155 வது பிறந்த தினம் கொண்டாடும் கியூரி..
நோபல்..பரிசு
உலகில் தலைசிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது. ஆல்ஃபிரெட் நோபலின் 1895ம் ஆண்டு உயில் நிறுவப்பட்டு நோபல் அறக்கட்டளையால் 1901 லிருந்து அறிவியலில் நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது.. 1901லிருந்து 2017 வரை 923 பேருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 49 பெண்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். பெறுவதற்கு அரிதான நோபல் பரிசை . மேரி குயூரி மட்டும் இருமுறை பெற்றுள்ளார் என்றால் அவரின் திறமை மற்றும் அறிவின் பரிணாமம் பற்றி எண்ண வேண்டும். இந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை
நோபல் குடும்பம்
உலகின் ஆக உயரிய கெளரமாக கருதப்படும் நோபல் பரிசை ஒரு முறை வெல்வதே அரிது. ஆனால் மேரியின் குடும்பம் ஒட்டு மொத்தமும் நோபல் பரிசுகளை அள்ளிச் சென்றுள்ளது. என்றால், அது குயூரியின் குடும்பம் மட்டுமே. அவரின் இல்லத்தில் மேரி குயூரி, கணவர் பியூரி குயூரி, மகள்ஐரீன் மற்றும் பிரெடரிக் ஜோலியட் என ஒட்டுமொத்த குடும்பம் 4 நோபல் பரிசை சுமந்து சென்றார்கள் என்றால் ஆச்சரியம்தான். நமக்கு .வியப்பில் விழிகள் விரிகின்றன. விழி பிதுங்குகிறது.
சாதனைப் பெண்
நூற்றாண்டு வரலாற்றில் முதன்முறையாக நோபல் பரிசை இரண்டு முறை வென்றவர் மேரி கியூரி. அதுவும் இயற்பியல் மற்றும் வேதியல் என இரண்டு வெவ்வேறு துறைகளில்,
அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் ஒரு பெண். என்பதே அந்தச் சாதனைக்கு தனிச்சிறப்பும் பெருமையும் சேர்க்கிறது. ஏனெனில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படாத அந்த கால கட்டத்தில் கலை, அறிவியல் போன்ற துறைகளில் பெண்களால் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட காலத்தில், அறிவியல் ஆண்களின் தனிச்சொத்து என்று இறுமாப்புடன் இருந்த காலத்தில் அந்த மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது. வாய்ப்பு வழங்கப்பட்டால் ஆண்களுக்கு நிகராக சாதிப்போம் அல்லது ஆண்களையும் மிஞ்சுவோம் என்று ஒவ்வொரு பெண்ணையும் நிமிரச் செய்தவர்தான் அறிவியல் மேதை மேரி கியூரி. சிறுவயது முதலே பெண்களை அடக்கி வைக்கும் பொதுப் புத்திக்கு எதிராக யோசிப்பவராக இருந்தார்
ஏழை மரியா..
போலந்து நாட்டில் 1867 , நவம்பர் 7 ம் நாள் வார்சாவில், “மரியா ஸ்க்லடவ்ஸ்கா“ (Maria Skłodowska ) என்னும் பெயருடைய மேரி கியூரி ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை வ்லேடிஸ்லாவா ஓர் ஆசிரியர் மற்றும் கடவுள் மறுப்பாளர். அ ன்னை பிரோநிஸ்லாவா . இவரும் பிரபலமான ஆசிரியர். மேரி கியூரியின் அன்னை ஓர் உறைவிடப் பள்ளியை நடத்தி வந்தார். மேரி பிறந்த பின்னர், அந்த வேலையை அன்னை விட்டுவிட்டார்.
போராட்ட குடும்பம்.
போலந்தின்சுதந்திரத்திற்கானபோராட்டங்களில்மரியாவின்குடும்பம்பரம்பரைபரம்பரையாகஈடுபட்டதனால்மரியாமற்றும்அவரதுமூத்தசகோதரசகோதரிகள்தங்கள்வாழ்க்கையைவாழமிகவும்அல்லல்பட்டனர். பட்டினிகிடந்தனர்; வாழ்க்கைக்கானபோராட்டம்வெல்லமுடியாமல்இருந்தது… அம்மாவுக்குகாசநோய்இருந்ததால்பிள்ளைகளைதொட்டுதூக்கவேமாட்டார்.மேரிகியூரிக்கு 12 வயதுஆனபோது, அவரைஅன்னையைகாசநோயின்கொடியகரங்கள்கொண்டுபோயின. உயிர்துறந்தார். அன்னையின்இறப்பால்மேரியின்இளவயதுவீட்டுவாழக்கையை, இவர்துறக்கநேரிட்டது. உறைவிடப் பள்ளியில் இருந்தே படித்தார். சிறுவயதில் மேரிக்கு அற்புதமான நினைவுத்திறனும் அறிவுத்திறனும் இருந்தது.
வேலைக்காரியாக்கிய வறுமை
அப்போது போலந்து நாடு ரஷ்ய ஜார் மன்னனுக்கு அடிமைப்பட்டு கிடந்தது. போலிஷ் மொழியை ரகசியமாகவே படிக்க வேண்டிய கட்டாயம். அப்பொழுதெல்லாம் போலந்து தேசத்தின் விடுதலைக்காக மாணவர் இயக்கங்களில் மேரி இணைந்து பணியாற்றிஇருக்கிறார். வீட்டில் வறுமை வாட்டவே வேலைக்காரியாக பணிசெய்து குடும்பத்தின் துயரைத் துடைத்தார். அப்பொழுது அரும்பிய காதலை ,”நீ வேலைக்காரி ” என்று சொல்லி,அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர்கள் நிராகரித்தனர்.
தியாக பிம்பம் மேரி
மேரி தனது 15 வது வயதில், ரஷ்ய பள்ளியில், பள்ளி இறுதி நிலையில் தங்க பதக்கம் பெற்றார். மேலே அதிகமாக அறிவியல் படிக்க எண்ணினார். அவரின் குடும்ப சூழல் அதற்கு இடம் தரவில்லை. அவர் முன்னே இரு பெரும் பிரச்சினைகள் பூதமாக நின்றன. 1.மேரி ஆசைப்படும் பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க மேரியின் தந்தையிடம் போதுமான பணம் இல்லை. 2. மேலும் பெண்களுக்கான மேற்படிப்பு போலந்து நாட்டில் இல்லை. என்ன செய்ய ? ஒரு முடிவு எடுத்தாக வேண்டும்; தமக்கையும் படிக்க வேண்டும். தீவிர சிந்தனைக்குப் பின்னர் ஒரு முடிவு எடுத்தார். அதுதான் தமக்கையை தான் படிக்க வைப்பது. மேரி , தனிக்குடும்பங்களில் வாழும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது என தீர்மானமாக ஒரு முடிவு எடுத்தார். அதன்படி . அவரது அக்கா, புரோன்யா (Bronya ) பாரிசுக்குப் போய் மருத்துவம் படித்தார். .ஆனால் மேரியால் தான் விரும்பியபடி அவரால் உயர்கல்வியை எளிதாகப் படிக்க .முடியவில்லை. ஆனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், படித்து தீர்த்தார். அறிவுப் பசி தீர்க்க கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் என படித்து படித்து தள்ளினார். ஏராளமாய் படித்தார்.
வாழ்க்கை தந்த பிரான்ஸ்
இப்படியே தமக்கைக்காகவும், எதிர்கால தனது படிப்புக்காகவும், மேரி இரண்டு வருடங்கள் பணி புரிந்து பணம் சேர்த்தார். பின்னர் அங்கேயே போலிஷ் மாணவர்களுக்கு நடத்தப்படும் , ஒரு சட்டத்திற்கு புறம்பான ஒரு சுதந்திர பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கேயே, அறிவியல் உரைகளைக் கேட்டார். ஆய்வக செயல்முறைகளையும் செய்து பார்த்தார். போலிஷ் கலாச்சாரம் கற்றுக்கொள்வதும், ஆய்வக அறிவியலையும். செய்வது. இரண்டுமே ரஷ்ய அதிகாரிகளுக்கு பிடிக்காது. எனவே யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே இவற்றை மேரி செய்தார். பறக்கும் பள்ளிக்கூடங்களில் சத்தமே இல்லாமல் படித்தார் மேரி. பின்னர் 1891, நவம்பர் மாதம், 24ம் வயதில் பிரான்ஸ் நோக்கி மேற்படிப்புக்கு போனார். அங்கேயும் இவரது வறுமை துரத்தியது. பசியோடும்,பட்டினியோடும். வறுமையோடும் போராடிக் கொண்டே ஆய்வுகள் செய்தார். அவர் படித்த பல்கலைக்கழகம் மிகவும் மதிப்பு பெற்ற பல்கலைக்கழகம். அங்கே வேதியல், இயற்பியல், மற்றும் கணிதம் இவைகளை பிரென்சு மொழியிலேயே போதித்தனர். மேரியின் திறமையால், அவர் வெகு விரைவில் பிரென்சு
பனியிலும் பசியிலும் படிப்பு
பாரிசில் கொஞ்ச காலம் தமக்கை மற்றும் அவரின் கணவருடன் இருந்தார். பின்னர் மேரி, தனியாக வீடு எடுத்து தங்கினார். ஐரோப்பாவில் எப்போதும் குளிர்காலம் பனிப்பொழிவு வாட்டி வதைத்து விடும். வறுமை மிகுந்த மேரிக்கு குளிர்காலமும் கொடுமை இழைத்தது. . சூடாக்கப்படாத அறை அவரின் எலும்புக்குள் குளிரை ஈட்டியாய் பாய்ச்சியது.உடல் விறைத்தது. சில நேரங்களில் அவர் மயங்கியும் விழுந்தார். பசியினாலும் கூட. அங்கே காலையில் படித்து மாலைகளில் பயிற்சி வகுப்பு எடுத்தார்.அத்துணை வேதனை, கஷ்டம், ஏழ்மையிலும்,1893 கோடையில், தனது 26 ம் வயதில், அந்த பல்கலையில் மேரி முதல் மாணவராக வந்து சாதனை படைத்தார். அவரின் கிரீடத்தில் இன்னொரு வெற்றிச் சிறகு குடிஏறியது. அவருக்கு கல்வியின் மேல் உள்ள காதல் அவரை மேலும் படிக்க தூண்டியது. 1894ல் வேதியல் மேற்பட்ட படிப்பை முடித்தார். ஆனால் வீட்டு நினைவு வாட்டியது. போலந்துக்கு விடுப்பு எடுத்து செல்லும் போதெல்லாம் வேலை தேடினார். போலந்து நாடு மேரிக்கு படிப்பும் தரவில்லை. பணியும் தரவில்லை.
காதலால் மோதப்பட்ட மேரி
மேரி குயூரி மீண்டும் பாரிஸ் திரும்பினார். ஆராய்ச்சிக்கு பதிவு செய்தார். முதன்முதலில் ஈயத்தின் காந்த சக்தி பற்றி ஆய்வு. பேராசிரியர் பியரியை சந்தித்தார் ;அப்போதே பியரி குயுரி (1859-1906,) மேரியின் மனத்திலும் வாழ்க்கையிலும் நுழைந்தார். பியரி மேரியிடம் தன் அன்பை பகிர்கிறார். ஆனால் மேரிக்கு காதல் எல்லாம் தனது தாய் நாட்டின் மீதே இருந்தது.. எனவே தான் போலந்து போய் அங்கேயே வாழப்போவதாக பியரியிடம் சொல்கிறார் மேரி. மேரி சொன்னதும், பியரி தானும் அவருடன் போலந்துக்கு வந்து வாழ்வதாக வாக்களிக்கிறார். இடையில் மேரி போலந்துக்கு சென்று வேலை தேடுகிறார். அங்கே அவர் பெண் என்பதாலேயே அவருக்கு அந்த பல்கலையில் பணி தர மறுப்பு வருகிறது. வேதனையுடன் பாரிஸ் திரும்புகிறார மேரி .
பிரான்சின் முதல் முனைவர்..
பாரிசுக்கு வந்த மேரியின் ஒரே ஆதரவு பியரிதான். பியரிக்கு காந்தவியலில் கட்டுரை எழுத உதவுகிறார்.அந்த கட்டுரைதான், பியரி ஆய்வு முனைவர் பட்டம் பெற பெரிதும் உதவுகிறது. பியரி முனைவர் பட்டம் பெற்று, பேராசிரியர் ஆகிறார். இருவருக்கும் கொள்ளை மகிழ்ச்சிதான். . இருவருக்கு இடையில் எல்லா வேதியலும் ஒத்திருந்தன . அறிவியல் ஆர்வமே இருவருக்கான இணைப்பு. எளிமையாக திருமணம் நடந்தது. . வாழ்க்கையில் காதல் பரிணாமமும் பரிமாணமும் போட்டியிட்டன. அவர்கள் இருவருக்கும் இரண்டு விருப்பமான பொழுது போக்குகள் இருந்தன.. மிதிவண்டி பயணமும், நீள் நெடிய பயணங்களும், இருவரின் இஷ்டமான பொழுதுபோக்குகள். இவை இருவரின் நெருக்கத்துக்கு அதிக நெருப்பூட்டியது. காதல் மிகுந்தது. ஆனாலும் மாட்டு தொழுவம் போலிருந்த ஒழுகிக்கொண்டு இருந்த ஆய்வகத்தில்தான் இருவரும் ஆய்வுகள் செய்தார்கள். அங்கிருந்து தான் மேரி முனைவர் பட்டம் பெற்றார். பிரான்சில் முதல் முனைவர் பட்டம் பெற்ற பெண் மேரி கியூரி தான்.
நோபல் வந்தது இருவருக்கும்
இன்னொரு விஞ்ஞானி பெக்கொரல் யுரேனிய உப்பில் இருந்து கதிர்வீச்சு வருவதை உலகுக்கு சொன்னார்.. முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக்கு யுரேனியத்தின் கதிர்கள் எதிலிருந்து வருகின்றன என்று மேரி ஆய்வு செய்தார்.அவருக்கு உதவ தன்னுடைய பிற ஆராய்ச்சிகளை பியரி ஒதுக்கினார். அணுக்கருவில் இருந்தே கதிரியக்கம் வருகிறது என்று சொல்லி உலகைவியப்பில் ஆழ்த்தினார். இந்த மூவருக்கும்தான் 1903ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்த
போலந்து -பொலோனியம்
பிட்ச்ப்ளேண்டே(Pitchblende) எனும் வேறொரு உப்பிலும் கதிரியக்கம் இருப்பதை மேரியும் கியூரியும் கண்டறிந்தனர் . அதை உண்டாக்கும் தனிமத்தையும் கூட கண்டறிந்தனர். அது புதுவகை தனிமம் என்பதால் அதற்கு ஒரு பெயர் சூட்ட வேண்டும். மேரி தான் பிறந்த நாட்டின் மேலுள்ள காதலால் “பொலோனியம்” என பெயரிட்டார்.பின் கதிரியக்க பொருட்களிலிருந்து ரேடியம் எனும் தனிமம் கண்டறிந்தனர்.ஆனால் நோபல் கமிட்டி, முதலில் பியூரி கியூரி மற்றும் பெக்கொரல் இருவருக்கு மட்டுமே நோபல் தருவதாக சொன்னது. ஆனால் பியூரி, மேரிக்கும் நோபல் பரிசு தரப்பட வேண்டும் என்று வாதாடி அவருக்கு வாங்கித்தந்தார். பின்னர் மேரிக்கு நோபல் பரிசு கிடைத்தது 1903ல் மேரிக்கு முனைவர் பட்டமும், நோபல் பரிசும் ஒருங்கே கிடைத்தன.;
1903ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ,மேரி கியூரி,, பியூரி கியூரி மற்றும் பெக்கொரல் ஆகிய மூவருக்கும் கிடைத்தது. நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேரி கியூரி தான். அதை வாங்கக்கூட மேரி கியூரி தம்பதியருக்கு நேரமில்லாமல் ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர் தம்பதியர் இருவரும். பின்னர் ஆய்வின் மூலம் கேன்சர் சிகிச்சைக்கு ரேடியம் பயன்படுத்தலாம் என்றும் மேரி தெரிவித்தார்.
மேரியின் ரேடியமும் முதல் உலகப்போர்
முதலாம் உலகப்போரின்போது மேரி கியூரி கண்டுபிடித்த ரேடியம், கதிர்வீச்சு ஆகியவை காயம்பட்ட போர்வீரர்களைக் காப்பாற்றப் பெரிதும் பயன்பட்டன.போர்முனையில் அவற்றைப் பயன்படுத்தி நடமாடும் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டன.
போலந்தில் மேரி சிலை
மேரியின் கணவர் பியரி.பின்னர் ஒரு விபத்தில் இறந்து போனார். அதன்பின் மேரி தனியே ஆய்வில் ஈடுபட்டு ரேடியத்தை பிரித்து காண்பித்தார் அதற்கும் வேதியியலில் 1911ல் நோபல் பரிசு கிடைத்தது. நோபல் பரிசு பணத்தில் ஏழைப்பிள்ளைகள் பயன்பெறுமாறு ஆய்வகம் கட்டிக்கொள்ள அப்படியே கொடுத்தார் மேரி. கணவரின் பேராசிரியர் பொறுப்பை மேரி பிரான்ஸ் பலகலைக்கழகத்தில் ஏற்றுக்கொண்டார்.. பிரான்சில் பேராசியர் பதவி பெற்ற முதல் பெண் மேரி கியூரி. பிறகு மேரி கியூரிக்கு படிக்க, பணிபுரிய இடம் தரமாட்டேன் என்று சொன்ன போலந்து பல்கலைக் கழகம், மேரி கியூரியின் சிலையை கல்லூரியில் நிறுவியது. இப்படி நிறுவப்பட்ட முதல் சிலை மேரியுடையதுதான். ரேடியத்துக்கு பலர் காப்புரிமை பெறச்சொன்ன போதும், அதனை மறுத்து எளிய மக்களின் வாழ்க்கையை காப்பாற்றும் மருந்தில் நான் பொருளீட்ட விருப்பமில்லை என்று தெளிவாக சொன்னார் மேரி.
மேரிக்கு இரண்டு பெண்கள். இளைய பெண் ஈவா கியூரி ஒரு பத்திரிகையாளர்.102 வயது வரை வாழ்ந்து இறந்தார். மூத்த பெண் ஐரீன் ( 1897 -1956) அம்மாவைப் போலவே பெரும் விஞ்ஞானியாக இருந்தார்.
கண்டுபிடிப்பே பாதிப்பான துயரம்
கதிரியக்கத்தின் ஆபத்தான சூழலில் மேரியும் ஐரீனும் பணியாற்றினர்.அம்மாவை பாதித்த கதிரியக்கம் ஐரீனையும் பாதித்தது. ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மேரிகியூரி இறந்தார். அம்மா இறந்ததற்கு அடுத்த வருடத்தில் ஐரீன் ஜோலியட்-கியூரி தனது கணவர் பிரெடரிக் ஜோலியட்-கியூரியோடு இணைந்து 1935ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றார்.
இன்றுவரை ஒரு குடும்பத்திலிருந்து மிகக்கூடுதலான நோபல் பரிசுகளை வென்ற பெருமை மேரி கியூரியின் குடும்பத்துக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இவரது மகள்கள் ஹெலன் மற்றும் பியரியும் ஆகியோரும்கூடப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள். ஐரீன் ஜோலியட்-கியூரி: மறைந்த நாள்- 1956. மார்ச் 17
இளம் வயதில் தனது அம்மாவின் விஞ்ஞானி நண்பர்களோடு பழகும் வாய்ப்புகளைப் பெற்ற ஐரீன் அறிவைத் தேடுவதில் ஆர்வமிக்கவராக இருந்தார். மதத்தின் பிடியில் இருந்த உயர் கல்விநிலையங்களில் நுழைந்து டாக்டர் பட்டமும் பெற்ற பிறகு தனது பெற்றோர் கண்டுபிடித்த போலோனியம் எனும் தனிமத்தைப் பற்றி ஆழமாக ஆய்வு செய்தார். நோபல் பரிசும் பெற்றார்.
கடவுள் மறுப்பாளர் மேரி
மேரி குயூரி வாழ்ந்த காலத்தில் பரவிய நாஜியிசத்துக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்த அவர் சோசலிச அரசியலுக்கு ஆதரவானவராக இருந்தார். மேரி கடைசிவரை கடவுள் மறுப்பாளராக இருந்தார்.
67 வயதில் 1934ம ஆண்டு மேரி இறப்பை தழுவினார்.. அவரின் மரணத்திற்கு காரணம் எந்த பாதுகாப்பும் கொள்ளாமல் கதிர்வீச்சுக்கு உள்ளானது தான் ;ஆனால் அதன் மூலம் பல கேன்சர் நோயாளிகளின் உயிர் காப்பாற்றும் செம்பணியை முடித்து இருந்தார் தன்னையே அர்ப்பணித்து பலர் உயிர் காத்த சமூகப் போராளி
முறிக்கப்படாத சாதனை
ஆணாதிக்கம், சட்டதிட்ட இடையூறு, சமுதாயக் குறைபாடு, நோபல் கமிட்டியின் ஒரவஞ்சனை எனப் பல தடைகள் இருந்தாலும் அவற்றை மறக்கடிக்கும் வகையில் ஒரு கதை நோபல் வரலாற்றில் உண்டு. அதுதான் மேரி கியூரியின் பெரும் சாதனை. இருவேறு அறிவியல் துறைகளுக்காக விருது பெற்ற இவரது சாதனை இன்னும் முறியடிக்கப்படவே இல்லை
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
“மேரியின் ஆய்வு அவரது வாழ்நாளில் அப்பழுக்கற்றது, எல்லையற்றது. அவர் மனித சமுதாயத்துக்கு மட்டும் அவரது பணியை அர்ப்பணிக்கவில்லை, அவர் தனது எல்லா வேலை ஆய்வுகளையும், ஓர் நியாய தர்மத்தின் அடிப்படையிலேயே தார்மீக தரத்துடன் இருந்தது. இவ்வளவையும் மேரி ஆத்மார்த்த உணர்வுடனும், நல்ல உடல் மற்றும் உள்ள வலுவுடனும், நீதி உணர்வுடனும், செய்து முடித்தார். இப்படி அனைத்துவித அரிய நல்ல குணங்களும் ஒருவரிடம் அமைதல் அரிது “ALBERT EINSTEIN
“I believe that Science has great beauty. A scientist in his laboratory is not a mere technician; he is also a child confronting natural phenomena that impress him as though they were fairy tales.”—Marie Curie
Marie Curie quotes
We must believe that we are gifted for something and that this thing must be attained.” “Nothing in life is to be feared; it is only to be understood.” “I am one of those who think like Nobel, that humanity will draw more good than evil from new discoveries.”
Sklodowska (Skłodowska) என்பது சந்திரனின் தொலைவில் அமைந்துள்ள ஒரு பெரிய சந்திர பள்ளமாகும். மேரி கியூரிக்கு பெருமை சேர்க்க இப்பெயர் இடப்பட்டுள்ளது.
– பேரா.சோ. மோகனா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.