Poem by Duraivasantharasan துரைவசந்தராசன் கவிதை

துரைவசந்தராசனின் கவிதை



‍அதோ
விசில்சத்தம் கேட்கிறது.
“காலங்காத்தால வந்துட்டான்.
வேலையே ஆகலை.
குப்பையெங்கே சேர்றது?”
முகக்கவசம் அணிந்தபடி
ஒவ்வொரு வீட்டிலிருந்தும்
குப்பைகள் நீண்டன
ஆறடிக்கு அப்பாலிருந்தும் மூக்கை மூடியும்!
வாங்கிய குப்பைகளைத் தரம்பிரித்துப்
பக்கவாட்டுப் பைக்குள் கொட்டிக்கொண்டிருந்தது
கிளவுஸ் போட்ட கைகள்.
குப்பை பக்கெட்களைக் குளிக்கவைத்து
எச்சரிக்கையாக
வெயிலில் காயவைத்தன வீடுகள்!
இன்னும் ஆ….று…வீடுகள் ….. பாக்கி.
பசிவயிற்றைக்கிள்ளியது ஜோசப்புக்கு…
கிளவுசைக் கழற்றி சைக்கிளில் மாட்டியவன்
அள்ளியள்ளித் தின்றான்
பழையதை ஊறுகாயோடு!
பின்னங்கால் பிடறிபட
ஓடிக்கொண்டிருக்கிறது
கொராணா.
மிதிக்கத் தொடங்கினான் குப்பைவண்டியை.
இன்னும் பாக்கி ஆறே வீடுகள்தாம்.
மீண்டும்….
விசில்சத்தம் கேட்கிறது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *