மூலக்கூறு உயிரியல் ,மரபியல் ஆகியவற்றின் இந்திய பெண் விஞ்ஞானி பரம்ஜித் குரானா - Paramjit Khurana - molecular biology and genetics - https://bookday.in/

 மூலக்கூறு உயிரியல், மரபியல் ஆகியவற்றின் இந்திய பெண் விஞ்ஞானி பரம்ஜித் குரானா

தொடர்- 17 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

 மூலக்கூறு உயிரியல் ,மரபியல் ஆகியவற்றின் இந்திய பெண் விஞ்ஞானி பரம்ஜித் குரானா(Paramjit Khurana)

பரம்ஜீத் குரானா தாவர மூலக்கூறு உயிரியல் துறையில் உலகறிந்த விஞ்ஞானி ஆவார். தற்போது டெல்லி பல்கலைக்கழகத்தில் தாவர மூலக் கூறுஇயல் துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இவருடைய ஆய்வுகளில் மிக முக்கியமானது கோதுமைக்கும் மைதாவுக்கும் இடையிலான சுகாதார ரீதியிலான மருத்துவ உண்மைகளை வெளி உலகிற்கு கொண்டு வந்தது ஆகும். பசுமை புரட்சி ஆண்டுகளில் அதிகம் உற்பத்தியான கோதுமை உணவு தாவரத்தில் உருவான நீர்க்கட்டி புழுவுக்கு எதிரான மிகப்பெரிய யுத்தத்தை அவர் நடத்தினார்.

இந்தியாவின் விவசாய நிலங்களை விட தரிசு நிலங்கள் தான் அதிகம். இந்திய நாட்டின் மக்கள் தொகை ஆண்டுக்கு ஆண்டு எவ்வளவு வேகமாக அதிகரிக்கிறது என்பது நாம் அறிந்ததே. இந்த நிலையில் உணவு உற்பத்தி என்பது பல மடங்கு அதிகரிக்கப்பட வேண்டிய அவசியத்துக்கு தள்ளப்படுகிறது. தரிசு நிலங்களையும் பயிர் நிலங்களாக மாற்றக்கூடிய மிக முக்கியமான ஆய்வு பரம்ஜித் குரானா – Paramjit Khurana அம்மையாரின் ஆய்வாகும். இதற்காக அவர் தேர்ந்தெடுத்த தாவரம் தான் மல்பேரி. அனைத்து வானிலை காலகட்டத்திலும் பயிர்களை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயமும் நமக்கு உண்டு. எப்போதெல்லாம் பிரதான உணவு தாவரங்களை வளர்க்க முடியவில்லையோ அப்போதெல்லாம் காய்கறிகளை வளர்க்க வேண்டிய மாற்றத்தை நம் இந்திய விவசாயத்தில் அறிமுகம் செய்தவர் குரானா அம்மையார்.

மூலக்கூறு உயிரியல்,மரபியல் - இந்திய விஞ்ஞானி பரம்ஜித் குரானா - Paramjit Khurana is an Indian scientist of molecular biology and genetics - https://bookday.in/

இன்றைய உயிரி தொழில் நுட்பத்தின் அபார வளர்ச்சியை இந்திய கோதுமையில் மரபணு மாற்றம் செய்து ஆரோக்கியத்துக்குத் தக்க சரியான தானியமாக அதை அவர் வளர்த்தெடுத்தார். அஜியோடிக் அழுத்த சகிப்புத்தன்மை, உப்புத் தன்மை, மற்றும் வறட்சி அழுத்த நிலைகளை தாங்கும் திறன், படைத்த மல்பேரித் தாவரத்தை ஆவணப்படுத்தியவர் அவர்.

அவர் சார்ந்திருக்கும் துறை ஜினோமிக் சென்று அழைக்கப்படுகிறது. ஜீனோமிக்ஸ் என்பது மூலக்கூறு உயிரியலின் ஒரு இடைநிலை துறையாகும். இது மரபணுக்களின் கூட்டமைப்பு செயல்பாடு பரிணாம அமைப்பின் மற்றும் எடிட்டிங் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்ற ஒரு துறையாக உள்ளது. ஒரு ஜினோம் என்பது ஒரு உயிரினத்தின் முழுமையான டி என் ஏ தொகுப்பைக் குறிக்கும் அதன் அனைத்து மரபணுக்கள் அதன் படிநிலை முப்பரிமான கட்டமைப்பு உள்ளமைவு ஆகியவற்றை முழுமையாக நாம் புரிந்து கொள்ளும் பொழுது அவற்றில் ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வந்து இதன்மூலம் பயிர்களினுடைய சுகாதார அந்தஸ்தை மேம்படுத்துவது என்பது தான் தாவர ஜீனோமிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

என்சைம்கள் மற்றும் தூது மூலக்கூறுகளின் உதவியுடன் புரதங்களின் உற்பத்தியை மரபணுக்கள் இயக்குகின்றன அதனையொட்டி உறுப்புகள் மற்றும் திசுக்கள் போன்ற உடல் அமைப்புகளை உயிரினங்களுக்கு உருவாக்குவது போலவே தானியங்களுக்கும் உருவாக்குகின்றன. தாவர ஜீனோமிக்ஸ் இந்த தாவரங்களை பருப்பு வகைகளை உண்ணத்தகுந்த காய்கறிகளில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் துறையாகும். ஒரு மரபணுவின் விளைவு மற்றொன்றின்மீது ஏற்படுவதை ஏபிஸ்டாஸிஸ் என்று அழைக்கிறார்கள். அதே சமயத்தில் ஒரு மரபணு ஒன்றுக்கு மேற்பட்ட பண்புகளை பாதிக்குமேயானால் அதை பிலோட்ரோபி என்று அழைக்கிறார்கள். இந்த மரபணு மாற்ற துறையில் ஹிட்ரோசிஸ் என்கிற ஒரு பதம் பயன்படுத்தப்படுகிறது. இதுதான் கலப்பின வீரிய வித்துக்களை நோக்கி நம்மை எடுத்துச் செல்லும் துறையாகும். சாதாரண உணவு உற்பத்தியை விட பல மடங்கு அதிகமான ஆரோக்கியமான உணவு அறுவடை இன்றைய தேவை.

  மூலக்கூறு உயிரியல் ,மரபியல் ஆகியவற்றின் இந்திய பெண் விஞ்ஞானி பரம்ஜித் குரானா - Paramjit Khurana - molecular biology and genetics - https://bookday.in/

விவசாயம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய வாழ்வாதாரங்களில் ஒன்று மண்ணின் PH பூச்சிகள் தாக்காமல் இருக்கவும் தாக்கினாலும் அதை தாங்கிக் கொள்ளும் சக்தி உடையதாகவும் தாவரங்களை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கிறது. ஏதாவது ஒரு சிறு பூச்சியினுடைய பாதிப்பு மிகப்பெரிய அளவில் நம்முடைய உணவுத் துறையை பாதிக்கக்கூடும். ஒவ்வொரு சுற்றுசூழல் அழுத்தமும் தாவரங்களின் உருவ இயல் உடலியல் உயிர் வேதியியல் மூலக்கூறு மற்றும் செல்லுலார் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் அவை உயிர்வாழ மிகத் தேவையான பல அம்சங்களை கண்டுபிடித்து இந்தியாவின் முன்னணி நிபுணராகத் திகழ்பவர் தான் பரம்ஜித் குரானா – Paramjit Khurana. தாவர மரபியல் பயிர்கள் மற்றும் நிலையான விவசாயத்தில் அழுத்த சகிப்புத்தன்மையை அதிகரிப்பதில் பெரிய பங்கை அவர் செய்துள்ளார்.1956 இந்திய சுதந்திர தினத்தன்று அவர் டில்லியில் ஒரு மளிகைக் கடைக்காரருக்கு மகளாக பிறந்தார்.

புது தில்லியில் உள்ள ஜி லில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்று 1972 ல் மேல்நிலை பள்ளியை முடித்தார். சிறந்த மாணவர் விருதை பெற்றார் அறிவியல் ஆர்வத்துடன் அவர் புது டில்லி பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டத்திற்கு தாவரவியல் பாடத்தை தேர்வு செய்தார். 1977 ஆம் ஆண்டு முதல் அறிவியல் பட்டம் பெற்று அதற்கு இணையான தேசிய தகுதி விருதையும் பெற்றார். முதுகலை பட்டப்படிப்புக்குப் பிறகு குரானா அம்மையார் முனைவர் பட்ட ஆய்வில் இணைந்தார். தாவர உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் பிரிவில் அவர் பணியாற்றத் தொடங்கினார். 1984 ஆம் ஆண்டு புது டில்லியில் SGTB கல்சா கல்லூரியில் தாவர உயிரியல் துறையில் தாவர மூலக்கூற்று உயிரியல், தாவர மரபியல் ,உயிரணு உயிரியல் மற்றும் தாவர உடலியல் கற்பிக்கும் விரிவுரையாளராகவும் பதவியேற்றார்.

1987 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கிழக்கு லான்சிங் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சி இணை பதவியை அவர் ஏற்றுக்கொண்டார். பருப்பு வகை பாக்டீரியா ரைசோபியம் ஆகியவற்றின் கூட்டு வாழ்வு உறவை பற்றி ஆய்வு செய்தார் அவரது பணி செல் டூ செல் தொடர்பு மற்றும் செல் சுவர் போரோ சிட்டியை மத்தியஸ்தம் செய்வதில் சம்வெட்டின் எனும் ஒரு முக்கிய வேதிப் பொருளின் பங்கை ஆராய்ந்து அறிந்தது கோதுமையை மேலும் மேலும் பதப்படுத்தி வேதி முறைகளுக்கு உட்படுத்தும் போது அது மைதாவாக மாறுகிறது. மைதா கோதுமை தாவரத்தின் உடைய ஒரு கிருமியாக எண்டோஸ்பெர்ம்லில்  இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆட்டா என்று அழைக்கப்படும் கோதுமை மிக குறைந்த அளவு சுத்திகரிக்கப்பட்டு ஓரளவுக்கு சத்துக்களுடன் சந்தையில் இறக்கப்படுகிறது. ஆனால் மைதாவின் கதை வேறு மைதாவை அதிகமாக அரைத்து வெளுத்து வெள்ளை மாவாக்கி வெண்மையாக்கும் செயல்பாட்டில் சேர்க்கப்படும் பென்சாயில் பெராக்சைடு என்கின்ற வேதிப்பொருளும் அலோக்சன் போன்ற ரசாயனங்களும் கலந்திருப்பதால் மைதா எந்தெந்த வகைகளில் கோதுமைகளினுடைய மோசமான பிரதிநிதி என்பதை குரானா அம்மையார் உலகிற்கு அறிவித்தார்.

அமெரிக்காவில் இருந்து தன்னுடைய புது டெல்லி பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறைக்கு அவர் திரும்பினார். 2016 முதல் தாவர ஆய்வகத்தினுடைய தலைவராக இருக்கிறார். இந்திய விவசாயத்திற்கு உதவியாக எல்லா தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் தரிசு நிலங்களிலும் கூட உற்பத்தியாகும் தாவரங்களை அறிமுகப்படுத்துவது அவருடைய நோக்கம் அப்படித்தான் மல்பேரியையும் புதிய வகை தக்காளியையும் அவர் அறிமுகம் செய்தார். இந்திய கோதுமையை மரபணு ரீதியில் புழுக்களுக்கு எதிரான சுயசார்பு தாவரமாக மாற்றினார். இன்று அவருடைய திட்டப்படி மல்பேரி விவசாயம் மூலம் விவசாயிகளுக்கு தீவனம் எரிபொருள் மற்றும் உரம் என்று யாவும் கிடைக்கிறது. மத்திய பட்டுப்பூச்சி வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் அவருடைய உதவியை நாடியபோது மாற்றி அமைக்கப்பட்ட மல்பெரியை நிலத்தடி நீர் குறைவாக உள்ள தரிசு நிலங்களிலும் பயிரிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டு பட்டுப்பூச்சி வளர்ப்புக்கு மல்பேரின் பங்குகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

  மூலக்கூறு உயிரியல் ,மரபியல் ஆகியவற்றின் இந்திய பெண் விஞ்ஞானி பரம்ஜித் குரானா - Paramjit Khurana - molecular biology and genetics - https://bookday.in/
இந்தியாவின் தேசிய அறிவியல் அகாடமி, இந்திய அறிவியல் அகாடமி, ஆகியவற்றில் கௌரவ உறுப்பினராக இருக்கிறார். இத்தாலி நாட்டிலிருந்து உயரிய அறிவியல் விருது அவருக்கு வழங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு இந்தியாவினுடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் பேராசிரியர் ஜே சி போஸ் பெல்லோஷிப் பெற்றார். பூனா அளவில் கோதுமை குறித்த ஆராய்ச்சியில் மிக பெரிய பெயர் பெற்ற மரபணுவியல் விஞ்ஞானி பரம்ஜித் குரானா – Paramjit Khurana என்பது நமக்கெல்லாம் பெருமை.

கட்டுரையாளர் :

  மூலக்கூறு உயிரியல் ,மரபியல் ஆகியவற்றின் இந்திய பெண் விஞ்ஞானி பரம்ஜித் குரானா - Paramjit Khurana - molecular biology and genetics - https://bookday.in/
ஆயிஷா இரா. நடராசன்

 

 

 

 

 

 

 

 

 

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் அறிந்த இந்திய நுண்ணுயிரியாளர் ஆசாத் உல்லா கான்.
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 4 Comments

4 Comments

  1. HariKrishnan S

    பரம்ஜித் குரோனா அம்மையார் அவர்கள் ஜெனோமிக் மரபணுமாற்று இயலில் ஹிட்டிரோஸிஸ் மூலம் பூச்சிகள் தாக்காமல் இருக்கவும், தாக்கினாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி உடையதாகவும் தாவரங்களை உற்பத்தி செய்ய தாவர மரபியல் பயிர்கள் அழுத்த சகிப்புத் தன்மையை அதிகரிப்பதில் பெரும் பங்காற்றியுள்ளார்.

    நம் நாட்டு தேசிய விருதுகள் மட்டுமல்லாமல் இத்தாலி நாட்டினரும் விருதுகள் கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளனர்.

    மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டத்தில் பூச்சிகளால் சேதாரம் ஆவதை தவிர்க்க முடியாது. அதிலிருந்து மீண்டு வர மரபியல் ஆய்வு செய்து மீட்டு பெரும் இழப்புகளை தவிர்த்துள்ளார்.

    பல நாடுகளில் விருது கண்ட இவரை நம் விஞ்ஞானியை அறிமுகம் செய்து சிறப்பாக எழுதியுள்ளார்.

    இரவு பகலாக தினமும் நம் நாட்டு விஞ்ஞானிகள் குறித்த தகவல்கள் சேகரித்து நமக்கு ஒவ்வொரு நாளும் கட்டுரை எழுதி வரும் முனைவர்.ஆயிஷா. நடராசன் சார் அவர்களின் உழைப்பு மகத்தானது.

    தங்கள் உழைப்பிற்கு தலைவணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏

  2. பா. கோபாலன்

    ஊயிரியல் தொழில்நுட்ப வல்லுனர் பரம்ஜித் குரோனா அவர்களின் ஆய்வுகளை விளக்கி கோர்வையாக எடுத்துச் சொல்லும் கட்டுரை. அம்மையார் அவர்கள் தாவர மரபியல் மற்றும் சீரிபயோடெக்னாலஜி எனப்படும் பட்டுப்பூச்சி வளர்ப்பு மரபியலில் கண்டறிந்த புது முறைகள் இன்று விவசாயிகளுக்கு உதவுகின்றன என்பதறிந்து மகிழ்ச்சி. மைதா தயாரிப்பில் வேதிப்பொருட்கள் உபயோகிக்கப் படுவதால் உடல்நலம் பதிப்படையும் என்பது சென்ற சில வருடங்களாகவே விஞ்ஞானிகள் சொல்லிவந்த கருத்துதான். ஆராய்ச்சி மூலம் இதை உறுதிசெய்த அம்மையார் ஏன் அரசாங்கத்துக்கு எடுத்துச் சொல்லி ‘பிளீச்’ செய்த மைதாவின் உபயோகத்தை கட்டுப்படுத்த வழியுறுத்தவில்லை என்று புரியவில்லை!

  3. Dr.P.Sasikumar

    அம்மையாரின் ஆராய்ச்சிகளை பற்றி அறிந்தபோது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஈடு கொடுக்க நவீன விவசாயம் முறைகள் தேவை. அதற்கான துறையில் இவர் வேலை செய்வது இந்தியா போன்ற நாடுகளுக்கு தேவையான ஒன்று. மைதாவைப் பற்றி இவர் கண்டறிந்த ஆராய்ச்சிகள் பொதுஜன மக்களுக்கு பயன்படக்கூடிய ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *