*பிழைப்பு* சிறுகதை – இரா. கலையரசி

Pilaippu Mini Story By Era Kalaiarasi. *பிழைப்பு* சிறுகதை - இரா. கலையரசி. Book Day is Branch of Bharathi Puthakalayam“சரி! இப்ப என்ன? பள்ளிக்கூடந்தான் திறக்கல, இல்ல?” என்றார் பகவதிராஜ்.

“இங்க பாரு சுடலை, இது தான் நல்ல வாய்ப்பு. போனா பொழச்சிக்கிறலாம்! உன் நல்லதுக்கு தான் சொல்றேன்.! ஏதோ! தாயா பிள்ளையா பழகிட்டோமேனு தான் இவ்வளவும் சொல்றேன்!”

கொரோனா கடுமையாக இருந்த நேரம். கட்டட வேலையும் இல்ல. கூலி வேலையும் இல்ல!

“இருந்தாலும், யோசனையா தான் இருக்குண்ணே!”

“இங்க வேலை தொடங்கினதும் நம்ம கிட்ட வேலை பார்க்க தான போற? கொஞ்ச நாள் தான?? அனுப்பு!”

வெளியே விளையாடிக் கொண்டிருந்தான் மகிழன்.!

“யாருக்கும் தெரியாது?! எந்த பிரச்சனையும் வராமல் நான் பார்த்துக்கறேன்”
நெய் தடவிய தோசையாய் வழுக்கிச் சென்றன வார்த்தைகள்.

சிறிய துணி மூட்டை தயாரானது.

மகிழனுடன் கிளம்பினார் பகவதிராஜ், இருப்பு வேலைக்காக “செங்கல் சூளை”யில் பணி
அமர்த்தப்பட்டான்”மகிழன்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.