நீட்டைப் பூட்டு.. பிள்ளைகளைத் திற… – மு.சரவணக் குமார்

ஆதிக்க சதிவலையின்
முறுக்கு நூலில் சிக்கி

எத்தனை உயிர்கள் பலியாகுமோ?!
நீட் எமனால்..

கேட்டுக்கு வெளியே நிறுத்தும்
நீட் தேர்வை சாமானியர்கள்
எத்தனைமுறை எழுதினாலும்
வாழ்க்கையில் தேரமுடிவதில்லை..

அவசியமான தேர்வென்றால்
அரசியலுக்கு இல்லையேயென்று
கழுத்து நரம்புகள்
புடைத்து வீங்கினால்
சுருக்கிலிடுகிறது ஆண்டைகளின் முந்நூல்..

As Centre pushes for JEE, NEET exams, student bodies go on protest - The  Daily Guardian

அசுர ஓநாய்கள்
வெள்ளாடுகளைக்
காவு கொள்கின்றன..
தொட்டில் சேலையே
தூக்குக் கயிறாய்
மாறிப் போகிறது..

பிள்ளைகளின் கழுத்தை அறுத்த
நீட் வலையின் பின்னலறுக்க
ஒடுங்கிய கைகள் உயர்ந்தெழும்
கொதித்தடங்கிய சாம்பலும்
உயிர்த்தெழும் ..

நீட்டைப் பூட்டுவோம்..
பிள்ளைகளைத் திறந்திடுவோம்…

— சரகு.

முகவரி: 
மு.சரவணக் குமார், 
31 பெரியண்ண வீதி, 
ஈரோடு-1.