பெண்ணியமா?
அப்போ இது ஆண்களுக்கு எதிராதுனு ஒதுங்குறீங்களா?
உங்களுக்குத்தான் இந்த புத்தகம்.
பெண்ணியம் என்பது ஆண் எதிர்ப்பு அல்ல, ஆணாதிக்க கருத்தியலை எதிர்ப்பு என்பதை நமக்கு இந்த புத்தகம் விளக்குகிறது.
இது நமக்கு சரிப்பட்டு வராது என பெண்களே ஒதுங்குவதை உணரமுடிகிறது.
எனவே தான் ஆண்களும் பெண்களும் எது பெண்ணியம் என அறிந்துகொள்வதற்காக இந்த புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும்.
சாதாரன சினிமாவில் ஆளாளுக்கு ஒரு கருத்து வருமே அதைப்போல, ஒவ்வொருவருக்கும் பெண்ணியம் பற்றிய தவறான புரிதல் இருக்கிறது.
அதனை சரியாக புரிந்துகொள்ள இந்த புத்தகத்தை வாசியுங்கள்.
பெண்ணியம் பேசுகிற பெண்களைப்பற்றிய மூட நம்பிக்கைகள் ஏராளம்.
அதை முதலில் விரட்டிட இந்த புத்தகத்தை வாசியுங்கள்.
பெண்ணியத்தில் பலவகை இருக்குங்க
அமேசான் பெண்ணியம்
separatist பெண்ணியம்
சுற்றுச்சூழல் பெண்ணியம்
தாராளவாத பெண்ணியம்,
பொருள் முதல்வாத பெண்ணியம்,
தீவிரவாத பெண்ணியம்
இவையெல்லாம் என்ன?
இவைகளில் இருந்தெல்லாம் எப்படி மார்க்சியம் பேசும் பெண்ணியம் வேறுபடுகிறது?
இதை நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.
அது இந்த புத்தகத்தை படித்தால் உங்களுக்கு எளிதாக புரியும்
இந்த புத்தகத்தை வாங்குங்க
வாசியுங்கள்
பிறருக்கும் சொல்லுங்கள்
புத்தக தலைப்பு:-
பெண்ணியம் பேசலாம் வாங்க..
ஆசிரியர்:-
உ. வாசுகி
பாரதி புத்தகாலயம்
நினைத்த நேரத்தில் நினைத்த நூல்கள் பெற…
Whatsapp: 📞 87780 73949 Show Room: ☎ 044 2433 2924 Email: 📧 [email protected]
# வாசிப்பதை பகிர்வோம்,
#பகிர்வதற்காக வாசிப்போம்
மு. வீரகடம்ப கோபு
திண்டுக்கல்.