பெரும் தாகம் – பிச்சுமணி

Perum Thagam (Great thirst) Poetry by Pitchumani in Tamil Language. Book Day Website is Branch of Bharathi Puthakalayam.பெரும் தாகம்

எவ்வளவு நீர் அருந்தினால்
தீருமென தெரியவில்லை.

ஏற்கெனவே தயாரித்துவைத்த
உணவெதையும் அவர்கள்
உண்டதாகத் தெரியவில்லை

தேர்ந்தெடுக்கப்பட்ட
தின்பண்டங்களைத் தின்னும்
முட்டு பசியும் அவர்களுக்கில்லை

எச்சி கையோ
அமாவாசையோ
திதியோ.. அவர்களுக்கெதுவும் தெரியாது
பசியென்ற ஒன்றைத் தவிர.

நிலவில் பாட்டி சுடும்
பொய் வடைக் கதைகளை
அவர்கள் அறிந்திருக்கவில்லை

பறித்துத் தின்றதாய் அவர்கள்மீது
பழி போட்டாலும்,.
கொத்தித் தின்னும் அவர்களுக்குச்
சுரண்டி சேர்க்கும் வழக்கமில்லை

தன் வீட்டையே
சொந்தம் கொண்டாடாதவர்களுக்கு
தனியே உண்ணும் பழக்கமுமில்லை.

ஆனால்..

கூவி அழைத்தே..
கூடி சாப்பிடும் கூட்டத்தில் ஒன்றுக்கு..
எந்த மனிதனின்
சகவாசம் கிடைத்ததோ?
பெரும் தாகம்
எவ்வளவு நீர் அருந்தினால்
தீருமென தெரியவில்லை.

–பிச்சுமணி.இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.