கவிதை Poem கவிதைகள்

உங்கள் மீது கவிழ்க்கப்பட்ட
இந்த இரவிலிருந்து
விரைவாய் வெளியேறிவிடுங்கள்
தார் கலவையைவிட
தடித்திருக்குமதை
குழந்தையின் நகங்களால் சுரண்டிக்கொண்டிருக்காதீர்கள்
உங்களிடம் நிறைய தீக்குச்சிகள்
இருக்கின்றன
பற்ற வைக்க வைத்திருக்கும்
பட்டைகளை அவர்கள்
நமத்துப்போகச் செய்கிறார்கள்
அவர்கள் தந்திரக்காரர்கள்
உங்கள் பகலையும் கொளுத்தி
புகையால் மறைக்கிறார்கள்
காலத்தை திரித்து எழுதுபவர்களின்
கொடுங்கோன்மைகள்மீது
வழக்குகள் குவிகின்றன
நீதிமான்கள்
வேறொரு கனவுக்குள் லயித்து
பகலின் இருட்டுக்கு காரணம்
நீங்கள் கண்களை மூடியிருக்கிறீர்களென்று
வழக்குகளை
தள்ளுபடி செய்கிறார்கள்
உங்களுக்கு வேறு வழியில்லை
இரவை எரித்தும்
பகலை அணைத்தும்
வெளிச்சமாக்க வேண்டும்
பகலை எரித்துக்கொண்டிருக்கும்
கங்குகளை மொத்தமாய் வாரி
இரவின் மீது வீசியெறிய வேண்டும்.

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *