Part 2- இது மிகப் பெரிய சமூகப் பிரச்சினைகளுக்கான காலமாக இருக்கப் போகிறது – கேரள நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

Part 2- இது மிகப் பெரிய சமூகப் பிரச்சினைகளுக்கான காலமாக இருக்கப் போகிறது – கேரள நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

Part 2- இது மிகப் பெரிய சமூகப் பிரச்சினைகளுக்கான காலமாக இருக்கப் போகிறது – கேரள நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

மத்திய அரசின் அணுகுமுறை

இந்த ஆரம்ப நாட்களில், பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் மீது கோவிட்-19 மற்றும் ஊரடங்கு ஆகியவை ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பணப் பரிமாற்றம், அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளின் மூலம் மாநில அரசால் இதுவரையிலும் நிர்வகிக்க முடிந்திருக்கிறது.  இத்தகைய ஆதரவை   கேரளாவால்  எவ்வளவு  காலத்திற்குத் தர முடியும்?

உண்மையில் இந்த உதவிகளை இந்திய அரசே வழங்க வேண்டும். வெறுமனே அமைதியான பார்வையாளர்களாக மட்டும் அவர்கள் இருக்க முடியாது. பாஜக அல்லது காங்கிரஸ் என்று எந்தக் கட்சியாலும் ஆளப்படுகின்ற அனைத்து மாநிலங்களுமே தங்களிடம் பணம் இல்லை என்று கூறுகின்றன. வருமானம் எதுவுமற்ற நிலையே இப்போது உள்ளது. எனவே மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறிது காலத்திற்குப் பிறகு, கடுமையான நிதி நெருக்கடி ஏற்படப் போகிறது. நீண்ட சரிவை நாம் சந்திக்கப் போகிறோம். அதிலிருந்து இந்தியா மீளப் போவதில்லை. இந்த உலகமும் அந்தச் சரிவிலிருந்து மீளப் போவதில்லை. மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல், மாநிலங்களால் இந்த சரிவைச் சரி செய்ய முடியாது. மத்திய அரசு ஏராளமான பணத்தை தருவதால் மட்டுமே,  பொருளாதாரம் மீட்டெடுக்கப்படப் போவதில்லை. அவ்வாறு எதுவும் நடக்கப் போவதில்லை. பணம் வழங்குவது நிவாரணத்திற்காக மட்டுமே. பொருட்கள் விநியோகத்திற்கான சங்கிலிகள் உடைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசும், மாநிலங்களும் இணைந்து ஒரு நிகழ்ச்சி நிரலை உருவாக்க வேண்டும். மாநிலத்தின் பற்றாக்குறை உச்சவரம்பை  குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து சதவீதமாக உயர்த்த வேண்டும். மாநிலங்களுக்குத் தர வேண்டிய அனைத்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையும் உடனடியாகத் தர வேண்டும். சுகாதார அமைப்புகளுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கித் தர வேண்டும். இவற்றையெல்லாம் அவர்கள் செய்ய வேண்டியிருக்கும்; இவற்றைச் செய்யுமாறு அவர்கள் நிர்பந்திக்கப்படுவார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

தெளிவாகச் செய்ய வேண்டிய காரியமாகத் தோன்றுகின்ற இதைச் செய்வதற்கு மத்திய அரசு  ஏன்  தயங்குகிறது  என்று  நினைக்கிறீர்கள்?

Even Before The Results Are Out This Kerala Candidate Is Planting ...

அது கருத்தியல் ரீதியானது. பழைய நவீனதாராளமய கருத்தோட்டத்திற்குள் இன்னும் தங்களைத் தொலைத்துக் கொண்டிருப்பவர்கள், பணவீக்கம், அதிக வட்டி விகிதம் மற்றும் பல பிரச்சனைகளுக்கு நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு வழிவகுத்து விடும் என்று கருதுபவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அது இங்கே பொருந்தாது என்பதால், அவ்வாறான கருத்து தெளிவான சிந்தனையற்றதாகவே இருக்கிறது. இது குழப்பமான சிந்தனையாகும். இந்த உலகைப் பாருங்கள். உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது.  இந்திய அரசாங்கமும்  தன்னை எப்படியாவது மாற்றிக் கொள்ள வேண்டும்.

அரசாங்கங்கள் இப்போது அதிகமாகச் செலவு செய்ய வேண்டியிருக்கின்ற நிலையில், மத்திய அரசு செலவினங்களைக் குறைக்குமாறு மாநிலங்களைக் கட்டாயப்படுத்துகிறது என்று  நீங்கள் புகார் கூறுகிறீர்கள்.

அதைத்தான் அவர்கள் செய்து வருகிறார்கள். அவர்கள் [நிதி] கொடுக்கவில்லை. மார்ச் மாதத்தைச் சேர்த்தால், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மட்டும் ரூ.50,000 கோடி அளவிற்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு தர வேண்டியுள்ளது. ஏப்ரல் வந்தால், அது இன்னும் அதிகமாகும். ஜிஎஸ்டி வருமானம் இருக்காது என்பதால், அவர்கள்  அதைத் தரமாட்டார்கள். மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை  நான்கு சதவீதத்திற்கு மேல் சென்றுள்ளது என்றாலும், அது மாநிலங்களை அதிக கடன் வாங்க அனுமதிக்காது. பெரும்பாலான மாநில அரசுகள் செலவினங்களைக் குறைப்பதற்கான எளிதான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளன.

பல மேம்பாட்டுத் திட்டங்களை மாநில அரசுகள் கைவிட்டுள்ளன. ஐந்து மாநிலங்கள் ஊழியர்களின் சம்பளத்தை வெட்டியுள்ளன. மத்திய அரசு செலவினங்களை அதிகரித்துக் கொண்டு போகின்ற நிலையில், மாநில அரசுகளை செலவினங்களைக் குறைக்குமாறு கட்டாயப்படுத்துவது முற்றிலும் பைத்தியக்காரத்தனம். இதற்கு எந்த பொருளாதார அர்த்தமும் இருக்கப் போவதில்லை. மாநிலங்களும், மத்திய அரசும் இணைந்து பொருளாதாரத்தை முடுக்கி விடுவதற்கான திட்டத்தை கொண்டிருக்க  வேண்டும்.

கேரளா சார்பில் ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ள மாநில நிதி அமைச்சர்களின் கருத்தரங்கின் நோக்கம் என்ன?

Income from Gulf hits a new low; Covid 19 will turn villain in ...

மத்திய அரசு தன்னுடைய வாக்குறுதியின் மீது கவனம் செலுத்தவில்லை என்பதால், ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில்  நாங்கள் ஒரு வெபினாருக்கு ஏற்பாடு  செய்து கொண்டிருக்கிறோம். அனைத்து மாநில நிதி அமைச்சர்களையும் அந்த வெபினார் மேடையில் ஒன்றாக வருமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். கருத்துக்களை பரிமாறிக்கொள்வதைத் தவிர வேறு முடிவுகள் எதுவும் எடுக்கப்படப் போவதில்லை. நிச்சயமாக சிலருக்கு அரசியல் காரணங்கள் இருக்கும் என்பதால், எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனாலும் 10 அல்லது 12 அமைச்சர்கள் வருவார்கள் என்று நான் நம்புகிறேன். கல்வியாளர்கள், வல்லுநர்கள், நிதி அதிகாரிகள், பத்திரிகையாளர்களையும் நாங்கள் அழைத்திருக்கிறோம். எல்லோரும் உள்நுழைந்து பார்க்கும் வகையில் இது நேரடியாக ஒளிபரப்பப்படும். சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தேசிய அளவிலான விவாதத்திற்கு கொண்டு வருவதற்கு இது உதவும் என்று நம்புகிறேன்.

இதுபோன்ற குறைகளை மற்ற மாநிலங்களும் கொண்டிருக்கின்றன என்றும், அவை உங்களுடன் உடன்படுகின்றன என்றும் நினைக்கிறீர்களா?

தனிப்பட்ட முறையில் எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சி ஆளுகின்ற பல மாநிலங்களிடமும் தாங்கள் நினைப்பதைச் சொல்வதற்கான சுதந்திரம் இருந்தாலும், மத்திய அரசிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதாக தாங்கள் நினைக்கின்ற அரங்கில்,  பொதுவெளியில் சேர்வதற்கு  விரும்பவில்லை. கடந்த காலங்களில் இதுபோன்ற முன் முயற்சிகளை கேரளா மேற்கொண்ட போதெல்லாம், அது நடக்கவில்லை. மத்திய அரசைத்  தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைக்கின்ற பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களும் இருக்கின்றன. ஆனாலும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள், டெல்லி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் இணையும் என்று நம்புகிறேன்.

பரிசோதனைக் கருவிகள்

எந்தவொரு சமூகத்திலும் கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு பரவலான பரிசோதனை முக்கியமானது என்பது நன்கு அறியப்பட்டிருக்கிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ​​கேரளா அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளை நடத்தியுள்ளது. ஆனால் செய்யப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை  இன்னும் கொஞ்சமாகத்தான் இருக்கிறது இல்லையா? அனைத்தும்  அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது  என்று முடிவு செய்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறீர்களா?

இல்லை. இப்போது பரிசோதனைகள் இல்லாமல், நாங்கள் முடங்கிக் கிடக்கிறோம். பரிசோதனைக்கான கருவிகளை நாங்கள் தயாரிப்பதில்லை. சீனா அல்லது கொரியா தயாரிக்கின்ற பரிசோதனை கருவிகள் அனைத்தையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் தனதாக்கிக் கொள்கிறார். ஏற்கனவே இந்தியாவில் சில மாநிலங்களில், எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு மற்றும் டெல்லி மாநிலங்கள் வாங்கிய பரிசோதனைக் கருவிகளை, அமெரிக்கா எடுத்துச் சென்று விட்டதாக புகார் எழுந்தது என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். இப்போது உலகில் பரிசோதனைகள் மிகவும் குறைவாகவே நடக்கின்றன.  எங்களுக்கும் அது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.

Mumbai: Patient alleges overcharging at private hospital for COVID ...

இந்தியா ஒரு முக்கியமான பொருளாதார சக்தி. போர்க்கால நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இது ஒன்றும் தீர்க்க முடியாத தொழில்நுட்பரீதியான சவால் இல்லை. நமக்குத் தேவையான பரிசோதனைக் கருவிகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகின்ற வகையில், இந்திய உயிர்மருத்துவத் துறைக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும். உண்மையில், அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த இந்திய மருந்துத் துறைக்கு ஆதரவளிப்பது ஊரடங்கிலிருந்து இந்தியா வெளியேறுவதற்கான உத்தியின் முக்கிய அங்கமாக இருக்கலாம். சீனா முயற்சித்ததைப்  போலவே, நாமும் அதை வேகமாகச் செய்தால், நமக்கென்று ஒரு சந்தை இருக்கும்.

மாநிலங்கள் தாமாக இப்போது பரிசோதனைக் கருவிகளை வாங்குகின்றனவா?  எங்கிருந்து அவற்றை வாங்குகின்றன?

சீனா, தென் கொரியாவிலிருந்து வாங்குகிறார்கள். இப்போது அவற்றை நேரடியாக மாநிலங்கள் பெறக்கூடாது என்றும், மத்திய அரசின் மூலமாகவே நாங்கள் வாங்க வேண்டும் என்றும் இந்திய அரசு கூறியுள்ளது. எனவே இப்போது முற்றிலும் மத்திய அரசின் தயவிலேயே நாங்கள் இருக்கிறோம். மாநிலங்களுக்கு இந்த சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். மத்திய அரசும் எல்லா வகைகளிலும் அவற்றைப் பெற்றுக் கொள்ளட்டும்.

அதிக வென்டிலேட்டர்கள் அல்லது அதிகப்படியான மருந்து உங்களிடம் இருக்கிறது என்று சொல்லக்கூடிய நிலையில்  இப்போது யாரும் இல்லை.  எனவே  மத்திய அரசு ஏகபோக உரிமை கொண்டு, அதிகாரத்துவ தடைகளை உருவாக்குவதற்கான காரணம் எதுவும் இப்போது இருக்கவில்லை. எனவே பழைய செயல்முறையே தொடரட்டும். அதிகமாக கொள்முதல் செய்யக்கூடிய எந்த மாநிலமும் அதைச் செய்து கொள்ளட்டும்.

கேரளா ஒரு நுகர்வோர் மாநிலம். கடந்த காலங்களில் அது கடுமையான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை நீண்ட காலத்திற்கு அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று  நீங்கள் நினைக்கிறீர்களா?

ஆம். ஏனெனில் இது ஒரு நுகர்வோர் மாநிலம் என்பதால், குறுகிய காலத்திற்கு உணவு பற்றாக்குறை இருந்தால்கூட நாம் கடுமையான பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். பொருட்களின் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடரும் போது, ​​வீட்டில் உள்ள அலமாரிகள் காலியாகி விடும். பல பொருட்கள் பற்றாக்குறையாகிவிடும். உணவைக்கூட வெளியில் இருந்தே கொண்டு வர வேண்டியிருக்கும்.

கேரளாவில் அரசு ஊழியர்களின் ஒரு மாத ...

ஆனால் முடிந்தவரை நாங்கள் உணவுப் பொருட்களைச் சேமித்து வருகிறோம். சில வழிகளில் கேரளா தன்னிறைவு அடைவதற்கான  வாய்ப்பை இது வழங்குகிறது. எனவே ஊரடங்கின் போது, மக்கள் வீட்டிற்குள் இருக்கின்ற நிலையில்  ’உங்களுக்குத் தேவையான காய்கறிகளை வளர்த்துக் கொள்ளுங்கள்’ என்ற பிரச்சாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். யாருக்குத் தெரியும், ஊரடங்கு முடிந்த பிறகு, கேரள மக்கள் மீண்டும் விவசாயத்திற்கு திரும்புகின்ற நம்ப முடியாத முடிவை  ஒருவேளை நீங்கள் காண நேரிடலாம்.

COVID-19 நெருக்கடி உலகம் முழுவதும் இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் வேலை இழப்பிற்கு வழிவகுத்துள்ளது. கேரளாவில் வேலைகளின் மீது என்ன பாதிப்பு இருக்கும்?

இது வரலாற்றில் மிகப்பெரிய சரிவாக இருக்கப்போகிறது. இது ஏற்கனவே இருந்து வருகின்றது. இந்த காலாண்டில், சீனா மற்றும் அமெரிக்கா உட்பட அனைத்து முன்னேறிய பொருளாதார நாடுகளும் எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றன. கோவிட்-19 இரண்டு அல்லது மூன்று மாதங்களில் கட்டுப்படுத்தப்பட்டால், இந்த ஆண்டில் நான்கு, ஐந்து அல்லது ஆறு சதவீத வளர்ச்சி குறைவு இருக்கும். ஆனால் தொற்றுநோய் தொடருமேயானால், நமக்கு மிகப்பெரிய பிரச்சினை உள்ளது.  மிகப் பெரிய பிரச்ச்னை. பொருளாதாரப் பேரழிவிலிருந்து பொருளாதாரத்தை மீட்க நீண்ட காலம் ஆகலாம்.

கேரளாவில் ஏற்படப் போகின்ற பாதிப்பு?

கேரளாவில், அது  நிச்சயமாக எதிர்மறையான வளர்ச்சியாகவே இருக்கும். நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் ரூ.7.5 லட்சம் கோடி.  நாம் அதில்  பாதியை இழக்க நேரிடும்.

எந்த பிரிவினர் அதிகம் பாதிக்கப்படப் போகின்றார்கள்?

சுற்றுலா மற்றும் சேவைத் துறைகளின் மீது மிகப் பெரிய தாக்கம் இருக்கும். அந்த தாக்கம் வெளிப்புறக் காரணிகளைச் சார்ந்ததாக இருக்கும். சந்தை செயலிழந்து விட்டதால் அனைத்து ஏற்றுமதி தொழில் நிறுவனங்களும் மந்த நிலையிலேயே இருக்கும். இடைநிலை பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் பலவற்றை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். இப்போது அவற்றின் தேவை இல்லாமல் போய்விட்டது. எனவே, தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்று யாருக்குமே தெரியாது. வர்த்தகப் பயிர்களுக்கான அகில இந்தியத் தேவை குறையப் போகிறது. சர்வதேச சந்தையில் விலைகள் கடுமையாக குறைந்து போவதால், ஊரடங்கு முடிந்ததும்  வெளியில் இருந்து இறக்குமதி அதிகரிக்கும்.

Kerala Is Leading Fight Against Coronavirus

கேரளா மிகப் பெரிய பிரச்சினையை எதிர்கொள்ளப் போகிறது. அமைப்புசாரா துறைகளுக்கும் இது கஷ்ட காலமாக இருக்கப் போகிறது. இந்த நிலைமை எவ்வளவு காலத்திற்குத் தொடரும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால், வரவிருக்கும் அந்த நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை ஒருவரால் கற்பனை செய்யவோ அல்லது வரைபடமாக்கவோ முடியாது. இந்த நிலை நீடிக்குமென்றால், கற்பனை செய்யவோ திட்டமிடவோ முடியாத சூழ்நிலை ஏற்படும். என்ன நடக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்வதற்காக, அனைவருக்குமான குறைந்தபட்ச தேவையை நாம் வழங்க வேண்டும்.

எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டிய காலகட்டத்தில், இது மிகப்பெரிய சமூகப் பிரச்சினைகளுக்கான காலமாக இருக்கப்போகிறது. இதுபோன்று நம் வாழ்நாளில் ஏற்கனவே நடந்திருக்கவில்லை என்பதால், உண்மையில் யாருக்கும் தெரியாது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், இடைக்கால யுகத்திலும் இது போன்று நடந்துள்ளது. உலகமயமாக்கப்பட்ட உலகில் உலகளாவிய தொற்றுநோய் ஏற்படும் போது என்ன நடக்கும்? நமக்குத் தெரியாது. அதன் தாக்கம் வெளிப்படுவதற்கு நீண்ட காலம் ஆகப் போகிறது. அப்போது கேரளாவோ அல்லது இந்தியாவோ  நிச்சயம் பாதிக்கப்படாமல் தனித்து இருக்காது.

கோவிட்-19ஐக் கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதாரத்தைச் செயல்பட உதவுவதற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தப் போவதாக நீங்கள் சொன்னீர்கள். அதற்கான உங்களுடைய உடனடி முன்னுரிமைகள் யாவை?

இப்போது நோயைக் கட்டுப்படுத்துவதில், அதை முழுமையாக அகற்றுவதில் மட்டுமே கவனம் இருக்கிறது.. நாங்கள் ஏற்கனவே அந்தப் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அதிலிருந்து வெளியேறுகின்ற உத்தி எங்களிடம் உள்ளது. அதைச் செய்து கொண்டிருக்கிறோம். இங்கே திரும்பி வருகின்ற புலம்பெயர்ந்தோரின் அடுத்த அலை கேரளாவுக்கு வரும்போது என்ன நடக்கப் போகிறது என்பதை நாங்கள் கண்காணித்துக்கொண்டிருக்கிறோம். மாநிலத்தில் நிலையற்ற சூழ்நிலை நிலவுகிறது. ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்றவாறு தற்செயல் திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றன. அதுதான் இப்போதைய தேவை.

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு மட்டும் நாம் திட்டமிட முடியாது. இது நீடித்தது என்று வைத்துக்கொள்வோம், பொருளாதாரத்திற்கு எவ்வாறு வழியேற்படுத்தித் தரப் போகிறீர்கள்? அதை நிரந்தரமாக மூடி வைக்க முடியாது. எனவே, தலைகீழ் தனிமைப்படுத்தலை அறிமுகப்படுத்துவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. பெரியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை தனிமைப்படுத்திப் பாதுகாக்கவும், மற்றவர்களை வெளியே சென்று வேலை செய்ய அனுமதிக்கவும் வேண்டும். ஆனால் இது ஒருவகையிலான இறுதி நிலையாகும். பிற வகையான நிலைகளும் இருக்கின்றன. இந்த விருப்பத்தேர்வுகளை நாம் கவனித்துப் பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

நேர்காணல் – ஆர். கிருஷ்ணகுமார்

ஃப்ரண்ட்லைன் இதழ், 2020 மே 8, 2020 பக்கம் 24-28

தமிழில்

முனைவர் தா.சந்திரகுரு

 

Show 1 Comment

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *