பொட்டலம் போல்
மடித்துக் கொண்டு
கிடக்கிறேன்
காய்ச்சலில்
மருத்துவப் பரிசோதனை ஆய்வுக்கு
என வந்தவர்
ஏதோ கொஞ்சம்
துருவிச் சுரண்டி
எடுத்துப் போனார்
முடிவுகள்
கைப்பேசியில் வரும் என…
உறக்கம் போனது
வெளிப்பட்டு விடுமோ
அடையாளப் படுத்திக்
கொள்ளாமல்
பத்திரமாக
ஒளித்து வைத்திருக்கும்
பாலின மேலாதிக்கம்
அரைகுறை படிப்பின் அதீத செருக்கு
சுய தம்பட்டம்
சாதீய மிச்ச சொச்சம்
சமனற்ற நோக்கு
சாதுரியமான பேச்சு
அப்பாவி முனைப்பு
தூக்கம் தொலைந்த
இரவின் விடியலில்
மெல்ல சோம்பல் முறித்து தாமதமாக வந்த செய்தி
அப்பாடா என்று இருந்தது
பயந்தது ஏதும் நடக்கவில்லை
அவர்கள் கருவிகளுக்குக்
கண்டு பிடிக்க
முடிந்தது
அல்ப கொரோனா தொற்று மட்டுமே
நிம்மதியாகப் புறப்பட்டேன்
மருத்துவ மனைக்கு
அப்புறம் திரும்பினேன்
வீட்டுத் தனிமைக்கு!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அவசரத்திலும், அவதியிலும் கூட நம்மை ஆற்றுப்படுத்த கவிதை வழி சிறந்ததே.
கவிதை மூலம் தொற்று அது உனக்கு தனிமை தேவை.ஆகவே உடல் நலனில் அக்கறை தேவை
கவிதை அருமை சார். மனமார்ந்த வாழ்த்துகள்