கடவுளுக்கு சுதந்திரம் – பிச்சுமணி

Pitchumani Poetry கடவுளுக்கு சுதந்திரம் (Freedom for God) in Tamil. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.கடவுளுக்கு சுதந்திரம்

வெள்ளைகார
ஆதிக்கத்திலிருந்து இந்தியா
விடுபட்டதைபோல்
ஓர் வெள்ளை ஆதிக்கத்திலிருந்து
விடுபட்டார் கடவுள்.

கடவுளின் தேசமென்ற கேரளத்தில் கொஞ்ச நாளுக்கு முன்
சுதந்திரம் அடைந்த கடவுள்.

வாழ்த்து சேதி அனுப்பினார்
தமிழ் கடவுளுக்கு..

தேன்தமிழில்
தேவராமும் திருவாசகமும் கேட்க
உள்ளுக்குள் துள்ளிக்குதித்தது
கடவுள் மனசு.

தாலாட்டு பாடும் தாயினம்
இனி நமக்கு ஓதுவார்கள் என்றதும்
குழந்தையாய் குதூகலமாகினார் கடவுள்.

தூணிலும் துரும்பிலும்
இருக்கும் கடவுளுக்கு
தனி மொழிதான் பிடிக்குமென்றவர்கள்
கொஞ்சம் பதறினார்கள்.

வாசலிலேயே மறிக்கபட்டவர்கள்
கருவறைக்குள் வந்ததும்
ஆதிக்க நூல் கழன்றுவிடுமோயென
அச்சம் கொண்டனர்.

ஆகமம் ஆச்சாராமென்று
ஓட்டை பலூன்களை
ஊதி..ஊதி..எப்படி வெடிக்கலாமென
யோசித்து மூச்சிறைக்கிறார்கள்.

ஆனால்..

கடவுள் இப்போது
பெரும் மூச்சு விட்டார்
ஆகஸ்ட்15 வந்துவிட்டதாய் அகமகிழ்ந்தார்
கொண்டாட ஆயத்தமானார்
வர்ண மாயத்தை மூட்டை கட்டி தூக்கிப்போட்டார்

கருப்பு சிவப்பு நீலம்
கடவுளை குளுமையாகியது
கடவுள் விடுதலையானார்.

பிச்சுமணி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.