என் பெயர் மோ.ரவிந்தர்,ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வருகிறேன். இயல்பிலே எனக்கு வாசிப்பில் பேரார்வம் உண்டு! புத்தகங்களை விட உண்மையான நண்பன் யாருமில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.
புத்தகங்களை வாங்கி வாசிப்பதும் வாசித்த புத்தகங்களைப் பற்றி சமூக வலைதளங்களில் பகிர்வதும் எனக்கு பிடித்தமான விஷயம்.
சமீபத்தில் ‘புக்டே’ நூல் விமர்சனம் பற்றிக் கேள்விப்பட்டு, நான் வாசித்த ‘பெண்ணாகடம் பா.பிரதாப் சிறுகதைகள்’ என்ற நூல் பற்றி உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
2023ஆம் ஆண்டு வெளிவந்த பெண்ணாகடம் பா பிரதாப் சிறுகதைகள் என்ற நூலினை சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன்.
இந்நூல் ஆசிரியர் இயல்பாகவும், யதார்த்தமாகவும் மற்றும் உணர்வுப்பூர்வமாக எழுதுவதில் கைத்தேர்ந்தவர்.
பெண்ணாகடம் பா.பிரதாப் சிறுகதைகள் என்ற இந்நூலில் ஒன்பது கதைகள் உள்ளன.ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகை மற்றும் தனி ரகம்.
குறிப்பாக,’லாவண்யா’ என்ற தலைப்பில் உள்ள கதையில் பனிரெண்டாம் வகுப்பு படித்து நல்ல மதிப்பெண் பெற்று தன் குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் செல்லும் ஒரு பதினேழு வயது பெண்ணின் மன ஓட்டத்தை ஆசிரியர் ரத்தமும் சதையுமாக அப்பட்டமாக எழுதியுள்ளார்.
‘பரிகாரம்’ என்ற கதையில் மரம் வெட்டி வியாபாரம் செய்யும் ஒரு மர வியாபாரியின் குடும்ப உறுப்பினர்கள் எப்படி மரங்களாலே அழிகின்றனர் என்றும், அதிலிருந்து அந்த குடும்பம் எப்படி மீண்டது என்றும் எதிர்பாராத திருப்பு முனைகளோடு விவரித்துள்ளார்.
‘இதுவும் கடந்து போகும்’ என்று சிறுகதையில் கொரானோ நோய் தொற்று மூலம் பாதிக்கப்பட்ட ஒரு தனியார்ப் பள்ளியின் ஆசிரியர் மற்றும் குடும்ப நிலையை உளவியல் ரீதியாக எழுதியுள்ளார்.
‘நாணயம் தந்த ஞானம்’ என்ற சிறுகதையில் நித்தம் நித்தம் தன் குடும்பத்திற்காக ஓடாக தேய்ந்து உழைக்கும் ஒரு குடும்பத் தலைவனுக்கு ஒரு ரூபாய் எவ்வளவு முக்கியம் என்பதை யதார்த்தமான குடும்ப நிகழ்வுகளோடு வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.
‘கார்குழலி’ என்ற சிறுகதையில் நிறப்பேதம் பார்ப்பது அபத்தமானது என்பதை கதையின் நாயகி மூலமே நமக்கு வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக, இந்நூலில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் நம்மை தட்டி எழுப்பும் வகையிலும், நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருப்பது தனிச் சிறப்பு. யாவரும் வாசிக்க நூல்.
நன்றி.
எழுத்தாளர், மோ. ரவிந்தர்
நூல்:-பெண்ணாகடம் பா. பிரதாப் சிறுகதைகள்
பதிப்பகம்:-டி.கே.பப்ளிஷர்ஸ்
ஆசிரியர்:-எழுத்தாளர் பெண்ணாகடம் பா.பிரதாப்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

