Pappu Rani Kanavillai Poetry (Kavithai) in Tamil Language. Book day website is Branch of Bharathi Puthakalayam

கவிதை: காணவில்லை – வை. பாப்புராணி



காணவில்லை

அன்பைப் பொழியும் அம்மாவை காணோம் !
அரவணைக்கும் அப்பாவை காணோம் !
பாசமாக விளையாடும் அக்காவை காணோம் !
சண்டையிடும் அண்ணனை காணோம் !
குட்டி பெண் அவள்
அன்புக்கு ஏங்குகிறாள் …
அரவணைப்புக்கு ஏங்குகிறாள் …
பாசத்திற்கு ஏங்குகிறாள்…
சண்டையிட ஏங்குகிறாள்
எங்கே தான் சென்றார்கள் எல்லோரும்
அதோ எல்லோரும் பயத்தோடு ஊடகங்களின் முன்னால்
ஊடகங்களோ அவர்கள் பயத்துக்கு தீனி இட்டு விளையாடுகிறது.
உலகமெங்கும் பெரும்தொற்றை பரப்பி கொண்டிருக்கிறது.
பாவம் குட்டி பெண் …
தேடிக் கொண்டேயிருக்கிறாள் …
அம்மாவை அப்பாவை அக்காவை அண்ணனை…



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *