ரூபிக் க்யூப் (Rubik Cube) எனும் அற்புதம் கண்டுபிடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. கியூபை கையில் வைத்துக்கொண்டு அதன் பக்கங்களை ஒரே வண்ணமாக மாற்றுவதற்கு நமக்கு விடுக்கப்படும் சவால்கள் சிறுவயதிலிருந்து என்னை, எப்படி ஆக்கிரமித்தன என்பது என் ஞாபகத்துக்கு வருகிறது.
கல்லூரி இறுதியாண்டின்போது எனக்கு ரூபிக் க்யூப் என்னுடைய கல்லூரியில் விடுதி தோழனான அப்துல்லா எனும் மாணவனின் வழியே ஒரு அயல்நாட்டு விளையாட்டு பொருளாகஎன்னிடம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
விடுதியிலிருந்து வீடு திரும்புகின்ற ஒரு பேருந்து பயணத்தில் நான் அதனை பலவாறு முயற்சிசெய்து என்னுடைய நுண்ணறிவை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டிருந்தேன். இயற்பியல் மூலம் கணிதத்தையும் குறிப்பாக வரை பட இயலின் ஒருவகை நவீனத்துவ வரைபட டோப்பாலஜி இயலையும் நான் கல்லூரி இறுதி ஆண்டில் பாடமாக கற்றிருந்தேன். ரூபிக் க்யூப் என்பது ஹங்கேரிய கட்டிடக்கலை பேராசிரியரான எர்னோ ரூபிக் (Ernő Rubik) என்பவரால் 1974ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவகை 3D அமைப்பு ஆகும். ஆரம்பகாலத்தில் இது மேஜிக் க்யூப் என்று அழைக்கப்பட்டது. 1978-ல் அதற்கு க்யூப் புதிர் என்று ஒரு பெயர் வைக்கப்பட்டது.
1980 – ல் ஐடியல் டாய்கார்ப்பு மூலம் வணிகர் டிபோர்ராசி மற்றும் செவன்டான் சிங் நிறுவனர் கிரீமர் ஆகியோர் அதை சந்தைக்கு இறக்கி இருக்கிறார்கள். சர்வதேச அளவில் சந்தைக்கு வந்த அந்த ஆண்டில் ஜெர்மன் விளையாட்டு சிறப்பு விருதை அது வென்றது. இந்த தகவல்கள் எல்லாம் பிற்காலத்தில் நான் அதனை குழந்தைகள் விளையாடுவதை கண்டு அதிசயித்த பொழுது தெரிந்து கொண்ட விஷயங்கள்.
தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் சுமார் 500 மில்லியன் கியூபுகள் விற்கப்படுகின்ற. கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள். ஒருமுறையாவது முயற்சியும் செய்திருப்பீர்கள். அசல் கிளாசிக் ரூபிக்ஸ் க்யூப்ல் ஆறு முகங்கள் உண்டு. ஒவ்வொரன்றும் ஒன்பது வண்ண ஸ்டிக்கர்களால் மூடப்பட்டிருக்கும். ஆறு, திட நிறங்களில் அவை உள்ளன. வெள்ளை, சிவப்பு, நீலம், ஆரஞ்சு, பச்சை மற்றும் மஞ்சள் கனசதுரத்தின் சில பிந்திய பதிப்புகளில் இதற்கு பதிலாக வண்ண பிளாஸ்டிக்கில் பேனல்களை பயன்படுத்ததொடங்கினார்கள்.
ஆரம்பத்தில் மரத்தில் வந்த அது பிற்காலத்தில் பிளாஸ்டிக் வந்துவிட்டது. இப்போது உங்கள் கையில் கிடைப்பதெல்லாம் பிளாஸ்டிக் மாடல்கள் மட்டும்தான். 1988 முதல் நிறுவங்களின் அமைப்பு மாற்றப்பட்டது.
வெள்ளை நிறத்திற்கு எதிராக மஞ்சள், நீலத்திற்கு எதிராக பச்சை, ஆரஞ்சுக்கு எதிராக சிவப்பு மற்றும் சிவப்பு வெள்ளை மற்றும் நீலம் கடிகார திசையில் கடிகார அமைப்பின் படி இயங்குவதாக மாற்றப்பட்டது. தற்போது மேலும் சில சிக்கலான விஷயங்கள் சேர்க்கப்பட்டன. ஆரம்ப கனசதுரங்களில் நிறங்களின் நிலை கனசதுரத்தில் இருந்து கனசுதரத்திற்கு மாறுபட்டு இருக்கும்.
ஆனால் தற்போதைய காலத்தில் எல்லா கனசதுரங்களும் ஒரே மாதிரியாக அமைக்கப்பட்டு அவை சந்தையில் இறக்கப்படுகின்றன. அற்புதமான மூளை விளையாட்டான இது உலகத்தின் பிரமாண்ட பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக பல முறை வெற்றி பெற்றிருக்கிறது.
நாம் நினைப்பதை போல ஹங்கேரி, பேராசிரியர் ரூபிக்ஸ் மட்டுமே இதை தயாரித்துவிடவில்லை. இந்த ரூபிக்ஸ் க்யூப்க்கு பல முன்னோடிகள் உண்டு. உதாரணமாக நான் லாரி பி நிக்கோலஸ் என்பவரின் குழுக்களில் சூழலும் துண்டுகளுடன் கூடிய புதிர் என்கிற ஒரு விளையாட்டை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். நிக்கோலஸ் கனசதுரம் காந்தங்களில இணைக்கப்பட்டது.
ரூபிக் தனது கனசதுரத்தை கண்டுபிடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிக்கோலஸ் இதற்கு காப்புரிமை பெற்றுவிட்டார் என்று ஒரு சர்ச்சை உண்டு. அதே1 970-ல் ஃப்ராங்க் பாக்ஸ் என்று ஒரு பொழுது போக்கு சாதனமும் சந்தைக்கு வந்தது. இது ஒரு நெகிழ் புதிர். அதாவது ஒரு கோள மேற்பரப்பில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று வரிசைகளாக இதை அமைத்திருந்தார்கள்.
இப்போது நாம் ரூபிக்கு வருகிறோம். 1970-களில் புடா பெஸ்ட் என்கிற ஒரு ஊரில் ப்லேடு ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ் அகாடமியில் எண்ணை ரூபிக் பணியாற்றி வந்தார். பேராசிரியர் ரூபிக் தனது மாணவர்கள் 3D பொருட்களை புரிந்துகொள்ள உதவும் ஒரு கற்பித்தல் கருவியாக தன்னுடைய க்யூபை வடிவமைத்தார். அவரது உண்மையான நோக்கம் முழு என்ஜினியரிங் முறையையும் சிதறாமல் பகுதிகளாக சாமர்த்தியமாக நகர்த்துவதற்கான கட்டமைப்பு சிக்கலை தீர்ப்பது ஆகும். அவர் தனது புதிய கனசதுரத்தை முதன்முதலில் உருவாக்கிய பிறகு அதை மீட்டெடுக்க முயற்சிக்கும் வரை தான் ஒரு புதிரை உருவாக்கிவிட்டோம் என்பதை உணரவே இல்லை.
அவருடைய மாணவர்கள் அவரையும் அறியாமலேயே அதாவது அவருக்கு தெரியாமலேயே பல முறை. அவர் வைத்திருந்த மாதிரிகளை எடுத்து விளையாட தொடங்கியதை ஒரு நாள் கவனித்தார் ரூபிக். 1974 ஜனவரியில் ஹங்கேரியில் தனது மேஜிக் க்யூபிற்க்கு ஒரு காப்புரிமைக்காக விண்ணப்பித்தார். 1977இன் பிற்பகுதியில் புடா பெஸ்ட் பொம்மை கடைகளில் 15 கியூப்களை அவர் விற்பனைக்கு வைத்து முயற்சி செய்தார். கடுமையான தோல்வி சோவியத் ஆளுகைக்கு கீழிருந்த ஹங்கேரியின் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு கியூபை உலகளவில் அறிமுகம் செய்ய முடிவு செய்தது.
ஆரம்பத்தில் மேஜிக் கியூபு அங்கேரியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் சர்வதேச பொம்மை கண்காட்சியில் லண்டனில் ஆயிரத்துள் 1980ல் ஐடியல் நிறுவனம் தானே தயாரித்த ஒன்றை காட்சிக்கு வைத்து. சர்வதேச விற்பனையை தொடங்கியது. இவற்றை உருவாக்குவது என்பது. எந்த நாட்டிற்காக அதை உருவாக்குகிறோமோ அந்த நாட்டை பொறுத்து வேறுபடுத்துவது என்று சர்வதேச பொம்மை வியாபாரிகள் முடிவு செய்தார்.
அதில் மிகவும் பிரபலமானது தெளிவான பிளாஸ்டிக்கை ஆனால் அட்டை அமைப்புகளுடன் பயன்படுத்தப்பட்டு பாதி ஸ்டிக்கர்களாகவும் பாதி பிளாஸ்டிக் ஆகவும் பாதி அட்டையாகவும் பயன்படுத்துகின்ற ஒரு புதியமுறையை அறிமுகம் செய்ததால் மேஜிக் யூபி எனப்படும். இந்த ரூபி கியூபு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. இல் திவாஷிங்டன் போஸ்ட்ஃப் துரித உணவை போல. ரூபிக்ஸ் க்யூப் விற்பனை ஆகிறது என்று எழுதியது.
அதே ஆண்டில் கின்னஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் ஏற்பாடு செய்த ஸ்பீட் கியூபில் சாம்பியன்ஸ்ஷிப் எனும் போட்டி நியூச் என்கிற ஊரில் நடத்தப்பட்டது. சயின்டிபிக் அமெரிக்கன் இதழில் 1981ல் ஏப்ரல் மாதம் அட்டைப்பட கட்டுரையாக இது இடம் பெற்றதால் உலகளாவிய அறிவியலாளர்களின் கவனத்தை பெற்றது. நியூ செயன்ட்டிஸ்ட்ஸ் என்கிற இதழ் உலகம் முழுவதும் கோடைக் காலத்தின் அறிவியல் பயிற்சி முகாம்களுக்கு மேஜிக் கியூபு அறிமுகம் செய்தது. இன்னொரு முக்கியமான திருப்புமுனையாகும். பெரும்பாலான மக்கள் இரண்டு அல்லது மூன்று பக்கங்களை மட்டும் தான் தீர்க்க முடிந்தது. 1982-ல் முதல் ரூபிக்ஸ் க்யூப் உலக சாம்பியன்ஷிப் போட்டி பேரா ரூபிக்ஸின் சொந்த ஊரான புடா பெஸ்ட்லேயே நடத்தப்பட்டது. ரெண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு வரை இந்த போட்டி ஒரு வருடம் விடாமல் தொடர்ந்து நடைபெற்றதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அறிவிக்கிறது.
ரூபிக்ஸ், க்யூப் கணித குழு கோட்பாட்டின் அடிப்படையை வைத்து இயங்குகிறது. அது சில அல்காரிதம்களை கண்டறியவும் உதவியுள்ளது. ரூபிக்ஸ் க்யூபை தீர்த்து வைப்பது என்பது வண்ணங்களை ஒரே ஒரு சதுரத்தில் அடக்குவது என்பதை மீறி எந்த வண்ணம் எந்த வண்ணத்துக்கு எதிரானது என்பதை புரிந்துகொள்வதில் தான் அடங்கியுள்ளது. இன்று மனித நுண்ணறிவு உளவியல். அதாவது இயற்கை நுண்ணறிவு என்பதன் அடிப்படைகளை புரிந்து கொள்வதற்கு. இந்த க்யூப் விளையாட்டு உதவுகிறது.
செயற்கை நுண்ணறிவின் தீர்வுகள் க்யூப் விளையாட்டின் அடிப்படைகளை உள்வாங்கிக்கொண்டு செயல்படுத்த கட்டளைகள் பிறப்பிக்கப்பட்ட பொழுது. அவைகளால் மனித நுண்ணறிவை வெல்ல முடியவில்லை. என்கிற இடம் எட்டப்பட்டதால் ரூபி க்யூப்க்கான உளவியல் ரீதியிலான முக்கியத்துவம் பல மடங்கு அதிகரித்தது.
1974-ல் பேராசிரியர் ரூபிக் இதை கண்டுபிடித்த பொழுது அதை எப்படி தீர்ப்பது என்று அவருக்கே தெரியவில்லை. ஆறு வண்ண பக்கங்கள் 21 துண்டுகள். ஐம்பத்தோரு, வெளிப்புற மேற்பரப்புகள். 43 டிரில்லியன் சாத்தியங்கள் என்று ரூபிக்ஸ் கனசதுரத்தின் நிலை உலகை அதிர்ச்சியுற வைத்தது. ஆனால் 1981ல் 12 வயது ஆங்கில பள்ளி மாணவன் எழுதிய ரூபிக்ஸ் க்யூப்பை தீர்ப்பதற்கான வழிகாட்டி என்கிற ஒரு புத்தகம் ஒன்னரை மில்லியன் பிரதிகள் விற்பனையாகி ரூபிக்ஸ் க்யூப் விற்றதை விட அதிகம் விற்பனையான அசுர சாதனை படைத்தது.
இதுவரை தயாரிக்கப்பட்ட மிகவும் விலை உயர்ந்த ரூபிக்ஸ் க்யூப் என்பது டையமன்ட் கட்டர்ஸ் இன்டர்நேஷனல் 1995-ல் உருவாக்கி காட்சிக்கு வைத்த வைரம் ஆகும். அதன் விலை ஒன்றரை மில்லியன் டாலர்கள் உலகசாதனை. 2015-ல் கோலின் பர்னஸ் என்பவரால் எட்டப்பட்ட 5.25 வினாடிகளில் கனசதுரத்தை மீட்டுகின்ற சாதனை ஆகும். சீனாவை சேர்ந்த ரோசீ லைவ்ன் மூன்றே வயதில் இந்த க்யூபை முழுவதுமாக தீர்த்து இன்னொரு உலக சாதனையை படைத்திருக்கிறார்.
ரூபிக்ஸ் க்யூபின் உச்சநிலை என்று எடுத்துக்கொண்டால் பண்ணிரெண்டு பேர் சேர்ந்து நியூயார்க் நகரில் கண்களை கட்டிக்கொண்டு இதை தீர்த்த ஒரு அசுர சாதனையாகும். இந்த சாதனை 2014ல் நிகழ்த்தப்பட்டது. 2019 ஆம்ஆண்டில் உலகிலேயே மிகப்பெரிய ரூபிக் கியூபை டோனிஃபிஷர் என்பவர் வடிவமைத்தார். இதன் உயரம் ஆறு அடி. இதனை ஒருவர் அல்ல. மூன்று பேர் சேர்ந்து தூக்கி செயல்படுத்தி ஒரு பயன்படும் க்யூபாக விளையாட முடியும். இப்படி இணையம் முழுவதும் (அதையும் தாண்டி) பல நூறு தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன.
மேஜிக் க்யூப் உருவாக்கிய பேராசிரியர். ரூபிக் தன்னுடைய இந்த கண்டுபிடிப்பின் மூலம் தன்னை உலக பிரசித்தி பெற்ற ஒருவராக கருதிக்கொண்டாலும். தற்போது அவர் ஜூடிக்பால்கார் ஃபவுண்டேஷன் என்றழைக்கப்படுகின்ற ஒரு அறிவியல் அமைப்பின் மூலம் மனிதர்களிடையே. அறிவியல் விழிப்புணர்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் பிரம்மாண்ட பணியில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார். 1944-ல் இரண்டாம் உலகப்போர், உச்சத்தில் இருந்த பொழுது அவர் புடாபெஸ்ட்இல் பிறந்தார். விமான ஓட்டியின் மகனான அவர் தன்னுடைய தாய் மைக்ஜோல்னா எனும் கவிஞரை தன் வழிகாட்டியாகக் கொண்டார். சிறுவயதிலிருந்தே பாராசூட்டில் பறப்பதை தன் வழக்கமாக வைத்திருந்த ரூபிக் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வி முடித்தார்.
அதே கல்லூரியிலேயே பேராசிரியர் ஆனார். கல்லூரியில் தன்னுடைய மாணவர்களை ஏதாவது ஒரு வேலையில். பிசியாக வைத்திருக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடுதான். இந்த ரூபி க்யூபைதான். தயாரித்ததாக அவர் சிஎன்என் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்… உலக அளவில் கணித அறிவின் அவசியத்தையும் நுண்ணறிவின் வளர்ச்சியையும் மனிதனின் ஆக்கபூர்வமான ஒற்றை சிக்கலை நோக்கிய முழு கவன ஈர்ப்பையும் மூன்றையும் ஒரு நேர்க்கோட்டில் அமைப்பதற்காக க்யூப் உலகெங்கும் இன்றும் மாணவர்களுக்கும் பெரியவர்களுக்கும் பயன்படுகிறது.
பேராசிரியர் ரூபிக் ஸ்டெம் எனப்படும் கணிதம், பொறியியல் தொழில்நுட்பம், அறிவியல் சார்ந்த கல்வியின் மிக முக்கிய பங்கேற்பாளராக இருக்கிறார். சிறு வயதில் தன்னுடைய தந்தை தனக்கு மாதந்தோறும் பரிசளித்த கணக்கு புதிர்கள் சம்பந்தமான புத்தகங்களின் வாசிப்பே தன்னை ஒரு கண்டுபிடிப்பாளராக மாற்றியது என்பது பேராசிரியர் ரூபிக்கின் மிக முக்கியமான கருதுகோள் ஆகும்.
ஆனால் ரூபிக் கியூபை வைத்து கல்லூரி நாட்களில் என் விடுதி தோழர்கள், உலகிலேயே அப்போது யாருக்கும் தோன்றாத புதியவகை விளையாட்டு தீர்வை கண்டுபிடித்தனர். (பேராசிரியர் ரூபிக்கிற்கு தெரியவேண்டாம் ப்ளீஸ்) கியூபை உடைத்து துண்டு துண்டாக்கி மறுபடி இணைக்கவேண்டும். நேர்மையாக திருப்பி நகர்த்தி வண்ணங்களை அடைவது எல்லாராலும் முடியவில்லை.
எங்களில் பலரும் ஒரு பக்கத்தை அடைந்தோம். ஆனால் உடைத்து சில்லு சில்லாக ஆக்கி இணைத்தல் (அதற்கும் பார்வை கைவேலை ஒருங்கிணைப்பு திறன் வேண்டுமே,,,, ஹி….ஹி) கூடி வண்ணங்களை கச்சிதமாக பெற்று தீர்வை அடையலாம், எனவே உடைத்து சேர்க்கும் கியூப் போட்டி என்பதே எங்கள் 1980களின் கல்லூரி கால சாம்பியன் ஷிப்பாக இருந்தது… இதை சாட் ஜி.பி.டி.யால் கூட செய்யமுடியாது! (நாங்களும் அப்படித்தான் ஆடுவோம் என்போர் கை தூக்குங்க).
சமீபத்தில் ஒற்றை கையால் கியூபை தீர்க்கும் போட்டி பற்றி படித்தேன் ஜெர்மனியில் கியூபை கச்சிதமாக தீர்த்து அசத்தும் ரோபாட் கூட வந்துவிட்டது. ரூபிக் கியூபின் 50வது ஆண்டில் கியூபை(நேர்மையாக) தீர்த்து அடைபவர்களோடு உடைத்து (சில்லு சில்லாக்கி) இணைப்பவர்களையும் சேர்த்து வாழத்துவோமாக…
எழுதியவர்:
ஆயிஷா இரா.நடராசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.