Parameshwari Poems. து. பா. பரமேஸ்வரியின் கவிதைகள்




வாழ்வின் இரகசியம் ..
*****************************
அன்புள்ள கவிதாயினிக்கு,
எழுதுகிறேன் ஒரு கடிதம்..
விடியலின் விடிவெள்ளியே..
காலையில் மலரும் தாமரையே..
பகலில் மிளிரும் பவித்ரமே..
மாலையின் மஞ்சள் வெயிலே..
இரவின் பால்வண்ண நிலவே..
பொல்லாத மனிதர் கொண்ட பூமி இது….

போராட்டம் மட்டுமே வாழ்வு
குற்றங்கள் தான் புரிந்து
சுமத்துவர் பழி நம் மேல்..
கொல்லாமலே நம்மைக் கொல்வர்
இந்தக் கூறுகெட்ட மனிதர்..
வராது துன்பம்  வாழ்வில் என்றும்
வந்தாலும் நீயும் மோது..
பேறானது நம் பண்பாடு  நாளும்
போற்றி நீயும் வாழு..
பெறாது இன்பம்  பெற்றாலும் நித்தம்
தமிழ் வாழ்த்தி நீயும் பாடு..

கவிதை பெற்ற பைங்கிளியே..
கவிதை போற்றும் கவிக்குயிலே
கடந்தகால கசப்பைக் கடத்தி விடு
எதிர்கால  எதிர்பார்ப்பை மறந்து விடு
நிகழ்கால எண்ணத்தை மட்டும் கையிலெடு..
இதுவே வாழ்வின் யதார்த்தம்..
எதிலும் உறுதியாய்..
நின்றுவிடு..
செய்து விடு…
நடத்திவிட்டு..
வென்று விடு…
சாதித்து விடு…
வெற்றியின்..
ரகசியம் அப்படித்தான்இருக்கும்..

வாழ்தலின் வாழ்தல்
*************************
வாழ்தலின் வாழ்தலைக் கொண்டாட
வாழ்தலை  சிலதுளிகளாவது  வாழ்ந்துத்தான் பார்க்க வேண்டும்…
உயிர்த்திருக்கும் ஈசல் சில நிமிடங்கள்‌ மட்டுமே…
ஜெனித்திருக்கும் பட்டாம்பூச்சி சில நாட்கள் மட்டுமே.
தகவமைத்திருக்கும் கிருமிகள் சில வாரங்கள் மட்டுமே..
வாழ்ந்திருக்கும் கரப்பான் சில மாதங்கள் மட்டுமே..
வாழ்தலைப் வாழ்த்த நூறாண்டுகள் வரம் பெற்றுள்ளோம் நாம்..
வாழ்தலை வாழாது
வாழ்தலைப் புறக்கணித்து
வாழ்தலைத் தொலைத்து
வாழாதே போகிறோம்
வாழ்தலின் வாழ்வெண்ணாது
வாழ்தலின் விளிம்பு உணர்த்திடும் வாழ்தலின் வாழ்வை.
வாழ்தலின் வாய்ப்பிழந்தப் பின்
வாழ்தலை நினைத்து
வாழ்தலிலிருந்து நகர்ந்தே
செல்ல வேண்டும்
வாழ்தலின்‌ வாழ்கனவுகளோடு..

புலரும் விடியலின்‌ஓசை
*******************************
ஒவ்வோர்
விடியலை இனிதாக்கும்  குயிலோசை….
கேட்க கேட்க தேவராகமாய்
காதில் மீண்டும் மீண்டும்
ஒலித்திருக்கும் மணியோசை
மீப்பெரு பொழுதையும்
மீச்சிறு நொடியையும்
நீட்சியான நிமிடத்தையும்
நீக்கமற மணித்துளியையும்
பேரின்ப மயமாக்கும்
குழலோசையாய்..
அந்தக் குயிலோசை..
வாழ்த்தலை மகிழ்கூட்டும்
கவின்னிசை..

குரல் கேட்டு கொண்டாடியக்
குயில்முகந் தேடி
சுற்றினேன் இருள் வனங்களில்..
தாவினேன் அடர் கிளைகளில்
தேடினேன் நெடுமரங்களில்
எங்கும் காங்கவில்லை..
எதிலும் தோன்றவில்லை
குரலலையால் கவர்ந்திழுத்த
அந்த முகாந்திரம்…
பின்பே உணர்ந்தேன்..

குயிலிசை போதுமே..
குயில்முகம் தேவையா..
உணர்வுகள்‌ போதுமே..
அதன் உருவம் தேவையா…
நம் கண்களில் தோன்றிடும் காட்சிகள் யாவும் கற்பனையை சிதைத்திடுமே..
கண்களில் தோன்றா காட்சிகள் யாவும்
கற்பனை வளர்த்திடுமே..
குயில் முகம் தேடி அலையும் தேடல்கூட
ஆடல் போல்
ஒரு சுகமே….

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *