இக்கதை சாதி வெறியர்களை எப்படி அடையாளப்படுத்துகிறதோ, அதே போல ஒரு தந்தை மகளுக்கான உறவையும், அவரின் அன்பையும், மகளுக்காக ஒரு தந்தையின் தாகத்தையும் எடுத்துரைக்கின்றது…

இக்கதையின் முக்கிய கதாபாத்திரமாக இருக்க கூடியவர் பழனி, இவரின் துணைவியார் சாமியம்மாள். இவர்களின் வீட்டை சுற்றி ஒரே கூட்டம். அக்கூட்டத்தில் இவர்களின் மகளான பாக்கியமே இங்கு பேசும் பொருளாக உள்ளார். அங்கு கூடிய மக்கள் கூட்டம், சாதிக் கட்சிகாரனலாம் எப்போது கதையை முடிக்க போகிற என்ற கேள்வியை பழனியின் மேல் வாரி தொடுக்கிறார்கள், உன்னால் முடியவில்லை என்றால் சொல்லிவிடு நாங்கள் முடித்து விடுகிறோம் என்று சாதிக்காரன் மேலும் அழுத்தம் கொடுக்கிறான்.

பழனி நானே நாளைக்கு முடித்து விடுகிறேன் என்கிறான், இதை நம்பாமல் அவரின் துணைவியார் சாமியம்மாளை கூப்பிட்டு கேட்கிறார்கள், பால்டாயில் வாங்கி வந்து கொடுங்கள் நானே ஊற்றி விடுகிறேன் என்று கூறுவதை அடுத்து பஞ்சாயத்து கலைகிறது. ஆனாலும் சில பெண்களின் கூட்டம் பழனியை நச்சரித்ததை அடுத்து பழனி தனது வேட்டியை போட்டு தாண்டி அவள் நாளை பொணமாகவில்லை என்றால் நான் இதே இடத்தில் பொணம் ஆகி விடுவேன் என்று கூறியதை அடுத்து அக்கூட்டம் நகர்ந்தது…

நடந்தது என்ன?

பழனி – சாமியம்மாள் இணையருக்கு 20 ஆண்டு கழித்து தவம் இருந்து பிறந்தவள்தான் பாக்கியம். இவள் கல்லூரியில் படிக்கும்போது கீழ் சாதியை சேர்ந்த பெரியசாமி என்பவனைக் காதலித்து வந்துள்ளார்.. ஒருநாள் இவர்கள் இருவரும் திரையரங்கு சென்றதை பார்த்த செய்தியை வீட்டில் சொல்லி விட்டார்கள். இதை அறிந்த அவளின் தாயார் ஆத்திரமடைந்து, அவளை மாட்டை அடிப்பது போல அடித்து வீட்டிற்குள் அடைக்கப்பட்டால். மூன்று, நான்கு முறை வீட்டை விட்டு வெளியே செல்ல, முயற்சித்து பல தோல்வி கண்ட அவள் பல அவமானங்களையும் பெற்றால்.

ஊர் பஞ்சாயத்தில் வைத்து அவள் முடி கத்தரிக்கப்பட்டன, சாணியை கரைத்து, செருப்பால் ஊர் முச்சந்தியில் அடிக்கப்பட்டால், ஊர்க்காரர்கள் எல்லாம் ஒன்று கூடி நாயைப் போல அடித்து விரட்டினார்கள்… மரத்துப்போன உடலும் உயிரும் மட்டும் மிஞ்சுகிறது… இந்த செய்தி தெரிந்து மூன்று வருடங்கள் ஆன நிலையில் உயிரோடு இருப்பது இதுவே முதல் முறையாக உள்ளது அந்த ஊரில், ஏனென்றால் அவள் காதலிக்கும் கீழ்ச்சாதியை சேர்ந்த பெரியசாமி ஒரு போலீஸ்காரன், அவனின் உயர்ந்த பதவியும் முக்கிய காரணமாக உள்ளது…
இதனால் தான் இந்த பஞ்சாயத்து கூட்டம்…

வாசகர் அனுபவம்: பெத்தவன்

நல்லூரு பாலூரு

இக்கதையில் நல்லூரு, பாலூரு என்ற ஊர், சாதி மறுத்து காதல் செய்பவர்களுக்கு ஒரு பயமுறுத்தக் கூடிய ஊராக இவை எடுத்துக் காட்டப்படுகின்றன.
நல்லூரில் ஏற்கனவே சாதி மறுப்பு காதல் செய்பவர்களை பஞ்சாயத்து கூட்டங்களில் வைத்து, அவர்களின் பெற்றோரின் கண்களின் முன்னால் அவர்களின் காதில் மறந்து ஊற்றப்பட்டு கொலைசெய்யப்பட்டார்… அதேபோல பாலூரு ஊரிலும் சாதி மறுப்பு திருமணம் செய்ய கோவிலுக்கு சென்ற அவர்களை நிர்வாணமாக கட்டி வைத்தும் 20 ஆண்களால் மானபங்கம் செய்யப்பட்டு கொலை செய்ததை இந்தக் கதையில் எடுத்துரைக்கின்றன…

பெத்தவனின் அன்பு

என்னதான் இருந்தாலும் 20 வருடம் கழித்து தவமிருந்து பிறந்த மகளை தன் கையால் கொல்ல மனமில்லாத பழனி, கூட்டம் கலைந்த பிறகு வீட்டிற்குள் வந்து கதறி அழுகிறான். சிறிது நேரம் கழித்து ஒரு தட்டில் சோற்றைப் போட்டுக் கொண்டு மூன்று வருடமாய் பேசாமல் இருந்த தன் மகள் பாக்கியத்திடம் கொடுத்து சாப்பிடச் சொல்கிறான். விஷம் கலந்து இருப்பாரோ என்று அவள் அஞ்சுகிறாள் இருந்தாலும் அவள் அதை கண்ணீர் சிந்தியவாறு சாப்பிடுகிறாள்.

பிறகு வீட்டிற்கு சென்று 60,000 பணத்தையும், வீட்டில் இருந்த நகைகளை கொடுத்து,
நீ போ……. நீ உசுர கூட வாழனும்…… என்று சொல்லி கதறுகிறான் பழனி. அவளோ என்னை மருந்து ஊற்றிக்கொண்டு விடுங்கப்பா என்று அழுகிறாள். ஆனாலும் அவளை கட்டாயப்படுத்தி இவ்வூருக்கு தெரியாமல் வழியனுப்பி வைக்கிறான் பழனி….வழி அனுப்பி வைத்த பழனியோ விடியற்காலையில்…

“தன் மகளுக்காக, சாதி வெறிப்பிடித்த மனிதர்களால் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள் பெத்தவன்….”

பெத்தவன்…
ஆசிரியர் : இமையம்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

Image

பிருந்தா காசி
மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்,
இந்திய மாணவர் சங்கம்

One thought on “பெத்தவன் – இமையம் | நூல் அறிமுகம்: பிருந்தா காசி”
 1. வலி மிகுந்த வாசிப்பனுபவம் தரும் நூல்…
  அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்களும் நன்றியும்…
  பரிந்துரைகள்:
  காட்சிப் படிமங்களை இன்னும் நுணுகித் தேரலாம்.
  பாத்திரங்களின் உரையாடல்களில் இழையோடும் அவலச்சுவை அழுத்தத்தைக் கோடிட்டிருக்கலாம்.
  எழுத்துப்பிழைகளைத் தவிர்க்க முனையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *