கடவுச்சொற்களும் முக்கியத்துவமும் | கடவுச்சொற்கள் (Passwords) - ஸ்ரீ காளீஸ்வரர் செ | கடவுச்சொல் (Password) | Passwords and importance Article in Tamil

கடவுச்சொற்களும் முக்கியத்துவமும் | கடவுச்சொற்கள் (Passwords)

கடவுச்சொற்களும் முக்கியத்துவமும்

ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அல்லது தளத்திற்கு செல்வதற்கு அல்லது அங்குள்ள தகவல்களை பெறுவதற்கான ரகசியமான எழுத்துக்கள் அல்லது எண்கள் அல்லது குறியீடுகள் அல்லது இவை மூன்றும் சேர்ந்த வடிவங்களை கடவுச்சொற்கள் என பரவலாக அறியப்படுகிறது.

கடவுச்சொல் தானே ஏதாவது நமக்குத் தெரிந்த நான்கு எண்களையும் மூன்று எழுத்துக்களையும் போட்டு உதாரணமாக, ABC1234 என கடவுச்சொல் வைத்தால் போதும் என்று பலரும் நினைக்கின்றனர்.

ஆனால், தற்கால இணைய உலகில் கடவுச்சொல் என்பது மிக, மிக முக்கியமானது. உங்களுடைய தரவுகளை தனிப்பட்ட வகையில் பாதுகாப்பதற்கு கடவுச்சொல் (privacy protection) இன்றியமையாதது.

கடவுச்சொற்களும் முக்கியத்துவமும் | கடவுச்சொற்கள் (Passwords) - ஸ்ரீ காளீஸ்வரர் செ | கடவுச்சொல் (Password) | Passwords and importance Article in Tamil

கடவுச்சொல் பயன்பாடானது, முதலில் எல்லாம் பேங்க் லாக்கர்கள் (Bank locker) போன்ற குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே காணப்பட்டது. இணைய சாதனங்கள் மற்றும் கைபேசிகளின் வருகைக்குப் பிறகு கடவுச்சொல் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது. ஆரம்ப காலத்தில் வெளியான பட்டன் மொபைல் கருவிகளின் கூட, எண்கள் அல்லது எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கடவுச்சொற்களை வைத்துக் கொள்ள முடியும்.

நான் முதன்முதலாக வாங்கிய ஸ்மார்ட் மொபைல் போனில், கோல அடிப்படையிலான பாதுகாப்பு கடவுச்சொல்லை (Pattern lock) பயன்படுத்தினேன். அப்போது மிகவும் பிரபலமாக இருந்தது, இவ்வகையான பாதுகாப்பு வசதி தான்.

பின்னாளில், ஸ்மார்ட் மொபைல் கருவிகளில் இருக்கும் முன் கேமராவை கொண்டு ,உங்கள் முகத்தை கண்டறிந்து (face recognition lock) உங்கள் மொபைல் கருவியை திறக்கும் அம்சம் கொண்டுவரப்பட்டது. தற்காலத்தில் விரல் ரேகை அடிப்படையிலான பாதுகாப்பு அம்சமானது (fingerprint locking system) உலகளாவிய அளவில் அதிகமாக பயன்படுத்தப்படுவது அறிய முடிகிறது.

கடவுச்சொற்களும் முக்கியத்துவமும் | கடவுச்சொற்கள் (Passwords) - ஸ்ரீ காளீஸ்வரர் செ | கடவுச்சொல் (Password) | Passwords and importance Article in Tamil

மேலும், கூகுள் போன்ற பெருநிறுவனங்கள் தங்களுடைய சில கணக்குகளைக் நிஜமான டிஜிட்டல் சாவிகளை(physical digital keys) கூட வழங்குகிறது. தற்காலத்தில் சைபர் குற்றங்களின் மூலம் திருடப்படும் தொகையின் எண்ணிக்கையை கேட்டாலே தலை சுற்றுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு மொத்தம் சுமார் பத்து ட்ரில்லியன் டாலர்கள் வரை(ரூபாய் மதிப்பில் சுமார் 850 லட்சம் கோடி வரும்) சைபர் குற்றங்களின் மூலம் திருடப்படலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது. இது இந்திய பொருளாதாரத்தை விடவும் சுமார் இரண்டரை மடங்கு அதிகமாகும்.

இத்தகைய சூழலில் ,பாதுகாப்பான கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ள வேண்டியது முக்கியமானத. நாம் அனைவரும் ஏடிஎம் கார்டு என பொதுவாக அறியப்படும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகிறோம் . பெரும்பாலான, வங்கிகள் நான்கு இலக்க கடவுச்சொல்லை (four digit password) கொண்டு இத்தகைய அட்டைகளை பயன்படுத்தும் விதத்தில், வடிவமைக்கபட்டு இருக்கிறது. ஒருவேளை, உங்களுடைய குறிப்பிட்ட நான்கு இலக்கு எண் ஆனது பிறருக்கு தெரியும் பட்சத்தில், உங்களுடைய கார்டை கொண்டு அவர் பணத்தை எடுத்து விட முடியும்.

மேலும் CVV (Card verification value) எனும் எண்ணும் டெபிட் கார்டுகளுக்கு பின்னால் வழங்கப்பட்டிருக்கும், இணைய வழி பரிவர்த்தனைகளின் போது இந்த எண் மிகவும் முக்கியமானது.

இத்தகைய இணையவளி பரிவர்த்தனைகளின் போது, உங்களுடைய வங்கியோடு இணைந்து மொபைல் எண்ணிற்கு ஆறு இலக்கு ஒரு நேர கடவுச்சொல் (6 digit one time password ) அனுப்பப்படுகிறது. இதை க்கொண்டு உங்களுடைய வங்கிக் கணக்கில் இருக்கும், பணத்தை ஏமாற்றி திருடும் நிகழ்வுகளும் அனுதினமும் நடந்துதான் வருகிறது.

கடவுச்சொற்களும் முக்கியத்துவமும் | கடவுச்சொற்கள் (Passwords) - ஸ்ரீ காளீஸ்வரர் செ | கடவுச்சொல் (Password) | Passwords and importance Article in Tamil

உங்களுடைய வங்கி அட்டையில் பிரச்சனை இருக்கிறது என போன் செய்து உங்களுடைய தகவல்களைப் பற்றி புரிந்து கொண்டு,உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய பணத்தை திருடும் நடைமுறை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. தற்காலத்தில் ஒரு படி மேலே சென்று உங்களுடைய குடும்ப உறுப்பினர் போலவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ அழைப்பில் (deepfake video calling) தோன்றி ஏமாற்றும் நவீன ஏமாற்று வேலைகள் எல்லாம் தொடர்கதை ஆகிவிட்டன.

எனவே, தற்கால இணைய மோசடிகளை தவிர்த்து நீங்கள் எங்கெங்கு கடவுச்சொற்களைப் பயன்படுத்துகிறீர்களோ! அனைத்தையும் மிகவும் நுணுக்கமான கடவுச் சொற்களாக (unique passwords) பயன்படுத்துங்கள். உங்களால் மட்டுமே புரிந்து கொள்ள க்கூடிய வகையில் கடவுச்சொற்களை உருவாக்குங்கள்.

மேலும் கடவுச்சொல் மறந்துவிடும் என்பதற்காக பொதுவாக பயன்படுத்தும் டைரி போன்ற சாதனங்களில் எழுதி வைக்காதீர்கள். மேலும் உங்களுடைய தரவுச் சொற்களை ஒருபோதும் உங்கள் மொபைல் அல்லது கணினியில் இருக்கும் notes செயலி போன்றவற்றில் எழுதி வைத்துவிட வேண்டாம்.

இதை அனைத்தையும் கடந்து உங்கள் உடைய தரவுகள் திருடப்பட்டாலோ அல்லது உங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து மோசடியாக பணம் திருடப்பட்டாலே எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாக சைபர் காவல் துறையிடம் புகார் அளியுங்கள்.

நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், நீங்கள் தயங்கும் ஒவ்வொரு தருணமும் குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும்.

உலக கடவுச்சொற்கள் தினம் ஆண்டுதோறும், மே மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை அன்று உலகம் முழுவதும் இருக்கும் இணையவாசிகளால் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கடவுச் சொற்களின் முக்கியத்துவம் குறித்து உலகளாவிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

எனவே,நாமும் விழிப்புணர்வு அடைந்து, இது போன்ற இணைய மோசடிகளில் இருந்து பிறரையும் பாதுகாப்போம்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில்)
தொடர்புக்கு: srikaleeswarar@myyahoo.com

 

*****************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *