ஜீரோ டிகிரி இலக்கிய விருது பெற்றது. ஜீவிதன் சிறந்த கதை சொல்லியாக திருச்சி மணப்பாறை வட்டாரங்களில் அறியப்படுகிறார். ஆனால் அவரின் கதை சொல்லும் அம்சங்களும் திறமையும் இன்னும் வெளியே பலருக்கும் தெரியாமல் இருக்கின்றன.
அவரின் பல்வேறு முயற்சிகளின் மத்தியில் புது நாவலையும் கொண்டு வந்திருக்கிறார் அது அவருடைய முதல் நாவலாக இருக்கிறது. கவிஞராகவு கட்டுரை ஆசிரியராகவும் நூல் விமர்சகராகவும் விளங்குகிறார் என்பது முக்கியம்.
இந்தச் செயல்களுக்கு மத்தியில் அவர்களின் முதலாவது நாவலில் அவரின் உள்ளக் கிடைக்கைகளின் பலமும் நாவல் சார்ந்த வடிவங்களின் சில பலவீனங்களும் அமைந்திருக்கின்றன கிராம சூழலில் ஜாதி ஆதிக்கம் அதிலிருந்து விடுபட முடியாத மக்கள்.. ஜாதிய அடுக்குகள் மக்களைப் பிரிப்பது மற்றும் அவர்களைக் கூறுபோடுவதை விரிவாகவே சொல்கிறார். இந்தக் கூறுபோடும் அம்சத்தில் காதல் சிதைகிறது. தாய்மை கேள்விக்குறியாக்கப்படுகிறது அன்பு என்பதும் தூரப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த அந்நியமாதலை தரும் சாதியும் அது சார்ந்த அம்சங்களும் விரிவாக பல்வேறு கதாபாத்திரங்கள் மூலமாக ஜீவிதன் இந்த நாவலில் சொல்லியிருக்கிறார். அந்த வகையில் தான் வடிவாம்பாள், போதும் பொன்னு மாயாண்டி சங்கன், காளையன் போன்ற கதாபாத்திரங்கள் எல்லாம் தென்படுகின்றன.
சொந்த மண்ணில் கதாநாயகி உயிர் விட முடிவதில்லை ஆனால் உயிர் அல்லாடிக் கொண்டிருக்கிறது ஊருக்கு வெளியே. அவளுடைய உயிர் எப்படிப் பிரிந்தது அதற்காக ரத்த சொந்தங்களும் மற்றவர்களும் எப்படி உதவி செய்தார்கள் என்பது தான் நாவலின் ஆரம்ப கட்டமாக இருக்கிறது. இந்த பிடிமன் அவளுக்கு இறப்பதற்கு முன்பே கிடைத்த விடுகிறது. அதே சமயம் அவளின் இயல்பான வாழ்க்கையும் சாதாரண வாழ்க்கையும் எப்படி கிராம மனிதர்களுக்கு முன் இருக்கிறது என்பதை பல சம்பவங்கள் தெரிவிக்கின்றன.
சொந்த மண் என்றாலும் அதை அவள் அனுபவிக்க முடியவில்லை. தூரம் போய் வேடிக்கை வாங்க வேண்டி இருக்கிறது. அந்த மனுஷியின் வாழ்க்கையை விரிவாக இடில் உள்ளது. காதல் செய்து பெற்றுக் கொண்ட பிள்ளை, அதை வளர்க்கும் சிரமங்கள் கடைசி காலத்தில் அந்த குழந்தையின் நினைப்பில் அவர் உயிர் தள்ளாடுவது என்று பல விஷயங்கள் இந்த நாவல் வந்திருக்கின்றன. பல ஆசைகள் பல எண்ணங்கள் இவை எல்லாம் சாதி சார்ந்த இறுக்கங்களாக இந்த கதாபாத்திரங்கள் தலையில் விழும் அம்சங்களை பிடிமண் நாவலில் கிராமிய சூழல் நன்கு வெளிப்படுமாறு சொல்லுகிறார், மதம் சார்ந்த நம்பிக்கைகள், ஜாதி சார்ந்த உணர்வுகள், கோயில் திருவிழாக்கள் இவற்றில் குறிப்பாக நாட்டுப்புறக் கலைகளின் வெளிப்பாடுகள் என்று கிராமிய சூழலை ஜீவிதன் நாவலில் கொண்டு வந்து விடுகிறார்.
நாவல் முழுக்க சண்டையும் சச்சரவுமாக இருக்கிறது. வழக்கமாக நாவல்களில் கதாநாயகன் கதாநாயகி இல்லாத அம்சங்கள் அந்த நாவலை இன்னும் வேறுபடுத்தும் .இந்த நாவலில் அவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு எதிரான மனிதர்களும் இருக்கிறார்கள் அந்த மனிதர்களின் வாழ்க்கை மூலமாக கிராமிய சாதிய இறுக்கம் எப்படி அவர்கள் வாழ்க்கையை நிர்மூலமாக்குகிறது என்பதை இந்த நாவலில் ஜீவிதன் சொல்லுகிறார். முதல் நாவல் முயற்சி என்பதே பெரிய பலமாகும்.
நூலின் பெயர்: பிடிமண்
ஆசிரியர் : ஜீவிதன் [ஜீவிதனின் முதல் நாவல்]
பதிப்பகம் : எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing ,சென்னை வெளியீடு
விலை: ரூபாய் 290

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

![ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் - புத்தக மோகினி [பாகம்-1] - மோ. ரவிந்தர்](https://bookday.in/wp-content/uploads/2023/11/photo_2023-11-24_13-11-20-150x150.jpg)