வழக்கறிஞர் பெ.ரவீந்திரன் எழுதிய பன்மைத்துவத்தைச் சிதைக்கும் பொது சிவில் சட்டம் (panmaiththuvathai vathaikum pothu civil sattam) - https://bookday.in/

பன்மைத்துவத்தைச் சிதைக்கும் பொது சிவில் சட்டம் – நூல் அறிமுகம்

பன்மைத்துவத்தைச் சிதைக்கும் பொது சிவில் சட்டம் – நூல் அறிமுகம்

ஒரு முறை புத்தகம் வாங்கும்போது, அங்கு இருக்கும் தோழர் இந்தப் புத்தகத்தை என்னிடம் இலவசமாகக கொடுத்தார். அப்போது நான் அதைப் படிக்காமல் என் வீட்டின் அலமாரியில் வைத்திருந்தேன். இப்போது படிக்கவும் ஆரம்பித்தேன்.

இந்தியா என்பது மதம், இனம், மொழி என்ற கட்டமைப்பில் அமைந்தது. இங்கு வாழும் மனிதர்கள் பன்முகத்தன்மை கொண்ட மக்களாகப் பயணம் செய்கிறார்கள். இந்தியாவில் மத்திய அரசும் ஒரு கொள்ளைகளிலும் , மாநில அரசு மற்றொரு கொள்கையின் அடிப்படையில் இயங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் கோட்பாடுகளும் அந்த மாநிலத்தின் நலன்களைப் பொருத்து மாறுபடுகிறது. இப்படி இருக்கும் சூழலில் பொது சிவில் சட்டம் சாத்தியம்தானா? என்ற கேள்வியுடன் புத்தகம் தன் கருத்துக்களை கட்டுரையாக பதிவு செய்கிறது.

இந்தியாவில் இருக்கும் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டில் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்து, கிறிஸ்துவர்கள், ,முஸ்லீம்கள் என்று ஒவ்வொருக்கும் ஒரு நடைமுறையை புரிந்த ஆங்கிலேயர்கள் சட்டத்தை பொதுத்தன்மையோடு அமைக்க இயலாது என்று கூறியதாக வரலாறு இருக்கிறது.
அம்பேத்கர் பொது சிவில் சட்டம் குறித்து சொல்லும்போது இந்திய சமூகத்தில் ஒத்த கருத்தின் அடிப்படையில் எந்த ஒரு சட்டமும் கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

இந்தியாவில் பொது சிவில் சட்டம் என்று இருக்கிறதா? அது என்ன சட்டம் தோன்றியது?

ஆம், இருக்கிறது.

உரிமையியல் நடைமுறைச்சட்டம்
இந்திய சாட்சிச் சட்டம்,
ஒப்பந்தச்சட்டம்,
மாற்றுமுறை ஆவணச்சட்டம்,
பொருட்கள் விற்பனைச் சட்டம்,
சொத்துரிமை மாற்றுச்சட்டம் என்று சட்டங்கள் அனைத்தும் பொது சிவில் சட்டம் தான், அதேசமயம் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, வாரிசுரிமை, ஜீவனாம்சம், தத்தெடுத்தல் தனிநபர் விவகாரங்களில் இன்னும் பொது சிவில் சட்டம் இல்லை. ஆனால் இப்போது நடைமுறைக்கு வருகிறது.

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையில் தான் என்கிறோம். இந்துக்கள் திருமணம் என்பதே மாறுபட்ட பழக்கவழக்கம் கொண்டு இருக்கிறது. உதாரணம் தகப்பனின் உடன்பிறந்த சகோதிரியின் மகளைத் திருமணம் செய்வது இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்து திருமண சட்டம் 5 V அந்த உறவுமுறையை தடைச் செய்கிறது. தென்னிந்தியாவில் அப்படி திருமணங்கள் நடப்பது வழக்கமாக இருப்பதால், சட்டமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பொது சிவில் சட்டம் வந்தால் தடைசெய்யப்படலாம் என்று புத்தகத்தில் கூறுகிறார்.

இந்து திருமணம் என்பது புனிதச் சடங்காக இருக்கிறது. கிறிஸ்துவ திருமணம் என்பது புனித உடன்படிக்கையாகவும், இஸ்லாத்தில் திருமணம் என்பது ஒப்பந்தமாக இருக்கிறது.

கோவாவில் பொது சிவில் சட்டம் என்பது அனைவருக்கும் ஒரே மாதியான சட்டம் இல்லை என்றும் புத்தகத்தில் இருக்கிறது. அனைத்து திருமணங்களும் மாநிலப் பதிவாளரிடம் செல்ல வேண்டும். ஆனால் கிறிஸ்துவ மதம் மட்டும் அதில் விலக்கு கொடுத்தாக இருக்கிறது. இந்துப்பெண் 21வயதுக்குள் குழந்தை இல்லையென்றால், இந்து ஆண் என்றால் 31வயதுக்குள் குழந்தை இல்லையென்றால் இரண்டாம் திருமணத்திற்கு சட்டம் அனுமதி கொடுக்கிறது. எனவே இது அனைவருக்கும் பொதுவான சட்டம் இல்லை என்று தெளிவாக புரிகிறது.

இஸ்லாமியர்கள் மட்டும் இந்த சட்டத்தால் பாதிப்பு இருப்பதாக கூறுகிறார்கள். இந்த சட்டத்தை ஆதிவாசிகள், சீக்கியர்,பார்சிகள், ஜெயின்கள் தொடர்ந்து எதிர்ப்பதாகவும், தவறான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது என்று புத்தகத்தின் ஆசிரியர் கூறுகிறார்.

மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கும் குக்கி, மெய்ட்டி மக்களிடம் நடக்கும் போரட்டம், வன்முறைகள் நமக்கு தெளிவாகப் புரிந்திருக்கும், பொது சிவில் சட்டம் சாத்தியமானது இல்லை என்று புத்தகம் கூறுகிறது.

பொதுச்சிவில் சட்டம் மாநில அங்கீகாரத்தையும், உரிமையையும் இல்லாமல் போகும் நிலையும் உருவாக்கிறது. மாநிலப் பட்டியலில் இருந்து சட்டம் இயற்றுவது இயலாமல் போகலாம், இதனால் மாநில உரிமைகள் பறிக்கப்பட வாய்ப்பும் இருக்கிறது. உதாரணமாக 1989ல் தமிழ்நாட்டிற்கு திமுக அரசு பெண்களுக்கு சொத்துரிமை சட்டத்திற்கு சட்டம் இயற்றியது. அதன்பின்பு தான் மத்திய அரசு 2005 ஆம் ஆண்டு இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்தது என்ற வரலாறு இந்தப் புத்தகத்தில் தெளிவாக இருக்கிறது.

” ஓரே நாடு, ஒரே தேர்தல்” என்று மத்திய அரசின் கொள்கைகள் என்று கூறி அரசியல் கொள்கைகளாக மாற்றுகிறது. இந்தியாவில் பல்வேறு பண்பாடு கலாச்சரம், மொழிகள் நிறைந்த மாநிலமாக இருக்கிறது. இங்கு வாழும் மக்களுக்கு தனியுரிமை என்பது மிகவும் முக்கியமானதாக நான் பார்க்கிறேன். இந்திய நாட்டின் அரசியலமைப்பு உருவாக்கியது, மக்களின் நன்மைக்காகவும், ஜனாநாயக உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கும் செயல்படுகிறது. மத்திய அரசின் மோசமான அரசியல் நடவடிக்கைகளை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து அழுத்தமான குரல்களில் தொடர்ந்து எழுப்பி கொண்டே இருக்க வேண்டும்.

ஜனநாயகம் வெல்லட்டும்.

நூலின் தகவல்கள் : 

நூல் : பன்மைத்துவத்தைச் சிதைக்கும் பொது சிவில் சட்டம்
ஆசிரியர் : வழக்கறிஞர் பெ. ரவீந்திரன்
விலை : ரூ . 5
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/panmaiththuvathai-vathaikum-pothu-civil-sattam/

நூல் அறிமுகம் எழுதியவர் : 

சு.வினோத்குமார்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *