தன்னை
ஓர் தேர்ந்த வாசகன் என்றே
அறிமுகப்படுத்திக்கொள்ளும்
தோழமைக்கு…
அருமையான
எழுத்து
வாய்த்து இருக்கிறது.
முகநூல் புத்துயிர்ப்பில்
சிறுதூரலும்
பெருமழைக்கு
முகவரியல்லவா? மானுடத்தின்
நேசிப்பை
போராட்ட உணர்வை
அவலங்களை
காலம்…
அவர் நன்கு
அறிந்த மானுடர்களை
நம் கண்முன்னே உலவவிட்டுருக்கிறார் அன்பழகன் ஜி.
இணையதளங்களில்
நடத்திய
போட்டிகளில்
வெற்றி பெற்ற
கதைகளை
நமக்கு பரிசாக
அளித்துள்ளார்.தோழர்.
நமக்கு நம்
வாழ்வில்
கண்டமனிதர்களை
நினைவுறுத்தும்
வகையில்
கதைகள்
மிக நேர்த்தியாகவும்
நீரின் ஓட்டம் போல..வெகு
இயல்பாக
வரிகளில்
நீந்திச் செல்ல
முடிகிறது.
ஒரு யாசகனின்
வாழ்வையும்
அவர் தினமும்
சந்திக்கும்
மனிதர்களோடு
அவருக்கான
நேரத்தையும்
அவர் வார்த்தை
தரும் கரிசனத்தையும்
இயல்பாக
காண நேருகிறது.
அம்மா வீட்டிலில்லாத
ஓர்நாளில்
யாசகம் பெற்ற
உப்பில்லாத பொங்கலை
இரசித்து சாப்பிட்ட அவர்
ஒரு இளைஞனின்
சமையல் எப்படி
இருக்குமென
புன்னகையோடு
கடக்கும் மனநிலை.
பெயரில்லாத
அனாமிகா சுமந்து செல்லும்
கூழாங்கற்கள்
எதற்கு?
அது
நதியின் குளுமையை
தன்னுள் அடக்கி
கடந்து வந்த
வாழ்வின் கால அவகாசத்தில்
தன் சுயம் இழந்து ஆற்றின்
போக்கில்.
*கூழாங்கல்லாக
மாறுவது சுலபமல்ல. அவரைப் பற்றிய கேள்விகள் மனதை குடைந்தாலும்…
அறுபடும்
உறவுகள்
சொல்லிவிட்டா
செல்கின்றன?
காலம் எனும்
கத்தரிக்கோல்
குறுக்கும்
நெடுக்குமாக
வெட்டியபாதையில்….பயணிக்கிறோம்.
பாதியில் பயணம் முடிந்ததும்
இறங்கிக்கொள்ளும்
இலாவகம்
எல்லாருக்கும்
வாய்ப்பதில்லை.
அதுவே…
கூளாங்கற்கள் – சிறுகதை.
*சின்னான் போன்ற
மனிதர்கள்
இன்னும் மனதில் இருப்பதற்கு காரணம்…
இல்லாமையும்
வறுமையும்
ஒரு மனிதனை
பேச விடாத ஒரு
மௌனத்தின் கடலில் தனித்துவிடப்பட்ட படகு தான்.
அலை வந்தால்
எழுவதும்
அலை பாயாக
சுருளும்போது
தாழ்வதும்தானே
ஏழ்மைக்கு அழகு.அது சின்னானின்
கதாபாத்திரத்தின் சுவாசமாகவே
இருக்கிறது.
வாழ்வு பிடித்துப்
போயா வாழ்கிறார்கள்?
எதிர்நீச்சல்
போடும் வேகத்தில் வாழ்வு
மறந்தே விடுகிறது.
சிலரது தியாகமும்…
உழைப்பும்
தாய்மையும்
தான் பட்ட துயரை…
நிழல்படாது
தன் வாரிசை
உருவாக்கும்போது வாழ்வு
வண்ணம் கொள்கிறது.
தனி மரங்கள்
தோப்பை உருவாக்கி
ஆசீர்வதித்து
மறைகின்றன.
* பரட்டை- கதையில் வரும் அந்த கோரை முடிக்கும்
ஒரு சீப்பு வாங்கிவந்த மகன். பாட்னாவின்
அழகியலோடு
சீப்பு. அவர் வாழ்வையும்
சீவி சிக்கெடுத்து
பாதையாக்கி
இயல்பாய் வாழ முடிந்த அவருக்கு
படியாத கேள்விகள் இருந்தது. வயதாக வயதாக மனதும் பக்குவப்பட்டு
ஒழுங்குபடும்
நம் கேசம்போல.
உறவுகள் வெளியூர் போகும் நாள்
தனிமைக்கு பெரும் வலிதான்.
எல்லோரிடமும்
மரியாதை பண்பு குறையாத பேச்சும் அவரை
காலம் செதுக்கிவிட்டது.
படியாத தலை
மடியாத குணமாக
தோற்றம் தரலாம்.
காலம் அவர்களை செதுக்கும்போது
பளபளப்பான
தலைக்கு… கேசம் இல்லையென்றால்தான்
என்ன?
சீப்பின் பற்களில்
இளமைகாலம் துளிர்விடும்
கனவை
யார் தடுக்க முடியும்.?
*பானுஸ் ஹோம்
என்ற தலைப்பே
பானுவைப்பற்றிய ஒரு அழகிய
எதிர்பார்பை
ஏற்படுத்துகிறது.
வேலைக்கு வந்த
பெண் என்றாலும்
அவளின் ஒவ்வொரு
அசைவும்
அந்த வீட்டின்
நேர்த்தியை
நெய்து வைத்திருப்பதை
ஒரு சின்ன
கண்ணியில்…
கதையாசிரியர்
அன்பழகன்ஜி அவர்கள் மிக
எளிமையாக
சொல்லிவிடுகிறார் போகிற
போக்கில்.
பட்டுப்புடவை நெய்பவனுக்கு
பட்டாம்பூச்சியின்
கனவு பிரதானமல்ல.
*துள்ளித்திரியும்
காலம்…
எத்தனை
வண்ணங்களை
அள்ளித் தந்தாலும்
எதிர்படும் பெண்ணின்
புடவைதான்
கண்ணை உறுத்தும் .
இது பெண்களின் இயல்பு. மாறாத
குணம். இதில்
சிக்கித் தவிக்கும் கணவன் படும்
பாடு….
சொன்னாலும்
குற்றம் –
சொல்லாது
போனாலும்
குற்றம் என்பது
எத்தனை பொறுத்த மோ
அத்தனை
பொருத்தம்.
சம்பாதிக்கும்
பெண் மனைவியாக வரும் முன்,
காதலித்த காலமே
பொன்னான காலம்.
இதில்…
ஆடை என்பது
நேர்த்தி.
ஆளுமையில்லை என்பதை
பெண்கள் இதுவரை
உணர்ந்தாக
தெரியவில்லை.
காதலிக்கும்போது பொய்தான் அழகாகிறது.
இல்லறத்துள் உண்மையை கூட சொல்ல முடியாத எதார்த்தத்தை
இந்த கதையில்
மிக அழகாக
பதமாக…சொல்லியிருக்கிறார்.
* டாக்டர் அப்பா
என்ற தலைப்பை
அவர் வைத்ததன் மூலமே
நுட்பத்தின்
எழுத்தை கைவரப்பெற்றவர் மட்டுமல்ல.
அறம் என்பது
சீற்றத்தை
உள்ளடக்கியது.
நியாயமான
வார்த்தைகளை
எதிர்பார்த்து
அவமானப்படுத்தப்படும்போது
எழுகிற வீச்சு…
மனிதர்களின்
புறக்கணிப்பையும்….
ஒருவரை சீண்டிப்பார்க்கும்
சங்கதிகளை
இதேநாக்கு தான்.
எல்லாவற்றிற்கும் காரணம்.
சக மனிதனை
சமமாக மதித்தால் போதும்.
அலுவலக மேசைகள்….
எகதாளமான
நக்கல் பேச்சுகள்தான்
பெரும்பாலான
சங்கதிகளுக்கு
மூலக்கரு.
அன்பால்
சாதிக்க வேண்டியதை
அதிகாரத்தால்
சாதிக்க நினைத்தால்
அது சவுக்கடியாக.
இனி வரும்
தலைமுறைகள்
காலத்தின் வேதனைகளுக்கு
மருந்திடலாம்.
*தோத்தோ-கதை
மனதை பிழிந்துவிடும்.
எதிர்பார்ப்பற்ற
அன்பை
வாயில்லாத
ஜீவராசிகளிடமே
கற்றுக்கொள்ள முடியும்.
எந்தத்தவறும்
செய்யாத ஜீவன்
இந்த மானுட
புரிதலற்ற உறவுகளில்
தன் அபரிதமான
அன்பை பொழியும்
அதே தருணம்
தன் குற்ற உணர்வை தீர்ப்பது
ஒரு மரணத்தில்தான்.
மனிதம் மறையாமல்
இருப்பதே
இவர்களால்தான்.
மெளனம் கூட
தண்டனைதான்.
புறக்கணிப்பு
மரணத்தைவிட
கொடுமையானது.
இந்த சிறுகதை புத்தகத்தின்
மகுடம் இந்த
*தோத்தோ – சிறுகதை.
* இந்த புத்தகத்தின்
தலைப்பை
கொண்ட கதையிது.
பேப்பர் போடும் மாணவன்…
அவன் சந்திக்கும் மனிதர்கள் ..
அவர்களின்
கேள்விகளும்
இவனின் பதில்களும்
வாழ்வின் முரண்களின்
எதார்த்தம்.
அதிலும் நல்ல
மனிதமாண்புடன்… உதவியும்
செய்து
படிப்பை தொடர
அறிவுரையும்
தருவது
தந்தையில்லாத
வழிப்பயணத்தில்…
தவறி விடக்கூடாதென கானல்நீரை
அடையாளம்
காட்டிய கதை.
மிக அருமை.
*ஓநாய் மேய்ப்பவள் – கதை மிக அற்புதமான
உளவியல்சார்ந்த அழகியலின் கதை.
முரண்களை
தன் இரத்த உறவுகளிடமே
பெண் பெறும்போது
அவளடையும்
வலி ,வெளியாட்களின் வார்த்தைகளை புறந்தள்ளிவிடும். நமது ஆண் வர்க்கம்
சுமங்கலி – விதவை
சடங்கு
எல்லாவற்றிலும்
தனக்கு தோதான
வற்றை தூக்கிப்பிடிக்கும்
இலாவகம்…
பூக்களோடு
வாசம் செய்தாலும்
வேர்களின்
வலி – பூக்கள்
அறியாது.
தெருவுக்கு வந்துவிட்டால்
எல்லாமே
விலைபோவதில்லை. ஆண் – பெண் பேதமே
பெரிது. பெற்றவளானாலும்…
அந்த தராசு
நேராக நிற்பதில்லை.
வளர்ந்த மூங்கில் வளையாது.
* வாஞ்சை
– முடியும்வரை
உழைக்க வேண்டும் – என்ற பழைய
மனவலிமைக்கு ஈடு இணை
இல்லை.
அப்பாவுக்கு
நிகர்
அப்பாதான்.
பழைய அப்பாக்களுக்கு
இருந்த விழுமியங்கள்
இந்த கால
தந்தைகளுக்கு
இல்லை.
சாகும்வரை
பண்பாட்டின் குறியீடாக
தொன்மத்தின்
அடையாளமாக
அப்பாவின் பாத்திரம்
கொஞ்சம் கடினமானதுதான். பாசம்
என்பது காலத்தையும்
வென்றுவிடும்
சூட்சமத்தை
உள்ளடக்கியது.
தெளிந்த
நடையும்
நேர்மையான
வாழ்வியல் மீதான பார்வையும்…
நம்மை கடந்து
செல்லும்
விசித்திரமான
மனிதர்களையும்
மனக்கண்ணால்
புரிந்து அதை
எழுத்தாக்கி
தந்திருக்கும்
பாங்கு மிக
அற்புதம்.
வாழ்த்துக்கள் அன்பழகன்ஜி
அவர்களே.
இன்னும் நிறைய
எழுதிக்குவிக்க
வாழ்த்துக்கள்.
******************
படைப்பு பதிப்பகம்
அழகுற நூலை
வடிவமைத்து
தந்திருக்கிறது.
*******************
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.