போராடும் உழவருக்கு பாட்டு – பட்டுக்கோட்டை கவிப்பிரியன்இசைப் பாடல்
பல்லவி

***********

கிராமங்களில் வாழ்கிறது இந்தியாவின் ஆன்மா!

குண்டு துளைத்து உயிர் போகுமுன் கூறினார் மகாத்மா!
சரணம் 1
*************
‌கிராமமே சுடுகாடாக
துடிக்குது துர்ஆத்மா!
கேடு விளைக்கும் சட்டம்
கொண்டு பளபளங்குது
 மொத்தமா!
அத்தியாவசிய பொருள்
உரிமைக்கு ஆப்பு வைக்குது பாரு!
பகா சூர நிறுவனத்திற்கு
பட்டுக் கம்பளம் பாரு!.
மண்டி நம்பி வாழ்ந்தவர்க்கு
மண்ணை வாரி போட்டு
அதானி அம்பாணிக்கெலாம்
நேசக்கரம் நீட்டி!
                                                                            –(கிராம)
உரிமை கேட்கும் விவசாயிக்கு துப்பாக்கியை காட்டி!
துச்சமாக மதிக்கிறாரே
போராடுவதை தூற்றி!
பொருள் தட்டுப்பாட்டின்
போது மாநில அரசு உரிமை ரத்து!
யார் வேண்டுமானாலும்
பொருளை வாங்க அனுமதி தந்து!(கிராம)
வெளி மாநில வியாபாரிகள்
கொள்ளை அடிக்க
கதவு திறந்து !
விவசாயிக்கு விலை நிர்ணய உரிமை உண்டென பம்மாத்து செய்து!(கிராம)
விவசாயிக்கு வர்த்தகருடன்
ஒப்பந்தம் போட உரிமையாம்!
விளையலென்னா தண்டம்
கட்டவும் ஷரத்து அதில் இருக்குதாம்!(கிராம)
சும்மா கிடந்த சங்க எவனோ ஊதி கெடுத்த மாதிரி
விவசாயிகள் நன்மைக்கென்று
ஓதுராரு மந்திரி!
                                                                                    –(கிராம)
Image
– பட்டுக்கோட்டை கவிப்பிரியன்