ப. க. பொன்னுசாமி அவர்களின் கட்டுரைகள் குறித்து..

உடுமலையில் வசிக்கும் முன்னாள் துணை வேந்தர் அவரின் சமீபத்திய நூல் இது

கொரானா காலத்தில் உலகில் கல்வித்துறை இதுவரை கண்டீராதச் சிக்கல்களை எதிர் கொண்டு வருகிறது.  கல்வி அறிவியல் , பண்பாட்டுகழக ( யுனஸ்கோ ) சமீபத்திய அறிக்கையில் 150 கோடிக்குழந்தைதைளின் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது.   கொரானா போல் எபோலா நெருக்கடி ஆப்ரிக்காவில் இருபத்தைந்தாயிரம் குழந்தைகளை  உயிரை பாதித்தது. குழந்தைகளின் பள்ளி இடைநிற்றல் அதிகமானது. இளம் வயதிலே மகப்பேறு என்ற பாதிப்பும் வேறு

இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் அமலாக்கம் வேறு இந்த கொரானா காலத்தில் கடுமையாக மாநிலங்களை,  மாநில மொழிகளைப் பாதிக்கிறது.அதன் சாதகபாதகங்களை இந்நூலில் முன்னாள் துணைவேந்தர் ப க பொன்னுசாமியின் கட்டுரை ஒன்று அலசுகிறது. மொழிபற்றிய நாட்டின் அறிவியல் தொழில் நுட்ப தொடர் முன்னேற்றம் பற்றிய உங்கள் அச்சங்களெல்லாம் வெறும் பிரம்மைகள் என்று நிருபிக்கும் வண்ணம் புதிய கொள்கையின் நடை முறை விபரங்கள் வெளிவந்தால் மகிழலாம் என்று நேர் மறையான நம்பிக்கைகளை இதில் விதைத்திருக்கிறார்.

 எதிர்க்காலம் மிகவும் சவாலாக இருக்கப்போகும் நிலையில்  கல்வி நிலையங்கள் கொள்ளவிருக்கிற சீர்திருத்தங்கள் அது வசதி படைத்தவர்களுக்கானதாக இல்லாமல் எல்லோருக்குமான அறிவியல் பூர்வமானதாகவும் மக்களுக்கானக்கல்வியாகவும் இருக்க வேண்டிய விருப்பங்களையும் இக்கட்டுரைகளில் தெரியப்படுத்தியிருக்கிறார்.அறிவியல் சார்ந்த இவரின் எண்ணங்கள் மக்களுக்கானதாகவே இருக்கிறது கல்வித்துறை அறிவியல்துறை சார்ந்த குறிப்பிடத்தக்க கொங்கு நாட்டைச்சார்ந்த சிலரின் ஆளுமைகள் பற்றியச் சித்திரங்கள் சிறப்பானவை . அவற்றில் அமரர்கள் நா.மகாலிங்கம், சத்தியநாதன் பற்றியவை முக்கியமானவை.  ( கல்விச் சேவை நாட்டுத்தொண்டு.. , மகாலிங்கம் அவர்களுக்கு பணம் சேர்க்க்கும் ஆசையில் இப்படி ஒரு கல்லூரியா என்று வியக்கும் உறவுகள் ..சத்யநாதனின் இரங்கல் கட்டுரை மேடையில் உறவுகளைப்பக்கத்தில் வைத்துக்கொண்டு ஆறுதலாய் உரையாடும் பாணி கவனத்திற்குரியது )

ஆளுமை என்ற வகையில் நாணயவியல் கிருஷ்ணமூர்த்தி பற்றியக்கட்டுரை பல சுவாரஸ்யமானத் தகவல்களைக் கொண்டிருக்கிறது. )

நமது கல்விச்சாலைகள் இந்த உணர்வின் ஊற்றுக்கண்களாக பாடங்களாக பால் சர்க்கரைச் சேர்ப்பின் சுவையைக் காட்டுவதாக இருக்கட்டும் என்ற அவரின் எண்ணங்கள் உயர்ந்தவை.



பல்கழைக்கழங்களில் உயராட்சி அமைப்பு, துணை வேந்தர் நியமந்த்தில் இருக்கும் குளறுபடிகள் , லஞ்சம் போன்றவற்றைச் சரியாக சொல்லும் கட்டுரை தினசரியொன்றில் வந்தபோது நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.அறிவியல் சாதனைகள் குறைந்து போயிருப்பதும் தரமற்ற ஆசிரியர்கள் நுழையக்கூடாத வழிகள் பற்றியக்கருத்துக்கள் கவனித்திற்குறியவை.

வீட்டு வளப்புப் பிராணிகள் பற்றிய அனுபவச்சித்திரங்களில் பல நல்ல சிறுகதைகள அடங்கியுள்ளன. (வேணும் போது திங்கும் …நாய் இயல்பை மனிதர்கள் கற்றுக்கொள்ளலாம். மகனின் நினைவுகளோடு மிதக்கிறது இக்கட்டுரைகள் .. மூன்று ஜானிகள் .. நாய்கள்,  பூனைகள் என)புதுக்கல்விக்கொள்கையில் தாய்மொழி முக்கியத்துவம் பற்றிய பல கேள்விகள் உள்ளன.

சிறுபான்மை இனத்தை பெரும்பான்மையினம் சர்க்கரை என்று உவந்து ஏற்ற பூமியல்லவா நாம் வாழும் நாடு என்று ஒரு கட்டுரை ஆரம்பிக்கிறது. நாட்டின் எல்லா மொழிகளையும் கொண்டாட வேண்டும். குறிப்பிட்ட ஓரிரு மொழிகளைக் கொண்டாடுவதன் மூலம் ஒரு நாடு ஒரு மக்கள் ஒரு பண்பாடு ஒரு மொழி என்ற தவறான சித்தாந்தம் பன்முகத்தன்மையை குலைத்து  ஒருமுகத்தன்மையை புகுத்தும் செயல்கள் இந்தியச் சமூகத்திற்கு தீங்கு விளைவிவிப்பவை

கொரனா  நோய் சார்ந்த் எண்ணங்களும் அதில் தனிப்பட்ட அனுபவக்கருத்துக்களும்   சுவையானவை

இரண்டு தீபாவளிக் கட்டுரையில் 1996 தீபாவளி சமயத்தில் நாவரசன் மரணம் 2019 ல் சுஜீத்தின் ஆழ்துளைக்கிணறு சாவு – இரண்டையும் சொல்கையில்  ரணங்கள் கிளறி ஏற்படும் சோகம் அளப்பரியது.

ஒரு கல்வியாளரின் அறிவியல் பார்வையுடனான மக்கள் மையப்பார்வையை பற்றிய பல கருத்துக்களை இக்கட்டுரைகளில் காணமுடிகிறது (விலை ரூபாய்  80)



நூல்: பாலில் சர்க்கரை பழுதாகலாமோ 

ஆசிரியர்: பி.கே.பொன்னுசாமி

3 Ramalingam layout , DV Pattanam,

Udumalpet 642 126

விலை: ரூபாய்  80



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *