உன் பிரிவுதான்
என்னை
முதலில் குத்திய முள்!
உன் பிரிவுதான்
நான் உணர்ந்த
பெருங்கசப்பு!
உன் பிரிவுதான்
என்னைச் சுட்ட
முதல் நெருப்பு!
உன் பிரிவுதான்
என்னை அசைத்த
பெருங்காற்று!
உன் பிரிவுதான்
என்னைப் புரட்டிய
பிரளயம்!
உன் பிரிவுதான்
எனக்குத் தீரா நோய்!
உன் பிரிவுதான்
எனக்குத்
தீரா வறுமை!
உன் பிரிவுதான்
என் தலையில் விழுந்த
பேரிடி!
உன் பிரிவுதான்
என் பார்வையைப் பறித்த
மின்னல்!
உன் பிரிவுதான்
நான் உண்ட
விஷம்!
உன் பிரிவுதான்
என்னைக் கடித்தப்
பாம்பு!
உன் பிரிவுதான்
எனக்கு
ஆறா ரணம்!
உன் பிரிவுதான்
நான் சிக்கிய
சுனாமி!
உன் பிரிவுதான்
எனக்கு
வான் துயர்!
உன் பிரிவுதான்
எனக்குப்
பேரிடர்!
இப்போது
மீண்டு வந்து விட்டேன்…
என்னைப் புரிந்தவளின்
புன் சிரிப்பினால்
அத்தனைத் துயரும்
புஸ்வாணமாய்….