Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: பேயா? பிசாசா? – சாந்தி சரவணன்

 

 

 

‘பேய் பிசாசு’ என்றால் குழந்தைகளுக்கு மட்டுமா பயம்? பெரியவர்களுக்கும் தான். எந்த வயது நபர்களுக்கு பய உணர்வு என்பது எந்நிலையிலும் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். நிசப்தம், இருட்டு, யாருமற்ற தனிமை இவையெல்லாம் பேய் பிசாசுகள் நமது மனதோடு பயணிக்க உகந்த நேரம். மனம் அது திடமாக இருந்தால் அவர்கள் நம்மோடு பயணிக்க முடியாது என்பதை நாம் அறிவோம்.

அதே சமயம் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து அதன் உண்மை தன்மையை அறிந்து தெளிவடைந்தாலும் “பேய் பிசாசு” பயம் கடந்து விடும். இந்த சிறுகதைகள் குழந்தைகள் வாசித்தால் அவர்கள் உள்ளத்தில் பயம் என்பது அறியாமை என புரிந்து விடும். பெரியவர்களும் தான். இங்கு வயது சிறுவர்கள் பெரியவர்கள் என்பதை நிர்ணயிப்பது இல்லை. மனமும் தான் அதை நிர்ணயக்கிறது.

வேதாளம் கேள்வி கேட்க? விக்கிரமாதித்தன் பதில் சொல்ல, சுவாரஸ்யமான கதை கேட்ட அனுபவங்கள் பல பல. கால ஓட்டத்தில் அது எல்லாம் கரைந்து மறைந்து போய்விட்டது என நினைத்து இருந்தேன். இல்லை அது இன்னும் ஆழ்மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் ஒரு துகளாக ஒட்டி உள்ளதை இந்த புத்தக வாசிப்பு மீட்டுருவாக்கம் செய்தது.

நிசப்தம் எங்கும் அமைதி அப்போது சில சத்தங்கள்
ஊஊஊஊஊஊஊஊ
சில்க் சில்க் சில்க் சில்க்
டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக்
சர்ரக் சர்ரக் சர்ரக் சர்ரக்
டொக்கு டொக்கு….
டிக் டிக் டிக்
பட பட பட

நம்முள் ஒரு அச்சத்தை உண்டாக்கும். அதை நம்மில் பலர் கடந்து வந்து இருப்போம்.
இந்த சத்தம் மட்டும் இல்லை அமைதியான நேரத்தில் ஒரு சின்ன தட்டு கீழே விழுந்தாலும் அந்த “டங்’ என்ற சத்தம் கேட்டு பயப்படுபவர்கள் பலர். திடிரென நம்மை ஆச்சிரியப்படுத்த பூம் என்று பின்னால் இருந்து நண்பர்கள் திகைப்பூட்டும் நிகழ்வில் மயங்கி விழுந்தவர்கள் பலர்.

இந்த புத்தகத்தில் பயத்தை மையமாக கொண்டு ஐந்து சிறுகதைகளை நமக்கு காட்சிப் படுத்தியுள்ளார் ஆசிரியர்.
1.நடுராத்திரி சத்தம்

2.உச்சிப்பகல் வெள்ளை முனிப்பேய்

3.சர்ரக்…..சர்ர்ரக்

4.அமுக்குப்பேயின் அட்டகாசங்கள்

5.தலையும் உடலும் இல்லாத பேய்

தங்கையின் கொலுசு சத்தத்தை பேய் என கேட்டு பயப்படும் சிறுவனை பற்றிய கதை “நடு ராத்திரி சத்தம்”.

உச்சி வெயிலில் வெள்ளை வேட்டி வெள்ளை தூண்டு அணிந்துக் கொண்டு உலா வரும் மனிதரை பார்த்து வெள்ளை முனிப்பேய் என பயப்படும் பள்ளி மாணவர்கள்மனநிலையை காட்சிப்படுத்துகிறது “உச்சிப்பகல் வெள்ளை முனிப்பேய்”.

ஒரு கிணற்று ஆமை எழுப்பும் ஒலியை ரத்தக் காட்டேரியின் வருகை என பயப்படும் ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் உதவியாளரை பற்றிய கதை ‘சர்ரக்…. சர்ர்ரக்”
கற்பனை பேயை உருவாக்கி நண்பனை பயப்பட வைக்கும் கதை “அமுக்குப்பேயின் அட்டகாசங்கள்’

விழுப்புரத்தில் இறந்தவனை மேப்புலியூரில் இறந்ததாக சொல்லி ஸ்டேஷன் மாஸ்டர் மோகன் சொன்ன செய்தியால் ஸ்டேஷன் மாஸ்டர் பழமலை உதவியாளர் பரமசிவன் கண்ட பேய் அனுபவத்தை ” தலையும் உடலும் இல்லாதபேய்” கதையில் படித்து தெரிந்துக் கொள்ளலாம்.

பிடித்த வரிகள்;

“பேய்கள் பெரியவர்களை சாப்பாட்டுக்கும் குழந்தைகளை ஸ்நாக்ஸுக்கும் வைத்துக் கொள்வார்கள்”

“முத்தையா சார் வரலாற்றுத் தொட்டிலில் எல்லோரையும் போட்டுத் தாலாடிக் கொண்டிருந்தார்”

” மனசு காணாத காட்சியையும் கற்பனை செய்கிற சக்தி மனுஷனுக்கு மட்டும் தான் இருக்கு”

ஒரு திகில் பயணத்தில் சுகமான பயணம். இந்த புத்தக வாசிப்பு அனுபவம் குழந்தைகளுக்கு” பேய் பிசாசு” என்று ஒன்று இல்லை என்பதை உணர்த்தும். தோழர் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

நன்றி

திருமதி. சாந்தி சரவணன்
சென்னை 40

புத்தகம்: பேயா? பிசாசா?
ஆசிரியர்: உதயசங்கர்
பதிப்பகம்: புக்ஸ் ஃபார் சில்ரன்,  
பக்கங்கள்:31.
விலை:30/-

 

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

      எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே....

கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

      இது ஓர் அழகான உலகம்! இது யாரோ ஒருவரால் படைக்கப்பட்டதா? இது தானாகவே உருவானதா? உலகம் அழகானதே! அறிவியலைத் தாண்டி அஞ்ஞானமும் கோலோச்சுகிறது? இது ஒரு முடிவற்ற கதை! இப்போது உலகத்திற்கு வருவோம்; உலகம் ஓர் ஒப்பற்ற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – குற்றியலுகரம் – பாபு கனிமகன்

      சிறுதிருடர்களின் சம்பாஷனைகளுடன் தொடங்கும் கதை பெருந்திருடர்களின் ஆக்கிரமிப்பை, அந்த ஆக்கிரமிப்பை நடத்த...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – முட்டிக்குறிச்சி – பாலச்சந்திரன்

        .புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமம் அகரப்பட்டியைச் சேர்ந்த தீ.திருப்பதி என்ற இயற்பெயர்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

      எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே. ஆனால் நேர்மையாகப் பதிவு செய்வதுதான் எந்தக் காலத்திலும் சாத்தியமில்லாத ஒன்று. அந்த நேர்மையான பதிவுகள்தான் சேங்கை நாவலின் வெற்றியாக நான்...

கவிதை: ‘அழகு’ – கவிஞர் பாங்கைத் தமிழன்

      இது ஓர் அழகான உலகம்! இது யாரோ ஒருவரால் படைக்கப்பட்டதா? இது தானாகவே உருவானதா? உலகம் அழகானதே! அறிவியலைத் தாண்டி அஞ்ஞானமும் கோலோச்சுகிறது? இது ஒரு முடிவற்ற கதை! இப்போது உலகத்திற்கு வருவோம்; உலகம் ஓர் ஒப்பற்ற அழகு! எந்த ஒரு மனிதனும் இவ்வுலகத்தை அழகாக்கியதில்லை; மாறாக.... அசிங்கப்படுத்தியே வந்தான், வருகிறான்; வருவான்? அந்த அசிங்கப் படுத்தல் வேறொன்றும் இல்லை; சாதி செய்து.... சமயம் செய்து.... சாக்கடையாய் ஓட விட்டதுதான்! ******** ... கவிஞர் பாங்கைத் தமிழன்...  

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – குற்றியலுகரம் – பாபு கனிமகன்

      சிறுதிருடர்களின் சம்பாஷனைகளுடன் தொடங்கும் கதை பெருந்திருடர்களின் ஆக்கிரமிப்பை, அந்த ஆக்கிரமிப்பை நடத்த அவர்கள் நடத்தும் சாணக்கியத்தை வெளிப்படையாகப் பேசுகிறது. ஒரு சிறு தொழிலாளி முதலாளியாக ஆசைப்பட்டால் அவர் எதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும்;...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here