பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




கனவில் வந்தவர்கள்
***********************
இந்த அம்மாவுக்கு
நேரங்காலமே தெரிவதில்லை;
உறங்கும் போது கூட
உண்டாயா மகனே?
என்று கேட்கின்றாள்!
*****
தந்தை…
காசு கொடுக்கின்றார்;
எண்ணி எண்ணிப்
பார்க்கின்றேன்….
கனவு முழுவதும்!
*********
உடற்கல்வி ஆசிரியர்
விளையாட்டு மைதானத்தில்
ஓடச் சொல்கிறார்….
ஓடுகிறேன் … ஓடுகிறேன்
ஒரே இடத்தில்!
******
நண்பன்
சொல்லச் சொல்ல
மோட்டார் பைக்கில்
அழைத்துச் சென்று
மோதி விடுகிறான்…
அவனுக்குப் பிடி கொடுக்காத
அவளின் மீது!
*********
அவள் வருகிறாள்
நான்
திடுக்கென எழுந்துக் கொள்கிறேன்;
கனவிலும்
கைகாட்டி(டாடா) விடத்தானே போகிறாள் என்று!
**********

கவிதை
சில குறிப்புகள்
*******************
கவிதை எழுதத்தெரிந்தோர்
கர்வம் கொள்வதில்லை;

கவிதை எழுதுவோர்களுக்குக்
கவிதையே சுவாசம்.

கவிதைக்காரனால் மட்டுமே
கண்ணீரைத் துடைக்க முடியும்!

கவிதை எழுதுகிறேன்
என்று
கவிதையெழுதுபவன்
சொல்லிக் கொள்வதில்லை;

அவன்
எழுதுவதே சொல்லிவிடும்
அவனை!

எனக்குக் கவிதையெழுதத் தெரியும் என்பவன்
இன்னும்
கவிதையைத் தெரிந்து கொள்ளவில்லை என்பதையே
அப்படிச் சொல்லுகிறான்!

ஒரு கவிதை
புரிதல் இல்லாதவர்க்கும்
புரிந்து விடும்!

கவிதையென்பதற்கு
விளம்பரம் தேவையில்லை…
கவிதையே அதனைத்
தேடிக்கொடுத்து விடும்!

கவிதைதான் தூய்மை;
போலிகள் கவிதைகளில் இல்லை!

போலிகளாலும்
கவிதைகள் இல்லை!

சரக்கு முடுக்கென்றால்
சந்தையில் மரியாதைதான்!

– பாங்கைத் தமிழன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *