பாங்கை தமிழனின் கவிதை

Pangai Thamizhanin Kavithai பாங்கை தமிழனின் கவிதை

இறைவன்
உண்டென்போரும்
இல்லையென்போரும்
இருக்கட்டும்!

இறைவனின்
மகிமைகளை
திருத்தலப் பெருமைகளை
மனிதர்கள்தான்
சொல்லி வருகின்றனர்!

இறைவன்
சொன்னதாக
சொல்லப்பட்டதும்
மனிதனிடமே
சொல்லியிருக்கிறான்!

மனிதன் நினைத்தால்
மறைக்கவும்
மாற்றவும்
மனம் வேண்டும் போல!

மனிதரைத் தேடி வந்து
ஏன் மாற்றவில்லை
ஏன் மாற்றினாய்
என்று
இறைவன் கேட்டால்…
சொல்லிக் கொள்ளலாம்!

முதலில்
சாதிகள் இல்லையென்போம்;
சமயங்கள் தொல்லையென்போம்!
இறைவன் வந்து
ஒரு வேளை கேட்டால்…
மன்னிப்புக் கேட்போம்!

கடவுள்
கருணை உள்ளவர்;
மன்னிப்பார்…..
மாற்றங்கள் தவறுயென்றால்!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.