Explore the book 'Pesapada Vendiya Vingjanikal'(பேசப்பட வேண்டிய விஞ்ஞானிகள்) by Prof. So. Mohana. Book Review in tamil - https://bookday.in/

பேசப்பட வேண்டிய விஞ்ஞானிகள் – நூல் அறிமுகம்

பேசப்பட வேண்டிய விஞ்ஞானிகள் – நூல் அறிமுகம்

நூல் : பேசப்பட வேண்டிய விஞ்ஞானிகள் (Pesapada Vendiya Vingjanikal)

பேராசிரியர் :  சோ மோகனா (Prof.So.Mohana)

வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்

முதல் பதிப்பு : அக்டோபர் 2016

பக்கம் :  128

விலை :  ரூ.100

பேராசிரியர் மற்றும் முதல்வர் பணியில் சிறப்புடன் பணியாற்றி ஓய்வு பெற்றஸர் அறிவியல் இயக்கத்தில் நிறையப் பொறுப்புகளில் திறம்பட செயலாற்றுபவர் அறிவொளி இயக்க உந்து சக்திகளில் ஒருவர் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் தொடர்ந்து செயலாற்றுபவர் துப்புரவுத் தொழிலாளர்களுக்கான செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டவர் பெண் கல்வியின் சிறப்பை கிராமம் தோறும் சென்றடைய செயல்பட்டுக் கொண்டிருப்பவர் பல பள்ளிகள் கல்லூரிகளில் அறிவியலை எளிமையாக மாணவர்களுக்குக் கொண்டு சொல்ல கருத்தரங்குகள் நடத்துபவர் 130க்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களை எளிய மொழியில் எழுதியிருப்பவர் என பல சிறப்புகளுக்கு பெருமை சேர்த்திருக்கும் மோகனா அவர்கள் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த விஞ்ஞானிகள்,கணித மேதைகள்,தொல்பொருள் ஆய்வாளர்கள்,வானவியலாளர்கள், வேதியியலாளர்கள்,அறிவியல் எழுத்தாளர்கள் என 42 மேதைகளின் வாழ்வையும் வரலாற்றையும் கண்டுபிடிப்புகளையும் இந்த நூலில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கிறார்.

மனிதநேயமும் அன்பும் கருணையும் ஒருசேர மிளிறும் இவரது செயல்பாடுகளைப் போலவே நூலில் விஞ்ஞானிகளின் வாழ்வையும் மகத்துவத் தருணங்களையும் வாசிப்போரின் மனதிற்குள் பதியும்படி எழுதப்பட்டிருக்கிறது.

நாம் கேள்விப்பட்ட சில விஞ்ஞானிகளைத் தாண்டி இதுவரை அறியாத ஆனால் அறிவியலில் ஏதேனும் ஒரு சாதனௌயைச் செய்த பல விஞ்ஞானிகளின் வரலாற்றைத் தேடித் தேடி தகவல்களைத் திரட்டி முழுமையாக வாசித்து எல்லோருக்கும் புரியும்படியான மொழியில் எழுதியிருக்கும் நூலாசிரியரின் உழைப்பே நூலினை அழகாக்கிவிடுகிறது.

விலங்கியல் துறையில் பணி விருப்பமோ வேதியியலிலும் வானவியலிலும்.கருவின் ஆரம்ப வளர்ச்சி தொடங்கி வானத்தில் மின்னும் நட்சத்திரத் தொகுதிகளைப் பற்றிய விளக்கூஅதில் புகுந்து தீண்டாமையின் கொடுஞ்செயலை மனதிற்குள் புகுத்தி என இவரது கரங்கள் அறிஸியலின் எல்லா திசைகளிலும் நீண்டு மக்களுக்கான பயன்களை பிரசவித்துக் கொண்ணிருக்கிறது.

படிப்பின் பக்கமே ஒதுங்காத மனிதனுக்குள்ளும் கண்டுபிடிப்பின் சுடர் ஒளிவீசுகிறது.புத்தகத்தைக் கட்டித் தொகுக்கும் பணியிலும் ஓயாத வாசிப்பின் வழியே புகழ்மிக்க விஞ்ஞானிக்கு உதவியாளராகி அவரைவிட தனது கண்டுபிடிப்புகளின் மூலம் புகழைப் பெற்ற பெருமையுடையவர் தான்தேடிப் பொறுக்கியெடுக்கும் புதைபடிவப் பொருள்களின் அருமையை உணராமல் அன்றாட வாழ்வை நகர்த்திக் கொண்ட துரதிருஷ்டசாலி தான்எழுதிய கணிதச் சூத்திரங்களைக் கண்டுகொளளாத உலகத்தில் தன்னைத்லானே 21 முறை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டவரின் படைப்புகள் பல ஆண்டுகளுக்குப் பின் உலகப் புகழ் பெற்ற நிகழ்வு அறிவியல் கருவிகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே அவற்றைப் பற்றி தனது கதைகளில் எழுதி உலகிற்கு அறிமுகம் செய்தவர் மருத்துவ உலகிற்குஎன பல உழைப்பாளிகளின் சிந்தனையையும் அவர்களது முயற்சிகளின் இடையறாத ஓட்டத்தையும் நூல் கதையென கண் முன் நடக்கும் காட்சியென படம் பிடித்துக் காட்டுகிறது.

ப்யூர்பக்
கிரகணங்களின் அட்டவணைகள் நூல் எழுதியவர்
விண்மீன் தூரத்தை அளக்க அளவு மானியை கண்டறிந்தவர்
பூமியின் நடுப்பகுதியை கண்டறிந்தவர் அல்காரிதம் என்ற கணித அடிப்படை சூத்திரத்தை வெளியிட்டவர்
கணிதம் மற்றும் வான்நோக்கும் வானவியலின் தந்தை என அழைக்கப்படுபவர்

15ஆம் நூற்றாண்டு அறிவியலில் இருண்ட காலம் என்று சொல்லப்பட்ட நிலையில் அதையும் தாண்டி மக்களால் பேசப்பட்ட விஞ்ஞானி பாரா செலஸஸ்
அவரின் துரதிஷ்டம் அவர் 17 வயதில் வியன்னா பல்கலையில் மருத்துவம் படிக்கிறார் டாக்டர் பட்டம் வாங்குகிறார் ஆனால் அந்த ஆண்டு அந்த பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காணாமல் போய்விட்டன இவரது பட்டமும் கூட. அப்போது தனது உண்மையான பெயரை பாரா செலஸஸ் என்று லத்தின் பெயராக மாற்றிக் கொள்கிறார் உயர்ந்ததிலும் உயர்ந்த மேம்பட்ட என்று அதற்கு பொருள். தன்னை எல்லா மருத்துவர்களையும் தாண்டி உயர்ந்தவராக கருதிக் கொண்டார் அதன்படியே செயல்பட்டார். ரசவாதத்தையும் வேதியியலில் இணைத்து மருந்து தயாரிப்பது பற்றி குறிப்புகள் கொடுத்தவர் இவரே அறிவியல் ரீதியாக நோய்களுக்கு மருந்து தேடியவர் என்பதால் இவர் மருத்துவப் புரட்சியாளர் என்று அழைக்கப்படுகிறார் ஹைட்ரஜன் நைட்ரஜன் துத்தநாகம் போன்ற தனிமங்களை கண்டறிந்தவர் பாரா செல்சஸ் நுண்ணுயிரிகள் தான் நோய்க்கு காரணி என்று உலகுக்கு முதன் முதலாக அறிவித்தவரும் இவரே

தாவரங்களின் வகைப்பாடு மற்றும் அவற்றின் மருத்துவப் பணிகள் குறித்து 500க்கும் மேற்பட்ட தாவரங்களை பற்றி முழுமையான படங்களுடன் விவரித்து எழுதி புத்தகமாக வெளியிட்டவர் லியோன்ஹார்ட் பக்ஸ் அந்த புத்தகத்தின் பெயர் ஹிஸ்டோரியா ஸ்டிக்பியம்

வியாழன் கிரகத்தையும் அதன் நான்கு பெரிய துணைக் கோள்களையும் கண்டறிந்தவர் சைமன் மாரியஸ் அவைகளுக்கு அயோ யுரோப்பா கனிமேடு காளிஸ்டோ என பெயர்கள் சூட்டியவரும் அவரே பூமி மற்றும் வியாழன் போன்ற கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மையை முதன் முதலில் உலகிற்கு கூறியவரும் இவரே

சூரியனில் கரும்புள்ளிகள் உள்ளன என்ற உண்மையை தனி ஒருவராக மிகப்பெரிய தேடல்களுக்கு நடுவே வெளியிட்டவர் ஜெர்மன் நாட்டின் முதல் வானவியலாளர் என அறியப்படும் ஜோஹான்ஸ் பெப்ரிசியஸ்.

அமில கார வேதியியலின் கொள்கைகளை உருவாக்கியவர் தீ இடி மின்னல் நிலநடுக்கம் போன்றவற்றின் இயற்பியல் மற்றும் வேதியியல் விளக்கங்களை விரிவாக எடுத்துரைத்து கட்டுரைகளை வெளியிட்டவர் செயற்கை எரிமலையை உருவாக்கிக் காட்டியவர் மருந்தகத் துறையின் கலைக்களஞ்சியத்தை தொகுத்தவர் நிக்கோலஸ் லேமேரி

ஹைட்ரஜனை அடிப்படையாகக் கொண்டு தனிமங்கள் அமைந்துள்ளன என்ற உண்மையை முதன் முதலில் வெளியிட்டவர் சிறுநீரில் இருந்து யூரியா மற்றும் யூரிக் அமிலத்தை முதன் முதலில் பிரித்து எடுத்தவர் வயிற்றில் உள்ள அமிலம் என்பது சாதாரண ஹைட்ரோ குளோரிக் அமிலம் என்பதை கண்டறிந்தவர் தைராய்டு குறைவால் ஏற்படும் கழுத்துக்கழலை நோக்கி மருந்து கண்டறிந்தவர் மனிதன் உண்ணும் உணவில் முக்கியமான மூன்று சத்துப் பொருட்கள் மாவுப்பொருள் புரதம் கொழுப்பு உள்ளது என்பதை நிரூபித்து காட்டியவர் வில்லியம் பிரௌட்.

தாவரங்கள் மற்றும் விலங்குகள் முட்டையிலிருந்து உருவாவதைப் பற்றி தெளிவாக பட விளக்கம் மூலம் வரைந்து காட்டியவர் நவீன கருவியலுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் மனித கருவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் கேஸ் பெயர் கேஷ்பர் பிரட்ரிக் உல்ப்.

யுரேனியம் ஸிர்கோனியம் ஸ்ட்ரான்சியம் டைட்டானியம் டெல்லூரியம் குரோமியம் செரியம் ஆகிய தனிமங்களைக் கண்டறிந்தவர் மார்ட்டின் ஹெய்ன்ரிச்.

தாவரத்தின் அடிப்படைப் பொருள் மாவுப்பொருள் என்றும் அதன் பெயர் செல்லுலோஸ் என்றும் கண்டறிந்து பெயரிட்டவர் அன்செல்ம் பேயன்.

வாழும்போது உலகம் கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவு தற்கொலை. ஈவாரிஸ்டேகண்டறிந்த பாலிநாமியல் கணித சூத்திரங்கள் அவரின் மரணத்திற்குப் பிறகே கொண்டாடப்பட்டது.

65 புதினங்கள் 30 நாடகங்கள் ஏராளமான சிறுகதைகள் கட்டுரைகள் எழுதி ஜுல்ஸ் வெர்ன் தனது கதையில் கற்பனையாக அறிமுகம் செய்த கருவிகள் அனைத்தும் இன்று செயல் வடிவத்தில் உலவுகின்றன.

புத்தக பைண்டிங் செய்யும் ஒருவர் புகழ்பெற்ற விஞ்ஞானி ஹம்ரி டேவியின் உரையைக் கேட்க கிடைத்த இலவச டிக்கெட் பயன்படுத்தி அவரது உரையை தொகுக்கிறார் அதன் வழியே அவருக்கு உதவியாளராய் மாறுகிறார் விரைவில் பல புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு அறிமுகம் செய்கிறார் குறுக்கு காந்த ஈர்ப்பும் காந்தப் பரப்பின் ஒளி விளைவும் அவரது ஆய்வுகளே. லண்டன் பாரிஸ் ஜெர்மனி கனடா அமெரிக்காவில் அவரது புகழ் பரப்ப ஏராளமான தெருக்கள் உள்ளன அவரின் மிகப்பெரிய எளிமையான கண்டுபிடிப்பு மின்மோட்டார் அத்தகு படிக்காத மேதை தான் மைக்கேல் பாரடே.

சோதனைக் கூடத்தில் புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று ஏன் உருவானது என்பதை கண்டறிவதற்காக ஏழு நாட்கள் வெளியே வராமலேயே அதற்கான தீர்வுடன் வெளியே வந்து உலகிற்கு மிகப்பெரிய நற்பலனை ஏற்படுத்தித் தந்தவர் ராண்ட்ஜென். அவரின் கண்டுபிடிப்பு தான் எக்ஸ்ரே. உலகின் முதல் நோபல் பரிசு பெற்றவர் அவரை தான் பெற்ற அந்த நோபல் பரிசுத் தொகையை மேலும் மேலும் நடைபெற உள்ள ஆய்வுகளுக்குப் பயன்படுத்துமாறு கூறி அதற்கே திருப்பியளித்தார்.

பெண் என்ற காரணத்தினாலும் தாழ்த்தப்பட்டவர் இந்த காரணத்தினாலும் மிகப்பெரிய கண்டுபிடிப்பைச் செய்த ஆன்னிங் வெகு காலமாக நிலவியல் கழக உறுப்பினராகத் கூட அனுமதிக்கப்படவில்லை.

வெறுமனே அறிவியல் துணுக்குகளாக வாசித்துவிட்டும் பொது அறிவுத் தேர்வுக்காக மனப்பாடம் செய்துவிடுவதுடன் முடிந்து விடுவதில்லை அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றின் வழியான கண்டுபிடிப்புகளின் பயணம். இத்தகு உண்மைகள் எதிர்வரும் தலைமுறையினர் அறிந்து தங்களது பயணத்திற்கு பயன்படுத்தி உலகத்தின் முன்னேற்றத்திற்கு புதிய பாதைகளை உருவாக்க வேண்டும்.அதுவே இது போன்ற புத்தகங்களின் உழைப்பிற்கு கிடைக்கும் உண்மையான பாராட்டுகள்.

“”நிகழ்காலத்தில் மயங்கிக் கிடக்கும் நம் முகத்தில் தண்ணீரைத் தெளித்து கடந்த காலத்தின் உழைப்பையும் தியாகத்தையும் நினைவூட்ட இத்தகு நூல்கள் தேவை.நாம் அதிகம் கவனம் செலுத்திப் பேசாத நிறைய விஞ்ஞானிகளின் பெயர்கள் நிலவின் பள்ளங்களுக்குச் சூட்டப்பட்டுள்ளனவாம். நிலவின் பள்ளங்களில் இருப்போரை நம் நினைவின் பள்ளங்களில் கொண்டு வந்து சேர்க்கும் நூல் இது “” என நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் மாடசாமி அவர்களின் கூற்றைப் போல இத்தகு நூல்கள் வளரும் தலைமுறையினர் வாசிக்க வேண்டிய அறிவியல் வழிகாட்டி என்பதில் ஐயமில்லை.

 

நூல் அறிமுகம் எழுதியவர்: 

https://bookday.in/ - ilayavan-siva

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *