டார் ருக்கு புருசன்…..

இரவு இருந்து, ஆட்டம் பாட்டம் பாத்து, சப்புரம் பார்த்து தூங்க வெகு நேரம்….
காலைல எழுந்த மச்சான் மாப்பிளை முன்னாடி இருவர் மனைவிகள், சேலயை ஏத்தி சொருகி, கையை பின்னாடி கட்டி வளைந்து நின்றனர்….

என்னடி என்பதற்குள், பளிச்…..
மஞ்ச தண்ணி உற்றி விட்டு அவர்கள் ஓட…. இவர்கள் தொறத்த, பெற்ற பிள்ளைகள் அம்மாவுக்கு சில நேரம் அப்பாக்கு சில நேரம் வழி காட்ட…. ஒரே சிரிப்பலை மட்டுமே…. மஞ்சத் தண்ணி திருவிழா முடிச்சி….. ஊர் கிளம்ப, அண்ணி நாளை போங்க கொடி இரங்கிடும் சொல்ல…..

அங்க அங்காளம்மன் கோவில் திருவிழா கொடி ஏத்துறாக, நீயும் தம்பியும் மருமகளும் வந்துடுங்க சொல்லிட்டு நகர ஆரம்பித்தாள், ருக்கு.

பண்டிகைகள் சொந்தங்கள் சேரவே தவிற வீண் செலவுகள் இல்லை என உணர்த்தினாள், ருக்கு.

– நிரஞ்சனன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *