பரிசுப் பொருட்களாய் பரிதாப உயிரினங்கள் | ferrets என்ற மர நாய்கள் -Captive animal safety வளர்ப்பு விலங்குகள் பாதுகாப்பு - https://bookday.in/

பரிசுப் பொருட்களாய் பரிதாப உயிரினங்கள்

பரிசுப் பொருட்களாய் பரிதாப உயிரினங்கள்

–  முனைவர். பா. ராம் மனோகர்

 

பண்டிகைக் காலம் தொடர்ந்து வருகிறது! சமீப காலமாக பரிசுகள், ஒருவருக்கொருவர், பரிமாறிக் கொள்வது, நம் சமுதாயத்தில், குடும்பங்களுக்குள், நட்பின் இடையில், வழக்கமாக உள்ளது. ஒரு புறம் வணிகம், பெருகுதல், படைப்பாற்றல், புதுமை உருவாக்கம் ஆகிய நேர்மறை காரணங்கள் நாம் அறிந்திருந்தாலும், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பரிசுப் பொருட்களின் குவியல் இல்லங்களிலும், சில சமயம் பொதுவிடங்களிலும், கழிவுகள் அதிகரிப்பு, மேலாண்மை செய்யும் தவறுதல், மறுசுழற்சி நிலையில்லாத குப்பை குவியல் பற்றிய கவலை மறு புறம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

சரிங்க! இது பற்றிய சிந்தனை எழுந்து கொண்டுள்ள நிலையில், மனித மனங்கள், அடுத்தவரின் நன் மதிப்பு பெற, மிகுந்த விலை மதிப்பு கொண்ட, வித்தியாசமான பரிசுகள் அளிக்க, ஆவலாய் இருக்கின்றன. மனிதர்களில் அன்பு, பாசம், காதல், நட்பு உறவுகளை மேம்படுத்தவும் பரிசுகள் நிச்சயம் உதவுகின்றன என்பதை நாம் மறுக்க இயலாது. எனினும் பரிசுகள் நம் சுற்றுசூழல், இயற்கை பாதிக்கும் பொருட்களாய், குறிப்பாக, செல்ல பிராணிகள், வன விலங்குகளாக,இருக்கும் நிலையில், சற்று கவனமாக மக்கள் இருக்க வேண்டியது அவசியமாகும்.

பெரும்பாலும், வெளிநாட்டு வன விலங்குகள், செல்லப் பிராணிகள் ஆக வளர்க்கும் நிலையில், அவற்றால் பல சவால்களை, சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இடம், கலாசாரம், உணவு பழக்கம், பலரிடமிருந்து வேறுபட்ட விலங்கு வளர்ப்பு நவீன, பழக்கம் ஆகிய காரணிகளால், வன விலங்குகளைக்கூட, வளர்க்கின்றனர்.ஹெட்ஜ்ஹாக், பல்லிகள், மார்சூப்பிய பாலூட் டிகள், பூச்சிகள், சிலந்திகள், தவளை, பாம்புகள், ஆமைகள், குரங்கினங்கள், கிளிகள்,, நத்தை, மறவட்டை, தேரைகள் ஆகியவற்றை வளர்ப்பு செல்ல பிராணிகளாக தம்முடன் வைத்துக்கொள்ளும் நவீன, விரும்பத் தகாத, வருத்தம் தரக்கூடிய, புதிய
பொழுது போக்கு உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இதனால் அத்துமீறிய விலங்கு கடத்தல் குற்றங்களும், அனைத்து நாடுகளுக்கு இடையில் அதிகம் ஆகிவிட்டது. சட்டபூர்வ ஏற்றுமதிக்கு, நிபந்தனைகளுக்கு உட்பட்டு CITES (CONVENTION OF INTERNATIONAL TRADE OF ENDANGERED SPECIES )அழிந்து போகும் நிலையில் உள்ள அரிய விலங்குகள் வணிகம் தடைகள் உள்ளன.

பரிசுப் பொருட்களாய் பரிதாப உயிரினங்கள் | ferrets என்ற மர நாய்கள் -Captive animal safety வளர்ப்பு விலங்குகள் பாதுகாப்பு - https://bookday.in/

ஐக்கிய அமெரிக்க நாட்டில் US Captive animal safety act 2003 வளர்ப்பு விலங்குகள் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. எனினும் பல விலங்குகள் சரியான அரசு நடவடிக்கைக்கு உட்பட்டு வராமல், உரிய பராமரிப்பின்றி வளர்க்கப்பட்டு வரும்போது, சுகாதார,
நோய்கள் பரவும் பிரச்சினைகள் வரும் வாய்ப்புள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் மேற்கு மாகாண பகுதியில், சமீப காலமாக FERRET என்ற மரநாய் என்ற விலங்குகளை அதிகமாக செல்லபிராணிகளாக, வளர்க்கும்
வழக்கம் பரவி வருகிறது. நீண்ட உடல், மென்மையான அமைப்பு, கூரிய நாசி பகுதி கொண்ட இந்த மர நாய்கள் மாமிச உண்ணிகள் ஆகும். ஆனால் இவற்றின் நடத்தை வன வாழிடத்தில் வசிப்பது போல் உள்ளது. உயிரியல் ஆய்வு அறிஞர்கள், பல்வேறு சிற்றின வன விலங்குகள், செல்லபிராணிகளாக மாற்றம் செய்யும்போது புதிய பிரச்சனை, தாக்கங்கள், உணவு பங்கீடு, போட்டி, உள்ளூர் உயிரினங்கள் தாக்கப்பட்டு கொல்லப்படுதல், நோய் பரவுதல் ஆகியவை ஏற்படுகிறது. ஆய்வின் படி இங்கு 122,வளர்ப்பு விலங்கு கடைகள், அவற்றில் 24 வெளிநாட்டு உயிரினங்கள் விற்கப்படும் நிலை அறியப்பட்டுள்ளது.

பரிசுப் பொருட்களாய் பரிதாப உயிரினங்கள் | ferrets என்ற மர நாய்கள் -Captive animal safety வளர்ப்பு விலங்குகள் பாதுகாப்பு - https://bookday.in/

உள்ளூர், சுற்றுசூழல் அமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் ferrets என்ற மர நாய்கள், கடற்கரை பகுதியில், தரையில் கூடு கட்டும் பறவைகள், பெங்குயின்
போன்றவற்றை கொல்லக்கூடியவை. தென் ஆப்பிரிக்கா, மேற்கு மாகாண பகுதியில் அந்த வாழிடத்துக்கு உரிய தாவரங்கள், விலங்குகள் அதிகம் காணப்படுகின்றன. அவற்றிற்கு Ferrets என்ற மரநாய்கள் பாதிப்பு ஏற்படுத்தும் நிலை உள்ளது. ஏனெனில், இந்த குறிப்பிட்ட ferret மர நாய்
இனங்களை இயற்கையாக உணவாக,வேட்டையாடி அழிக்கும் பருந்துகள், காட்டு நாய்கள் அங்கு இல்லை. இதனால் இயல்பாக ஒவ்வொரு ஆண்டும் 9 குட்டிகளை
மர நாய்களின் இன தொகை பெருகும் நிலை உள்ளது. மனித சுகாதார கேடுகளுக்கும், கால்நடை விலங்குகளுக்கு தீமை நோய்கள் பரவசெய்வதில் இவை முன்னிலை வகிக்கின்றன. லெப்ட்டோ ஸ்பைரோசிஸ், கேம்ப்பைலோ பாக்டீரியோசிஸ் ஆகிய மனித நோய்களுக்கு கடத்தி ஆக இருப்பது மிக அபாயகரமான சூழல் நிலவுகிறது.

இங்கு வாழும் மக்கள் விழாகாலத்தில் இத்தகைய விலங்குகளை பரிசளிப்பு தரும் வழக்கம் தவிர்க்க, உரிய விழிப்புணர்வு பெறவேண்டும். குறிப்பாக ferrets என்ற
மரநாய்கள் வளர்ப்பு, பராமரிப்பு சிக்கல்கள், பிரச்சினை பற்றியறிந்து அவற்றை முறையாக வளர்க்கலாம். அந்த நாட்டு அரசு, செல்லபிராணிகள் வணிகத்தினை முறையாக கண்காணிக்க வேண்டும். FERRET மர நாய் வளர்ப்பு, செல்ல பிராணிகளாக மக்கள் வாங்குவது தடை செய்து, மற்ற துயர் கொண்ட உள்ளூர் வளர்ப்பு விலங்குகளை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தென் ஆப்பிரிக்காவில் தேசிய சுற்று சூழல் மேலாண்மை உயிரின சட்டத் தின்படி , வெளிநாட்டு ஊடுருவும் விலங்குகள் பற்றிய நடவடிக்கை மேற்கொள்ள இயலும்.

பரிசுப் பொருட்களாய் பரிதாப உயிரினங்கள் | ferrets என்ற மர நாய்கள் -Captive animal safety வளர்ப்பு விலங்குகள் பாதுகாப்பு - https://bookday.in/

தென் ஆப்பிரிக்கா மட்டுமல்ல, பல்வேறு நாடுகளில் நிலவும் அந்நிய, வன விலங்குகள் கடத்தல் மூலம் பல்வேறு பிரச்சினைlகள் தொடர்ந்து சமுதாயம் சந்திக்கும் நிலை உள்ளது. நம் நாட்டிலும் வன விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அதிசயமாக சரணாலயங்கள், தேசிய பூங்கா போன்ற இடங்களில் கண்டு மகிழ்ச்சி கொள்ள எந்த தடையும் எப்போதும் இல்லை. ஆனால் அவற்றை வளர்ப்பு செல்ல பிராணிகளாய், மாற்றி, நம் இல்லங்களில் வைத்துக் கொள்ள மக்கள் விரும்புவது தவிர்க்க வேண்டும். அந்த விலங்குகள் தம் இயற்கை சூழலை இழந்து, நடத்தை மாற்றம் பெறுவது, உணவு, பழக்கம், இன பெருக்க செயல்பாடுகள், நோய் பரவுதல், பராமரிப்பு ஆகிய கூடுதல் பிரச்சினைகளை அவர்கள் சந்திக்கும் நிலை ஏற்படும்.

பரிசு பொருட்களாக உயிருள்ள, விலங்குகளளை தருவது, பெறுவது, வைத்திருப்பது ஆகிய முறைகள் நிச்சயம் நம் வாழ்க்கைக்கு , புதிய கவுரவம் அளிக்க போவதில்லை என்பதை நாம் உணரவேண்டும். வன விலங்குகள், நம்மை ஒத்த உயிரினங்கள், அவற்றின் அரிய அழகு, வண்ணம் ரசித்து, அவற்றை பாதுகாக்க மட்டும் நாம் மனப்பான்மை கொண்டு குழந்தைகள், படித்த பள்ளி, கல்லூரிகளின் இளைஞர்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்த வேண்டும்.

கட்டுரையாளர் :

 

–  முனைவர். பா. ராம் மனோகர்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *