மானதா தேவி எழுதிய பரத்தைத் தொழிலில் ஒரு படித்த பெண் - நூல் அறிமுகம் | Parathai Thozhilil Oru Paditha Pen - Manada Devi - https://bookday.in/

பரத்தைத் தொழிலில் ஒரு படித்த பெண் – நூல் அறிமுகம்

பரத்தைத் தொழிலில் ஒரு படித்த பெண் – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் : 

நூல் : பரத்தைத் தொழிலில் ஒரு படித்த பெண்

ஆசிரியர் : மானதா தேவி

வெளியீடு : காலச்சுவடு இந்திய கிளாசிக் தன் வரலாறு வெளியீடு

தமிழில் : சசிகலா பாபு

பக்கங்கள் : 142

விலை : ரூபாய் 190

வசதி மிக்க உயர் வகுப்பில் பிறந்த மானதா தேவி, தன் சிறு வயதிலேயே தாயை இழந்து விடுகிறார். தந்தையின் மறுமணத்தின் காரணமாக வந்த சித்தி ஒன்றும் வழக்கமான கொடுமைக்காரர் அல்ல. இவரை விட சில வயதுகள்தான் மூத்தவர் என்றாலும் இருவருக்கும் நெருக்கம் இல்லை. நிறையப் பணம். அப்பா தந்த நிறைய சுதந்திரம். அதனால் ஒரு தவறான முடிவை எடுத்து வீட்டை விட்டு வெளியே வந்து, நம்பி வந்தவனால் கைவிடப்பட்டு, பாலியல் தொழிலை வந்தடைகிறார். அவரது அனுபவங்களின் தொகுப்பு இந்தப் புத்தகம்.

கவனத்தில் கொள்ளுங்கள். கதை நிகழ்வது இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில்.

வழக்கமாக பாலியல் தொழிலுக்கு வருபவர்கள், தான் தொழிலுக்கு வந்ததற்கு மிக அடிப்படையான காரணமாக செல்வது வறுமை. ஆனால் தனது இந்த நிலைக்கு காரணம் கட்டுப்பாடற்ற காம உணர்வுகள் பீரிட்டெழும் தனது உடல் தான் என்பதை பல இடங்களில் அவர் ஒத்துக் கொள்கிறார்.

நல்ல குடும்பத்தில் பிறந்தாலும்,பாலியல் தொழிலாளிக்கு உரிய சாகசங்களை அவர் இயல்பாக கைக் கொள்கிறார். தன்னை நாடி வந்த ஆண்களிடமிருந்து ஏராளமான பணத்தைக் கைப்பற்றுகிறார்.

தொழில் தந்த பரிசாக அடிக்கடி சீர்கேடுடையும் உடலுடன் போராடுகிறார்.

இதுவரை அறியாத ஒரு விஷயமாக, பாலியல் தொழிலாளிகள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க வைக்கப்பட்டதை, அதனுடைய நல்ல, தீய விளைவுகளை இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது.

மானதா தேவி என்று ஒருவர் உண்மையிலேயே இருந்தாரா, இல்லையா? என்ற கேள்வியும் இந்தப் புத்தகத்தை மேலும் சுவாரசியமாக ஆக்குகிறது.

தன் வாழ்வில், வற்புறுத்தலின் பேரிலும், விரும்பியும் பாலியல் தொழிலுக்கு வந்த எத்தனையோ குடும்பப் பெண்களைப் பார்த்த மானதா தேவிக்கு, நான் உயிரோடு இருக்கும் வரை என் தலையில் இருக்கும் ஒற்றை மயிரைக் கூட அவர்களைத் தொட விடமாட்டேன் என்ற சபதம் செய்திருக்கிறேன் என்று சொன்ன குடும்பப் பெண்ணான அபராஜிதா மிகப் பெரிய குற்ற உணர்வை உண்டு பண்ணுகிறாள்.

மானதா இப்படிச் சொல்கிறார்.தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்த தேவி அவள். நானோ, நரகத்து நரகலில் நெளியும் புழு. இந்துச் சமூகம் என்னைப் போன்ற களங்கப் பிறவியான பெண்களை மட்டும் பெற்றெடுக்கவில்லை. அபராஜிதா போன்ற கற்புக்கரசிகளையும் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆனால் அந்த அபராஜிதா, ஒத்துழைக்காததால், கணவரது குடும்பத்தால் தீ வைத்து கொளுத்தப்படுகிறாள்.

இந்தச் சமுதாயத்தில் எனக்கு இடம் இல்லை. ஆனால் என்னைப் போன்ற பெண்களின் காலடியில், தங்கள் மானம், மரியாதை, சொத்து, உடல், பொருள், ஆவி என்று சகலத்தையும் வைத்துவிட்ட ஆண்களை இதே சமுதாயம் உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்க்கிறது. அவர்கள் கவிஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும் போற்றப்படுகிறார்கள். அரசியல்வாதிகளாகவும், தேசபக்தர்களாகவும் புகழப்படுகிறார்கள். பணக்காரர்களாகவும், உன்னதமானவர்களாகவும் மதிக்கப்படுகிறார்கள். மக்களுக்கு வழிகாட்டும் குருமார்களாக மாறியிருக்கும் சாதுக்களும் பூசாரிகளும் கூட இதில் உண்டு. சமுதாயம் இவர்களைப் பற்றி மௌனம் சாதிக்கிறது. நீதிமன்றங்களிலும் கவுன்சில்களிலும், நகர சபைகளிலும் இவர்கள் வகிக்கும் பதவிகளுக்கு எந்த வில்லங்கமும் வராது. நாங்களும் அறியாப் பருவத்தில் தெரியாமல் செய்த தவறுக்காக நரகத் தீயில் நித்தமும் எரிந்து கொண்டிருக்கிறோம். உங்கள் சமுதாயம் நீதியை நிலைநாட்டும் லட்சணம் இதுதான்.

மானதா தேவியின் இந்த வார்த்தைகளுக்கு உங்களுடைய பதில் என்ன?

நூல் அறிமுகம் எழுதியவர் : 

மானதா தேவி எழுதிய பரத்தைத் தொழிலில் ஒரு படித்த பெண் - நூல் அறிமுகம் | Parathai Thozhilil Oru Paditha Pen - Manada Devi - https://bookday.in/

ஜி சிவக்குமார்
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர்.வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.தற்போது மதுரையில் நீர்வளத் துறையில் உதவி இயக்குனராகப் பணி புரிந்து வருகிறார்.கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதோடு,பயணங்கள் செய்வதிலும் புகைப்படம் எடுப்பதிலும் விருப்பம் கொண்டவர்.ஆனந்த விகடன், கணையாழி, காணி நிலம்,புரவி இதழ்களிலும், கொலுசு,கோடுகள் முதலான மின் இதழ்களிலும் இவரது
கவிதைகள் சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. வெம்புகரி என்ற சிறுகதைத் தொகுப்பு மற்றும் புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை,ஆத்மாநாமின் கடவுள்,தோடுடைய செவியள் ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *