தொற்றென் றொன்று
தோன்றி யதூஉம்
வேற்றார் என்பார்
வீட்டா ராயினும் – எனினும்
உன்னிலை காக்க
உயிரதை மீட்க
அவளென்று மிருப்பாள்
அவநிலை உடைப்பாள்
யாரவரென்றும் தெரியாமல்,
வேற்றாரென்றும் கருதாமல்,
தன்னிலையேதும் புரியாமல்,
உன்னிலைகாப்பாள் தயங்காதே!
எம்மதியதுவோ பொருட்டல்ல,
உன்கதியதுவும் இருட்டல்ல,
துன்பமெதூவும் தொடரல்ல,
என்றுனைத்தேற்ற வந்திடுவாள்.
புறவுயிரான உனைக்காத்திடவே
அகவுயிரான அவள்பனையாகி
மனப்போரொன்று புரிந்தேனும்,
மதியாலுமுனைத் தேற்றிடுவாள்.
அவளோடான ஆசைகளும்,
அளவோடான தேவைகளும்,
அகிலாரான உனையெண்ணி,
அடியோடதையே துறந்திடுவாள்.
உலகோ டுள்ள
உருபெரும் வேற்றுமை
பெண்னெனும் உன்நிலை
ஆணெனும் தன்னிலை
அவையாவும் ஒழித்திங்கு
அகிலாளும் ஓருயிரெனில்
அதுயாரோ கேட்போமினி
அவள்தானோ பிணிவாசினி
S.Dhivyadharshini.BE.ECE(2nd Yr)
D/O M.Sivakumar,
Earipanjapalli( village) ,
Panjapalli( post),
Palacode(TK)
Dharmapuri(DT)
PH no: 9677497554