பிஎம்-கேர்ஸ் நிதியம்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு (தமிழில் ச.வீரமணி)

பிஎம்-கேர்ஸ் நிதியம்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது – பிரதமர் அலுவலகம் அறிவிப்பு (தமிழில் ச.வீரமணி)

 

பிஎம்-கேர்ஸ் நிதியம், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் வராது என்றும், எனவே அதன் விவரங்களை அளிக்க முடியாது என்றும் பிரதமர் அருலுவலகம் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 குரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதற்காக பிரதமர் அலுவலகத்தின் சார்பில் பிஎம்-கேர்ஸ் நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டு அதன்கீழ் பல கோடி ரூபாய் வசூல் செய்யப் பட்டிருக்கிறது. இதன் கௌரவ தலைவராக (ex-officio chairman) பிரதமர் இருந்தபோதிலும், மேலும் மூன்று மத்திய அமைச்சர்களுறும் இதன் அறங்காவலர்களாக இருக்கிறார்கள்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் ஏப்ரல் 1 அன்று ஹர்ஷா கண்டுகுரி (Harsha Kandukuri) என்னும் பெங்களூர், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக மாணவர், கோரியிருந்தார். இதற்கு பிரதமர் அலுவலகம், இந்நிதியம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் 2(எச்) பிரிவின்கீழ் பொது அதிகாரக்குழுமல் (public authority) இல்லை என்றும், எனவே விண்ணப்பதாரருக்குத் தகவல்களை வெளிப்படுத்த முடியாது என்றும் கூறியிருக்கிறது.

PM-CARES Fund 'Not a Public Authority', Doesn't Fall Under RTI Act ...

இந்த நிதியம் மார்ச் 28 அன்று துவங்கப்பட்டது. கோவிட்-19 தொற்று தொடர்பாக அவசர நிலை எதுவும் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்காக என்று அப்போது கூறப்பட்டது. இந்த நிதியத்திற்கான அறக்கட்டளைக்கு பிரதமர் கௌரவ தலைவராகவும், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறங்காவலர்களாகவும் நியமிக்கப்பட்டார்கள்.

இந்த நிதியத்தின்கீழ் சுமார் 6,500 கோடி ரூபாய் அது உருவாக்கப்பட்ட முதல் மாதத்திலேயே வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுவரை பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலாகியிருக்கிறது. தி பிரிண்ட் இதழில் வந்துள்ள செய்தியின்படி, இதில் பெரும்பகுதி தொகை கார்ப்பரேட்டுகளிடமிருந்தும், பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்தும், மத்திய அமைச்சகம் மற்றும் துறைகளிலிருந்தும் வந்திருக்கின்றன. மத்திய எரிசக்தி மற்றும் மறுசுழற்சி எரிசக்தி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து 925 கோடி ரூபாய் ஏப்ரல் 3 அன்று வந்திருக்கிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆயிரம் கோடி ரூபாய் அளித்திருக்கின்றன.

எனினும்,  பிரதமர் அலுவலகம் மேற்கண்டவாறு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் தகவல் கோரிய ஹர்ஷா கண்டுகுரிக்கு, தகவல்களைத் தரமுடியாத என்று பதிலளித்திருக்கிறது.

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக  ஹர்ஷா கண்டுகுரி அறிவித்திருக்கிறார்.

(நன்றி: தி ஒயர்)

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *