கவிதை | பிழையா பிழைப்பு | Poems | கவிதைகள்

கவிதை: பிழையா பிழைப்பு – அ.சீனிவாசன்

ஒருரூபாய்க்குச் செப்பல் தைக்கும் பெரியவர்,
ரெண்டு ரூபாய்க்கு இட்லி விற்கும் மூதாட்டி,
அய்ந்து ரூபாய்க்கு கிழிசல் தைக்கும் டைலர்,
இருபது ரூபாய் சார்ஜ் பண்ணும் ஆட்டோ டிரைவர்,
25காசு மீதியை தேடி வந்து தரும் கண்டக்டர்,
காசு வாங்காமல் சான்று அளிக்கும் அலுவலர்,
இன்னும் கூட இன்றும் கூட கண்ணில் சட்டெனப் படுகிறார்கள் குறைவாக இருப்பதால்!
மனக்குறைவின்றி இருப்பதால் தொடர்ந்து பிழைக்கத் தெரியாமல் பிழைக்கிறார்கள்,
பிழையின்றி பிழைக்கிறார்கள்!
பொருள் மட்டும்தேடி பிழைப்பிற்காக தன்னை தொலைக்காமல் இருக்கிறார்கள்,
பிறர் பிழைப்பில் தொல்லை கொடுக்காமல்!
பிழைக்கத் தெரியாதவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் அல்ல,
பிறரையும் பிழைக்க விடுபவர்கள்!
பிழைக்கத் தெரியாமல் வாழும் வாழ்விற்கு இத்தனை சப்பைக்கட்டு கட்ட வேண்டியிருக்கு!!!
எழுதியவர் 
அ.சீனிவாசன்




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 4 Comments

4 Comments

  1. த. ராஜவேலு

    பிழைக்கத்தெரியாதவர்கள் பிழைக்கத்தெரியாதவர்கள் அல்ல
    பிறரையும் பிழைக்க வைப்பவர்கள்.
    அருமை 👍

  2. கௌ.ஆனந்தபிரபு

    பிழைக்கத்தெரியாத
    பிறரை பிழைக்க வைக்கிற
    அந்த உள்ளங்கள் வாழ்க.
    அருமை தோழர்.
    வாழ்த்துகள்.

  3. Madhu

    Vera level sir. En appa va justify panra matiri iruku

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *