விவசாயி
____________
நான்
விளைவித்த அரிசி
எல்லோர் வீட்டிலும்
விருந்தாகிறது
என் வீட்டில் மட்டும்
விதையாகிறது
*** *************************
பசுமையான
வயல்வெளிகள்
பக்கத்திலேயே நீரோடை
நிழல் தரும் மரங்கள் -என
நிசப்த வாழ்க்கை இன்னும்
உயிர்போடு இருக்கிறது “ஓவியங்களில்”
***********************************
காதலியின் இதமான ஸ்பரிசமாக
நனைக்கிறது ஒவ்வொரு மழைத்துளியும்
தாயின் பதிவேடு வருடிவிடுகிறது
வாடைக்காற்று
பூமிக்கும் வானுக்கும்
புதிதாகக் கட்டப்பட்ட பாலமாக
ஜொலிக்கிறது வானவில்
அவ்வப்போது அறிவிப்பு கொடுக்கும்
இடிமின்னல் என
என்னை சுற்றி அழகின் உயிர் ஓவியம்
ஆனால்
என்னால் தான் ரசிக்க இயலவில்லை
தெருவோர கூடாரங்கள் நனைந்துவிட்டன
இருக்க இடமின்றி
*******************************
ஸ்ரீனிவாசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

