பேசும் பொம்மைகள் – நூல் அறிமுகம்
ஒரு அறிவியல் கருத்தாக்கத்தை அறிவியலுக்குள் ஆழமாக, அறியாத பல மருத்துவ செய்திகளை எளிமையாக அதே நேரம் விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார்.
டவுன்லோடிங் மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் பிரதி எடுத்து இயந்திரத்திற்கு பேஸ்ட் செய்தால் என்னவாகும் சாகா வரம் பெற்ற மனிதனை உருவாக்க முடியும். அவன் கனவுகளையும் கற்பனைகளையும் காலம் கடந்தும் பாதுகாக்க முடியும். கேட்பதற்கு சாத்தியம் இல்ல இது போன்ற ஆராய்ச்சியை அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகள் மேற்கொண்டு வருகின்றன அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றிருக்கின்றன. இந்த ஆராய்ச்சியை மையமாக வைத்து ஒரு கற்பனை விரிவாக்கமாக பேசும் பொம்மைகள் என்ற இந்த நாவலை உருவாக்கியிருக்கிறார் சுஜாதா.
CMRI லேப் பல வினோதமான ஆராய்ச்சிக்கு பெயர் போன ஆய்வுக்கூடம், இந்த ஆராய்ச்சி கூடத்தின் மிக முக்கியமான ஜாம்பவான்கள் டாக்டர் நரேந்திரநாத் மற்றும் டாக்டர் சாரங்கபாணி நோபல் பரிசு பெறும் நோக்கத்தில் இவர்கள் செய்யும் ஆராய்ச்சியே டவுன்லோடிங்.
இந்த ஆராய்ச்சிக்கு ஏற்கனவே பலியானவள் மாயாவின் அக்கா மேனகா முழுவதுமாக அவள் இறக்கவில்லை அரைகுறை உயிராய் பேசும் பொம்மையாய் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறாள் இது அறியாமல் மேனகா அமெரிக்காவில் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறது அவளது குடும்பம்.
பாதியில் விட்ட ஆராய்ச்சியை மீண்டும் தொடர அவளது தங்கை மாயாவை தேர்ந்தெடுக்கிறது லேப் இந்த சூழ்ச்சியை அறியாமல் லேபில் வேலை என்ற பெயரில் சிக்குகிறாள் மாயா.
பணியில் சேர்ந்த நாள் முதலே அவளுடைய பல ரத்த மாதிரிகளை சேகரிப்பதும் பலவிதமான பரிசோதனைக்கு மாயாவை உட்படுத்துவதும் அவளுக்கு பல்வேறு விதமான சந்தேகங்களை எழுப்பியது. அவளுடைய காதலன் சுனில் ஏற்கனவே அங்கு பணி புரிபவன் இந்த மர்மமான ஆராய்ச்சி பற்றி ஏதும் அறியாதவன் அவன் மாயாவை சமாதானம் செய்து பணியில் தொடர முயற்சிக்கிறான். மாயாவும் குடும்ப பொருளாதாரம் காரணமாக வேலையை விடாமல் தொடர்ந்து பணி செய்து வருகிறாள்.
மாயாவின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு ஏற்றதாய் அமையும் நேரத்தில் சுனில் மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்கிறான் மாயாவின் அனுமதியில்லாமலேயே அவள் மயக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு டவுன்லோடிங் எனும் ஆராய்ச்சியை மேற்கொள்கிறது லேப்.
விஜயவாடாவில் உள்ள ஒரு பெண்ணின் நினைவுகளை ஒரு சிப்பில் பேஸ்ட் செய்து மாயாவின் மூளையில் பதிக்கிறார்கள் பரிசோதனை ஓரளவுக்கு வெற்றி பெற்றது மாயாவிற்குள் இப்போது இருவரின் நினைவுகள் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்கள்.
மாயாவை சுனில் காப்பாற்றினானா? மாயா இயல்பு நிலைக்கு திரும்பினாளா? தடை செய்யப்பட்ட ஆராய்ச்சியை செய்த மருத்துவர்கள் இருவரும் தண்டிக்கப்பட்டார்களா?
என்பதை நகைச்சுவையுடன் கூடிய சயின்ஸ் பிக்சனாக உருவாக்கி இருக்கிறார் சுஜாதா.
சீரியஸ் ஆக நகரும் கதைக்களத்தில் மாயாவை மீட்கும் முயற்சியில் ஈடுபடும் வக்கீல்கள் கணேஷ் வசந்த் கதைக்குள் நுழையும்போது கதை காமெடி ஜேர்னலில் சிரிப்பூட்டி சிந்திக்க வைக்கிறது.
லேபில் மாட்டிக்கொள்ளும் மாயா அங்கிருந்து தப்ப முயலும் சூழ்நிலையில் நாமே அங்கு மாட்டிக் கொண்டது போன்ற உணர்வை உருவாக்கி விடுகிறார் சுஜாதா.
மெடிக்கல் டெம்ளேட்டில் கதை நகர்வதால் மேம்போக்காக கூறாமல் ஆபரேசனுக்கு பயன்படும் மருந்துகள் பயன்படுத்ப்படும் டெக்னாலஜிகள் என அனைத்தையும் அறிமுகம் செய்து வைக்கிறார்.
நூலின் தகவல்கள் :
நூல் : பேசும் பொம்மைகள் (அறிவியல் புனைவு வகை நாவல்)
ஆசிரியர் : சுஜாதா
நூல் அறிமுகம் எழுதியவர் :
கதிரேசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
![எழுத்தாளர் சுஜாதா (Sujatha) எழுதிய பேசும் பொம்மைகள் [Pesum Bommaigal] - நூல் அறிமுகம் - https://bookday.in/](https://bookday.in/wp-content/uploads/2025/05/Book-Review-1024x576.jpg)

அருமையான விமர்சனம்