கண்கள் பேசியதே கேட்க வில்லையா!

பார்வையின் காட்சியை உணரவில்லையா!

மௌனம் எதையும் உணர்த்தவில்லையா!

மனம் அழைத்ததே புரியவில்லையா!

பல இரவு, பகல் காத்துகிடந்தேனே!

வரவேண்டும் என்று தோன்றவில்லையா!

உன்னை மட்டும் கவனித்து உயிர் வளர்த்தேன்

வரும் வழியில் புல்லெனப் பூத்து இருந்தேன்

உள்ளம் உன்னிடம் கதைத்துக் கொண்டே இருக்கிறது,

பிரபஞ்சத்தில் உன்னைப் போல் தூயவன் இல்லை,

உனக்கானவன் மனதில்
நீ மட்டுமே வாழ்கிறாய்,

நினைவே நீயானாய் என்றது,

பிரபஞ்சம் உன்னிடம் கூறுவதைக் கவனி,

தேடிக்கொண்டே இருக்கிறாள்
தெரிந்துகொள்ள மாட்டாயா?

 

அ. ஷம்ஷாத்,
சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *