நூல் அறிமுகம்: *பேரிருளின் புதுச்சுடர்கள்* ஓர் பார்வை – கவிதா பிருத்விஎம் தோழர்களின் எழுத்துகளை படித்து, பெருமிதத்தோடு கருத்துகளை பகிர்கிறேன்.
 2020 ஆம் ஆண்டு நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க இயலாத ஆண்டாகவே மாறிவிட்டது.
 அறம் கிளை உறுப்பினர்கள் மட்டும் பாக்கியம் பெற்றோம் தோழர் உமர் அவர்களால்..
அறம் கிளை  தோழர்களுக்கு, பொற்காலமாக அமைந்தது 2020 கொரானா காலம்…
ஜும் வழியே எத்தனை முன்னெடுப்புகள், எத்தனை வாய்ப்புகள்..
வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திய தோழர்கள் எழுத்துலகின் நட்சத்திரங்களாக மின்னத் தொடங்கி விட்டார்கள்.
கொரானாவை நினைத்து பயந்து வாழ்ந்தவர்கள் எப்படி எல்லாம் செலவு செய்து,  அனுமதி இல்லாமல் அலைக்கழிக்கப்பட்டு, சாமானியர்களின் கடைகள் முடக்கப்பட்டு, குழந்தைகளின் உலகமே ஜூம் பூம்பா என்றாகிப் போனது என்பதை, தோழர் குருமாணிக்கம், தோழர் ஜெயகணேஷ், தோழர் சாந்தி சரவணன், தோழர் ஆப்ரின் பானு ஆகியோரின் முதல் முயற்சியில், “கொரானாவின் அவலங்கள்” கதைகளாக மிளிர்கிறது.
 சுவாதியின் கதையும், மொட்டுகள் கதையில் அம்மாவின் பரிதவிப்பும், பெற்றோர்களுக்கு குழந்தைகளின் வளர்ப்பு முறையை சொல்லித் தருவதாக இருக்கிறது. ஆண் பிள்ளைகளை சரியாக வளர்த்தால், பெண் என்பவள் துணிச்சலாய் வெளிவரலாம் என்பதை உரைக்கிறது, தோழர் ராதிகா விஜயபாபு, தோழர் காயத்ரி தேவியின் கதைகள், வன்முறையில் இருந்து பெண்கள் வெளிவர உதவும்.
 தோழர் ஹேமலதாவின் பொறி, ஒரு சாதாரண மனிதனை மதவாத அரசியல் படுத்தும் பாட்டை, குடும்ப பின்னணியில் அழகாக வெளிப்படுத்துகிறது.
 பத்திரிக்கை துறையின் சுதந்திரம் முழுதாய் முடக்கப்பட்டு விட்டதை உணர்ந்து, அதிலிருந்து வெளியேறி, சுயமாய் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் பெண்ணின் கதையை கூறுகிறார் தோழர் இவள் பாரதி..
 சாதி பேதமையை “மீறலும்”, கந்து வட்டி கொடுமையை “என்னங்க சார் உங்க சட்டமும்”, இன்றைய ஐடி ஊழியர்களின் உலகத்தை “அடிமைகளும்”, தனியார் மயமாக்கலில்  சிக்கித்தவிக்கும் நிறுவனங்களில் வேலை பார்க்கும், மாற்றுத்திறனாளி ஊழியர் பற்றிய நிலையை குமிழியும்”, பேசுகிறது..
தோழர் இளவரசி, தோழர் முத்துவிஜயன், தோழர் தீபலட்சுமி, தோழர் சுகன்யா ஆகியோரது முதல் எழுத்துகள் நாட்டு நடப்புகளாக நம் கண்முன்னே விரிகிறது..
விதையென விழுந்திருக்கும்
 அத்துணை விருட்சங்களுக்கும்
 அன்பும், வாழ்த்துகளும்..
வெற்றிக் கனி பறிக்க
களம் காத்திருக்கிறது..
வெற்றி நடைபோடுங்கள் தோழர்களே!!
கவிதா பிருத்வி
தஞ்சை.