கழனியூரான் - பணியார மழையும் பறவைகளின் மொழியும்

காலம் காலமாக கதை கேட்டும், கதை சொல்லியும் வந்த சமூகம் நம் சமூகம். ஒவ்வோர் வீட்டிலும் தாத்தா பாட்டி என்ற தலைசிறந்த கதை சொல்லிகள் இருந்தார்கள். அவர்கள் மாலை நேரத்தில் சொல்வதற்கென்றே தனி ரக கதைகளை வைத்திருந்தார்கள். குழந்தைகளும் ஆர்வமுடன் அந்த கதைகளை கேட்டார்கள்.

வாழ்வியல் நெறிகள் அனைத்துமே அந்த கதைகளுக்குள் ஏராளம் அவர்களுக்கு புதைந்து கிடந்தது. பள்ளிகளிலும் இதற்கென்று பாட வேளைகள் ஒதுக்கப்பட்டன. மொத்தத்தில் குழந்தைகள் கதை கேட்டு மகிழ்ந்த காலம் இருந்தது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து வருவது, நகர்புற வாழ்வு , பொருளாதார தேடல்கள், மதிப்பெண்கள் நோக்கி நகரும் கல்வி, தெலைக்காட்சி, அலைபேசி என்று பற்பல காரணிகளால் இன்று குடும்பங்களில் கதை சொல்லல் குறைந்து கொண்டு வருவது வருத்ததுக்குரியது.

இப்பொழுது சிறிது வாசிப்பு அதிகரித்து வரும் சூழலில், நம் வாசிக்கும் கதைகளோடு நாட்டுப்புற கதைகளையும் இணைத்து குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும்.

இந்த நூலில் வாய்மையே வெல்லும், தீ நட்பு கூடாது, சிறு துரும்பும் பல் குத்த உதவும் போன்ற பல்வேறு பழமொழிகளை விளக்கும் கதைகளும், நகைச்சுவையான நாட்டுப்புறக் கதைகளுமாக 35 கதைகள் உள்ளன. அனைத்து கதைகளும் ஒரு பாட்டி குழந்தைகளுக்கு சொல்வது போல வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு.

இந்த கதைகளை வாசிக்கும் குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் மடியில் அமர்ந்து கதை கேட்கும் உணர்வு நிச்சயம் கிடைக்கும்.

 

நூலின் தகவல்கள் 

நூல் : பணியார மழையும் பறவைகளின் மொழியும்

ஆசிரியர் : கழனியூரான்

பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

பக்கங்கள் : 144

விலை : ₹110.00

நூலைப் பெற :  44 2433 2924

 

நூலறிமுகம் எழுதியவர் 

பூங்கொடி பாலமுருகன்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *